Thursday, December 10, 2015

சூர்யா… கொஞ்சம் ஸ்டாப்யா! இது பாலா கட்டளை!

செஞ்சோற்று கடனையாவது வடிச்சுக் கொட்டி கழிச்சுடலாம்! நான்தான் மார்க்கெட்டை தூக்கிவிட்டேன்னு சொல்ற கடன் இருக்கே? அதை எந்த ஹீரோவாலும் அடைக்க முடியாது. அப்படிதான் ஒரு பெரும் சுழலில் சிக்கியிருக்கிறார் சூர்யா. நந்தா வெளியாகிற வரைக்கும் சூர்யாவை ஒரு வெந்து முடியாத வெந்தயத் தோசை போலவே பாவித்து வந்தது திரையுலகம். அந்த பால் வடியுற முகத்துக்கு ஆக்ஷன் செட்டாவாதே என்று முடிவெடுத்த இயக்குனர்கள், அதற்கேற்ற ரோல்களையே கொடுத்து வந்தார்கள். நல்லவேளை… ராமராஜன் பால் கறந்த மாதிரி கேரக்டர்களில் அவர் நடிப்பதற்கு முன் பாலாவின் பார்வை பட்டது. நந்தா வந்தது.

கட்… அதற்கப்புறம் சூர்யாவே நினைத்தாலும், ஆக்ஷன் குறைவான வேடங்களில் நடிக்க முடியாதோ என்கிற அளவுக்கு அவரை தள்ளிக் கொண்டு போகிறது விதி. இன்னும் சில வாரங்களில் திரைக்கு வரப்போகும் பசங்க 2 வேண்டுமானால் அந்த ஆக்ஷன் சுழலில் ஒரு ஆல விழுதை போடலாம்! இது ஒருபுறமிருக்க, சூர்யா நடித்து வரும் 24 என்ற படம் பொங்கல் ரிலீஸ் என்றுதான் முதலில் கணக்கிடப்பட்டதாம்.

“வர்ற பொங்கலுக்கு நம்ம தாரை தப்பட்டை வருதேப்பா… கொஞ்சம் தள்ளி வாயேன்” என்று பாலா கேட்டுக் கொள்ள, அய்யா கட்டளை. அடியேன் சரணம் ஆகிவிட்டார் சூர்யா. ஒரு ஹீரோவுக்கும் டைரக்டருக்குமான மட்டு மரியாதை இப்படியல்லாவோ இருக்க வேண்டும்!

வெள்ளம் வடிந்த வீடு... பாதுகாப்புக்கு 10 டிப்ஸ்!


கனமழையினால் கனத்துப்போயிருக்கிறது மக்களின் உள்ளம். உயிரைக் காத்துக்கொண்டாலும் உடைமைகளை இழந்தவர்கள் பலபேர். இழந்த உடைமைகளுக்காக இன்னும் பல வருடங்கள் கடுமையாக உழைக்கவேண்டிய நிலைமையை ஏற்படுத்தி சென்(றுகொண்டிருக்)றிருக்கிறது வெள்ளம்.

உடைமைகளை இழந்தபின் எஞ்சியிருப்பது இப்போது வீடு மட்டுமே. வெள்ளம் வடிந்து மக்கள் தத்தம் வீடுகளுக்கு திரும்பும்முன்  மேற்கொள்ளப்பட வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த  'டிப்ஸ்' இங்கே....

1. வெள்ள பாதிப்பிற்குள்ளான வீட்டிற்கு முதலில் ஆண்கள் நுழைந்து சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடவேண்டும். ஓரளவு வீடு சுத்தமானபின்னரே பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் என அடுத்தடுத்து வீட்டிற்குள் அழைக்கப்படவேண்டும்.

2. வீட்டிற்குள் நுழைந்ததும் எல்லா கதவு, ஜன்னல்களையும் திறந்து முடிந்த அளவு இயற்கையான காற்று, வெளிச்சம் உள்ளே புக அனுமதியுங்கள். காற்றோட்டம் உள் நுழைந்தால் தேங்கியிருந்த மழைநீரினால் உருவான விஷக்காற்று, அருவெறுப்பான நாற்றம் வெளியேறும். நீங்கள் உள்ளே ஆபத்து மற்றும் எந்த சங்கடங்களுமின்றி சுத்தம் செய்ய முடியும்.

3. வீட்டிற்குள் நுழைந்தபின் மின் இணைப்பு இருப்பதாக அறியவந்தாலும் தயவுசெய்து அவசர கதியில் விளக்குகள் / மின் விசிறிகளின் சுவிட்சுகளை ஆன் செய்யாதீர்கள். மின்கசிவு இருந்தால் ஷாக் அடிக்கக் கூடும். மின்சாரப் பொருட்களை இயக்குவதற்கு முன் எங்காவது மின்கசிவு இருக்கிறதா என்று சோதித்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு அதுபற்றிய அறிவு இல்லையென்றால் செலவைப்பற்றி கவலைகொள்ளாமல் ஒரு எலக்ட்ரி ஷியன் கொண்டு சரிபார்ப்பது நல்லது. நீங்களே செய்வதாக இருந்தால் தேவையான உபகரணங்களுடன் பாதுகாப்பாக (காலணி, கையுறை, மரநாற்காலி போன்றவை) செய்யவும்.

4. வீட்டிற்கு குடியேறியதும் அருகிலுள்ள சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனையில் தேவையான காய்ச்சல்/ பேதி மற்றும் தற்காப்பு மாத்திரைகளை வாங்கிக் கொள்ளுங்கள். தேவையென்றால் மருத்துவர் அறிவுறுத்தலின்படி தடுப்பூசிகள் தவறாது போட்டுக் கொள்ளுங்கள்.

5. இரண்டொரு நாட்களுக்கு மிக எளிமையான உணவை உட்கொள்ளுங்கள். அரை வயிற்றுக்கு மட்டுமே சாப்பிடுங்கள். ஒரு பெரிய அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்திருக்கிறீர்கள். உங்கள் மனமும் உடலும் சகஜ நிலைக்குத் திரும்ப அவகாசம் அளியுங்கள். 'பாதுகாப்பாக இருக்கிறோம். இனி ஒரு பிரச்னையுமில்லை' என்ற நம்பிக்கையை குடும்பத்தினரிடம் ஏற்படுத்த முயற்சியுங்கள்.

6. பாதிப்பிற்கு முன் வீட்டில் வாங்கி வைத்திருந்த உணவுப்பொருட்கள், மளிகைப் பொருட்கள் மற்றும் காய்கறிகளை தவிர்ப்பது நல்லது. நல்லநிலையில் இருப்பதாக தெரிந்தாலும் கெட்டிருக்கிறதா என்று சோதித்து விட்டுப் பயன்படுத்துங்கள்.  இலேசான ஐயம் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்த வேண்டாம்.

ஃப்ரிட்ஜ் நல்லநிலையில் இருந்தாலும் அதை ஒரு முறை சர்வீஸ் செய்துவிட்டு பயன்படுத்தவும். காரணம் மின்வசதியின்றி மூடப்பட்ட நிலையில் இருந்ததால்,  அதில் பரவியிருந்த வாயு வேதிமாற்றத்தினால் துர்நாற்றத்தையும் விஷவாயுவையும் உருவாக்கியிருக்கலாம்.

அதனால் கண்டிப்பாக இதில் வைத்துவிட்டுப்போன பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். அவை நிச்சயம் கெட்டுப்போயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

7. முழுகிக் கிடந்த வாகனங்கள் காப்பீடு செய்யப்பட்டிருந்தால், காப்பீட்டு நிறுவனத்திற்குத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் இயக்கிய பிறகு பழுதுபட்டதாகத் தெரியவந்தால், அவற்றிற்கான காப்பீடு கிடைக்காமல் போய்விடலாம்.

 வெள்ளத்தில் மூழ்கிய கார், பைக்குகளுக்கு இன்ஷூரன்ஸ் கிடைக்குமா?
கார், பைக் ஸ்டார்ட் ஆனா இன்ஷூரன்ஸ் கிடையாது!

தமிழ்நாட்டில் தொடர்ந்து கடந்த பல நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னை நகரமே தண்ணீரில் தத்தளிக்கின்றது. இந்த மழையினால் கார், பைக் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளன. சில இடங்களில் கார்களும், பைக்குகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு குப்பை போலவும் காட்சி அளிக்கின்றன.

இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கிய கார், பைக் மற்றும்  வீடுகளுக்கு இழப்பீடு கோர முடியுமா? இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை எப்படி அணுகுவது? என்பது குறித்து வழக்கறிஞர் மற்றும் இன்ஷூரன்ஸ் நிபுணர் திருமலை அவர்களிடம் கேட்டோம். அவர் கூறியதாவது:
இன்ஷூரன்ஸ் செய்யப்பட்ட எந்த ஒரு பொருளாக இருந்தாலும் அதை பத்திரமாக பாதுகாப்பது நம்முடைய கடமை. உதாரணத்திற்கு இன்ஷூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது என்ற காரணத்தினால் வாகனத்தை ரேஸில் ஈடுபட்டு பாதிப்பிற்கு உள்ளானால் அதற்கு க்ளெய்ம் கிடையாது. ஏனெனில் நியாயமான பாதுகாப்பை அந்த நபர் எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் அதற்கு க்ளெய்ம் கிடைக்காது.

போட்டோ எடுங்க

ஆனால் மழையால் பாதிக்கப்பட்ட பைக், கார்களுக்கு இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் கிடைக்கும். அதற்கு கார், பைக் போன்ற வாகனங்கள் மழை நீர், வெள்ள நீரில் சிக்கி பாதிப்புக்கு உள்ளானால் முதலில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட கார் அல்லது பைக் என எதுவாக இருந்தாலும் அதை ஒரு போட்டோ எடுத்து இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் இமெயில் முகவரிக்கு அனுப்பலாம்.
இமெயிலில் "என்னுடைய வாகனம் XXX இந்த பாலிசியில் கவராகியுள்ளது. இப்பொழுது (தேதி, நேரம் குறிப்பிட்டு) மழைநீரில் மூழ்கி பழுதடைந்து நிற்கிறது. ஸ்பாட் சர்வே செய்து இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் வழங்க ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்." இந்த இரண்டு வரிகளிலேயே இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் பெறுவதற்கான நடவடிக்கை தொடங்குகிறது.

க்ளெய்ம் கிடையாது

ஆனால் சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள், வெள்ளம் அல்லது மழை நீரில் பாதிப்படைந்த காரை இயக்கி, அதனால் இன்ஜின் சேதமடைந்தால் க்ளெய்ம் தரமாட்டார்கள். இதை தங்களது விதிகளில் குறிப்பிட்டுருப்பார்கள். ஏனெனில் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும் க்ளெய்ம் பொறுத்தவரை அவர்களுக்கு முதல் மூலக்காரணம் எதிர்பாராத செயலாக இருக்க வேண்டும். ஆனால், பாதிக்கப்பட்டவர் வாகனத்தை இயக்க செய்தால் அது திட்டமிட்ட செயலாக மாறிவிடுகிறது.
எனவே வாகனம் எந்த நிலைமையில் இருக்கிறதோ அதே நிலைமையில் ஒரு போட்டோ எடுத்து வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது அவர்களுடைய இமெயில் முகவரிக்கு தெரியப்படுத்துவதே நல்லது.
இப்போது சென்னையில் பெரும்பாலான கார், பைக் மழை நீரினால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மழை நீரினால் கார், பைக் பாதிப்படைந்துள்ளது என்ற காரணத்தினால் க்ளெய்ம் வழங்குவார்கள்.

இமெயில் அனுப்புங்க

ஒவ்வொரு இன்ஷூரன்ஸ் பாலிசியிலும் அந்த இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை தொடர்பு கொள்ளக்கூடிய போன் நம்பர் இருக்கும். அந்த நம்பரில் தொடர்பு கொண்டு இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் குறித்து தெரியப்படுத்துங்கள் அல்லது அந்த நிறுவனத்தின் பொதுவான இமெயில் ஐடி-க்கு தெரியப்படுத்தலாம்.
இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு இழப்பீடுகளைக்கோர எழுதித்தான் தர வேண்டும் என எந்த ஒரு அவசியமும் இல்லை. இப்பொழுது உள்ள வசதிக்கு இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் செல்போன் நம்பருக்கே வாட்ஸ்அப் மூலமாக பாதிக்கப்பட்ட வாகனத்தை போட்டோ எடுத்து தெரியப்படுத்தலாம். வீடு பழுதடைந்து இருந்தாலும் அதையும் ஒரு போட்டோ எடுத்து இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு தெரியப்படுத்துங்கள்.

வெளியே பாதிப்படைந்தால்?

வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் மீது மரங்கள், மின் கம்பங்கள் விழுந்து சேதம் ஏற்பட்டாலும் க்ளெய்ம் கிடைக்கும்.
வாகனம் வீட்டில் பாதிப்படைந்து இருந்தால் மட்டுமே க்ளெய்ம், வேறு ஏதாவது ஒரு இடத்தில் மழை நீர் அல்லது வெள்ளத்தால் பாதிப்படைந்து இருந்தால் க்ளெய்ம் கிடையாது அப்படி எதுவும் இல்லை. வாகனம் பாதிப்படைந்ததற்கு மூலக்காரணம் எது என்று ஆராய்ந்து சரியான காரணமாக இருக்கும் பட்சத்தில் நிச்சயம் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் க்ளெய்ம் வழங்குவார்கள்.

ஸ்பாட் போட்டோ

இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் குறித்து  இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஒருமுறை தெரியப்படுத்திய பின்னர், பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களுடைய வாகனம் எங்கு உள்ளதோ அந்த இடத்திற்கே சென்று அந்த நிறுவனத்தின் சர்வேயர் பார்வையிடுவார்.
இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்-க்காக வாகன விபத்தின்போது 'ஸ்பாட் போட்டோ' எடுப்பார்கள். அதேபோல் மழைநீரில் பாதிக்கப்பட்ட வாகனத்தை ஒரு ஸ்பாட் போட்டோ எடுத்து வைப்பது நல்லது. இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சர்வேயர் ஸ்பாட் போட்டோ மற்றும் பாதிப்பை ஆராய்ந்து பாதிப்படைந்தவர்களுக்கு க்ளெய்ம் வழங்குவார்கள்.

டோயிங் சார்ஜ்

இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் ஆனது மழை வெள்ளத்தில் வாகனத்தின் பாதிப்பு மற்றும் தேய்மானத்தைப் பொறுத்து  வழங்குவார்கள். இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்-ல் டோயிங் சார்ஜ்-ம் கிடைக்கும். அதாவது இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சர்வேயர் பாதிப்படைந்த வாகனத்தைப் பார்த்து அதை எடுத்து செல்வதற்கான செலவும் இன்ஷூரன்ஸ் க்ளெய்ம்-ல் கிடைக்கும்.

பாலிசிதாரரின் கடமை

சென்னையில் சில இடங்களில் வெள்ளம் வடிய இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும். ஆனாலும் பாதிப்பு இருக்கும்போதே பாதிக்கப்பட்டவர்கள் கார், பைக் அல்லது வீட்டின் தற்போதைய நிலைமையை ஒரு போட்டோவாக எடுத்து வைத்திருங்கள்.
தண்ணீரில் மூழ்கி இருக்கும் வாகனத்தை, தண்ணீர் வடிந்தவுடன் பாதிக்கப்பட்டவர்கள் அதை ஸ்டார்ட் செய்தால் க்ளெய்ம் கிடைக்காது. ஆகையால் வாகனத்தை இயக்காமல் இருப்பதே நல்லது. க்ளெய்ம்-க்கு அடிப்படையே எதிர்பாரத செயலாக இருக்க வேண்டும் என்பதுதான்.

உடனே அணுகுங்க

க்ளெய்ம் பெற பாதிக்கப்பட்டவர்கள் 24 மணிநேரத்திற்குள் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களை அணுக வேண்டும் என்று தெரிவித்து இருப்பார்கள். ஆனால், இப்பொழுது உள்ள சூழ்நிலையில் உடனே அணுக முடியாது.
ஆகையால், இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு ஒரு இமெயில் அனுப்பினாலே போதும். இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் வழங்குவதற்கு உதவிகரமாக ஒரு போட்டோ இருந்தாலே போதும். வேறு எந்த ஒரு ஆவணங்களும் தேவையில்லை. அதற்காக  காலம் கடத்தக் கூடாது. உடனடியாக இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் கோருவதே நல்லது  என்று திருமலை கூறினார்.


8. சுகாதாரத்தின் அடிப்படை கழிவறைகள். அதனால் வீட்டில் குடியேறியவுடன் கழிவறையை உடனே உபயோகிக்காமல் பளீச்சிங் பவுடர் மற்றும் ஆசிட் கொண்டு ஓரிருமுறை கழுவி சுத்தம் செய்தபின் உபயோகிப்பது நல்லது.

9. வீட்டிலிருந்து வெளியேறியதற்கு முன்பு சமையலுக்கு பயன்படுத்தி வந்த சிலிண்டர்கள் நீரில் முழுவதுமாக மூழ்கியிருந்தால் அதை பயன்படுவதை தவிர்க்கவும். சம்பந்தப்பட்ட ஏஜென்சிக்கு தகவல் அளித்து பரிசோதித்தபின்னே பயன்படுத்தவும். முழுமையாக மூழ்காத நிலையில் இருந்தால் அதில் வாயுக் கசிவு இருக்கிறதா என சோதித்தறிந்த பின்னரே பயன்படுத்தவும்.

10. வெள்ளத்தில் இருந்து மீண்டுவிட்டோம் என்ற நம்பிக்கை உங்களுக்கு தெரியவந்ததால் வீட்டிற்குள் நுழைகிறீர்கள். இதே நம்பிக்கை பாதுகாப்பிற்காக உங்கள் வீட்டிற்குள் நுழைந்த பாம்பு, மற்ற பூச்சியினங்களுக்கு எப்போது தெரியவருவது? அதனால் துணிமணிகளை துவைக்கும் முன்பும், உடுத்துவதற்கு முன்னும் அதில் பாம்பு, பல்லிகள் மற்ற சிறுசிறு பூச்சிகள் ஏதேனும் மறைந்திருக்கிறதா என்பதை சோதித்து பார்த்து அணியவும்.

வெள்ளத்திலிருந்து மீண்ட நாம் வேறு எந்த ஆபத்திலும் சிக்காமல் இருக்க கண்டிப்பாக மேற்சொன்ன எச்சரிக்கை நடவடிக்கைகளை கையாளகொள்ளவேண்டும்.

வெள்ளத்திலிருந்து மீண்டுவிட்டோம் என மீண்டும் பழைய கதையை தொடராதீர்கள். வெள்ளத்தில் உங்கள் வீடு சிக்கியதில் உங்களது தவறு ஏதாவது உள்ளதா என்று ஆராயுங்கள். இனிவருங்காலத்தில் அந்த தவறுகளை செய்யக்கூடாது என வீட்டிற்குள் நுழைந்த முதல்நாளே முடிவெடுங்கள்.  இல்லையேல்.. மறுபடியும் ஒருமுறை இதை நீங்கள் படிக்கநேரிடும்...

உங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா? அதை வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!!!

கண்டிப்பாக ஒவ்வொருவரும் பல் சொத்தை பிரச்சனையை சந்தித்திருப்போம். பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இனிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதும், எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும் வாயை நீரில் கொப்பளிக்காமல் இருப்பதும் தான். பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!! இதனால் பாக்டீரியாக்கள் பற்களை சொத்தையாக்கிவிடும். இப்படி சொத்தையான பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், பற்களில் பெரிய ஓட்டை உருவாகி, நாளடைவில் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அதுவே பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். அதற்காக சொத்தைப் பற்களை பிடுங்கி எடுக்க வேண்டும் என்பதில்லை. பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கான எளிய வழிகள்!!! உண்ணும் உணவில் ஒருசில மாற்றங்களுடன், அன்றாடம் ஒருசில பொருட்களைக் கொண்டு பற்களைப் பராமரித்து வந்தால், சொத்தைத் தடுக்கலாம்.


1=ஆயில் புல்லிங்
~~~~~~~~~~~~~~~~~
ஆயில் புல்லிங் என்பது தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 10 நிமிடம் வாயினுள் வைத்து கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதால், வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறி, வாயின் ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் உருவாவதைத் தடுக்கலாம்,

2=கிராம்பு
~~~~~~~~~~~~~
2-3 துளிகள் கிராம்பு எண்ணெயை 1/4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து, காட்டனில் அந்த எண்ணெயை தொட்டு, இரவில் படுக்கும் போது அந்த காட்டானை சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்து தூங்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் விரைவில் குணமாகும்,

3=உப்பு தண்ணீர்
~~~~~~~~~~~~~~~~~~~
அன்றாடம் காலையில் வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, பற்களை துலக்கம் முன் அதனை வாயில் ஊற்றி 1 நிமிடம் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் மூன்று வேளையும் உணவு உண்பதற்கு முன் செய்து வந்தால், பல் சொத்தையில் இருந்து விடுபடலாம்,

4=பூண்டு
~~~~~~~~~~~
3-4 பற்கள் பூண்டை தட்டை, அதில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து, அக்கலவையை பாதிக்கப்பட்ட பற்களின் மீது வைத்து 10 நிமிடம் கழித்து, அக்கலவையை சொத்தைப் பல்லின் மீது அழுத்தவும், இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், சொத்தைப் பற்களை உருவாக்கிய பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு, நாளடைவில் சொத்தைப் பற்களை போக்கிவிடும்,

5=மஞ்சள்
~~~~~~~~~~~~~
மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பற்களில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு, கிருமிகளை அழித்துவிடும்,

6=வேப்பிலை
~~~~~~~~~~~~~~
வேப்பிலை சாற்றினை சொத்தைப் பற்களின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். முடிந்தால் தினமும் வேப்பங்குச்சி கொண்டு பற்களை துலக்கி வந்தாலும், சொத்தைப் பற்களைப் ,

7=உணவுமுறைகளில் மாற்றம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சொத்தைப் பற்கள் உருவாவதற்கு போதிய கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருப்பது மற்றும் கொழுப்பில் கரையாத வைட்டமின்களான ஏ, டி, ஈ, கே போன்றவற்றின் குறைபாடு மற்றும் சில ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பது தான் காரணம். இதற்கு சரியான தீர்வு, நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அன்றாடம் உட்கொண்டு வர வேண்டும்.

8=சர்க்கரையைத் தவிர்க்கவும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுத்திரிக்கரிக்கப்பட்ட சர்க்கரை கலந்த உணவுகளை உட்கொண்டால், கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரித்து, அதனால் பற்களில் சொத்தையும் அதிகரிக்கும். உணவுகளில் இனிப்பு வேண்டுமானால், தேனைக் கலந்து கொள்ளலாம்.

இன்னொரு வடிவேலு ஆகிறாரா கமல்?

சிக்குன எலியை சிதைக்காம விடமாட்டேன்னு ஒரு குரூப் கிளம்பறதும், எலிக்கு நடுவுல ஏதாவது ஒரு பூனை கிராஸ் பண்ணினா, அந்த கோரமான துரத்தலை அதை நோக்கி திருப்பறதும் அரசியல்வியாதிகளின் பொழுதுபோக்கு. அந்த அரசியல் (சாக்)கடையில் எதற்காக எண்ணையை வாங்கி, முகத்தில் தடவிக் கொண்டாரோ தெரியவில்லை… கமலின் முகத்தில் இப்போது டன் டன்னாக வழிசல்!

சிக்குவது அவருக்கு புதுசு இல்லை. பாதம் பணிந்த பெருமாள் சுவாமிகள் பலர் ‘அடுத்த பிரதமர் ஒரு சேலை கட்டிய சீதேவிதான்’ என்று ராத்திரியும் பகலுமாய் கூட்டுப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்க, ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு போன கமல், அட்டை கிழிந்து அதற்குள்ளிருக்கும் தாள்களும் கிழிந்து வெளியே வந்தார். வேறொன்றுமில்லை. அங்கு பேசிய அவர், ‘இந்தியாவின் அடுத்த பிரதமர் வேட்டி கட்டிய ஒரு தமிழராக இருந்தால் நல்லது’ என்று பேசிவிட்டார். அழைத்தவர் வேஷ்டி கட்டிய ஒரு முன்னாள் மத்திய அமைச்சர். அவருக்கு பரிசு தருவதாக நினைத்து, தனது தலையில் விறகை சுமந்தார் கமல். அதற்கப்புறம் இவர் வேட்டி அவிழ்கிற அளவுக்கு ஓட ஓட குதறினார்கள் அரசியல்வியாதிகள். (முட்டாள் அரசியல்வாதிகள்! கமல் பேச்சை அவர் வீட்டு டேப் ரெக்கார்டர் கூட கேட்காது. ‘வேட்டி கட்டியவர்தான் பிரதமராக வருவார்’ என்று அவர் பேசிவிட்டால் அப்படியே நடந்துவிடுமா?)

ஒரு முக்கியமான விழாவுக்கு இவருக்கும் அழைப்பு போனது. போன இடத்தில் உட்கார நாற்காலி கூட தரப்படவில்லை. காலம் அவ்வளவு நாசுக்காக ட்யூஷன் எடுத்தும், இப்போதைய பரீட்சையில் முட்டை வாங்கிவிட்டாரே கமல்?

கடந்த வாரம் வெள்ள நிவாரணம் குறித்து கமல் சில கருத்துக்களை வெளியிட்டுவிட்டு, பின்பு அதை நான் சொல்லவே இல்லை என்று ஜம்ப் ஆகிவிட்டார். ஆனால் உலகம் நம்பினால்தானே? கடந்த ஒரு வாரமாக அவர் வீட்டில் கரண்ட் இல்லை. வீட்டு வாசலில் குவிந்த குப்பைகளை அகற்ற மாநாகராட்சி ஆட்கள் வரவேயில்லை. விட்டால் பாத்ரூம் குழாய்க்குள்ளேயும் ‘பஞ்ச்’ வைத்து அடைப்பார்கள் போலிருக்கிறது. கமல் பேசிய பஞ்ச் சுக்கு இப்படியெல்லாம் குறுக்கே புகுந்து குழாய்ல பஞ்ச் வச்சா ஏரியாவே நாறிப் போகுமல்லவா? போனது…

சர்வ வல்லமை கொண்ட ஒரு அரசு, கமல் சொன்னதை போல பணக்காரரல்லாத ஒரு படு ஏழையை இப்படியெல்லாம் இம்சித்தால், அதைவிட சிறு பிள்ளைத்தனம் வேறொன்று இல்லவே இல்லை! இந்த வீடு இல்லையென்றால் கமலுக்கு ஓசியிலேயே அறை கொடுக்க எத்தனையோ நட்சத்திர குடிசைகள் இருக்கின்றன. அதை யாரால் கட்டுப்படுத்த முடியும்? ஆனால் அரசியலில் படித்தவர்களை விட, பாலகர்கள்தானே அதிகம்? அதனால் இப்படியெல்லாம்தான் நடக்கும்.

இவர் வீட்டை மட்டும் குறி வைத்தால், அது திட்டமிட்டு செய்ததாக ஆகாதா? அதனால் பக்கத்து வீடுகளில் இருக்கும் பஞ்சாபகேசன்களும், பட்டு மாமிகளும் பெருத்த சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள். தண்டனை அவர்களுக்கும்தான். எத்தனை நாள் “எங்க பக்கத்தாத்துலதான் கமல் இருக்கான். பார்க்கும் போதெல்லாம் ஸ்மைல் பண்ணுவான்” என்று பீத்தியிருப்பார்கள். இப்போ அனுபவிக்க வேண்டியதுதான்!

வெள்ளம் வந்து வேதனையில வடியுறோம். எலக்ஷன் வரட்டும்… நாங்க குடிச்ச எல்லா தண்ணியையும் அவங்க கண்லேர்ந்து கழட்றோம் என்று ஆளாளுக்கு, ஆள் காட்டி விரலில் மைக்கு பதில், கோபத்தை வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள். அவர்களின் சப்போர்ட் நியாயமாக கமல் பக்கம் திரும்ப வேண்டும்தானே? அங்குதான் துரதிருஷ்டசாலியாகிறார் கமல். “நீயும்தானே பத்து பைசா தர மனசில்லாமல் வியாக்யானம் பேசுன… வரட்டும். ஏதோ விஸ்வரோகமோ, கஷ்டகாலமோ வருதாமே? அப்ப வச்சுக்கலாம்” என்று குமுறிக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.

விஸ்வரூபம் முதல் பார்ட் வரும்போது, ஆடு யானையை பிரசவித்த கதையாக ஒரேயடியாக இம்சைக்குள்ளாக்கப்பட்டார் கமல். “இந்தியாவை விட்டே போறேன்” என்று அவர் சொன்னபோது, “இந்தா தலைவா… நான் சேர்த்த ஐம்பது… நூறு” என்று அவர் வீட்டுக்கு மணியார்டர் அனுப்பி மனம் குளிர்ந்த ரசிகன் கூட, இப்போது அவர் பக்கம் இல்லை. கமலின் துரதிருஷ்டம் இதுதான்.

தமிழ்சினிமாவும், தமிழ்நாட்டு அரசியலும் வடிவேலுவை கண்டு சிரித்ததைவிட, அவரை அழவிட்டு வேடிக்கை பார்த்ததுதான் அதிகம். அதற்கு காரணம் அரசியல் அல்ல. வடிவேலு எடுத்த முடிவுதான்! கிட்டதட்ட அப்படியொரு வடிவேலுவாகதான் மாறிக் கொண்டிருக்கிறது கமலின் நிலைமை!

நடிகராகவும் இருந்து கொண்டு அரசியலையும் விமர்சிக்க வேண்டும் என்றால், அதற்கு நீங்கள் குறைந்த பட்சம் வாகை சந்திரசேகர் லெவலுக்காவது இறங்கி வரவேண்டும். அதைவிட்டுவிட்டு பரதநாட்டியம் ஒரு காலிலும் பப் டான்ஸ் இன்னொரு காலிலும் ஆடினால் இப்படிதான் கெரகம் தலையை காவு கேட்கும்!

மறுபடியும் ஒரு முறை இந்தியாவை விட்டு போக வேண்டும் என்றால், பிளைட் டிக்கெட், விசாவுக்கெல்லாம் அதிக சிரமம் தேவையில்லை. ஸ்பான்சர் செய்வதற்கு அடையாறின் கரையோர மக்கள் எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள் கமல் சார்.