Thursday, December 10, 2015

கபாலியோடு கைகோர்க்கும் கபிலன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதன்முறையாக இளம் இயக்குனர் ரஞ்சித்துடன் இணைந்துள்ள படம் கபாலி.

ரஞ்சித்தின் முந்தைய படங்களில் பணியாற்றிய பலர் இப்படத்திலும் கைகோர்த்துள்ளனர்.

அந்த வகையில் ரஞ்சித்தின் ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’ ஆகிய படங்களில் பாடல்கள் எழுதிய கபிலன் கபாலியில் ரஜினிக்கு அறிமுக பாடலை எழுதியுள்ளார்.

வழக்கமாக சூப்பர் ஸ்டாருக்கு வைரமுத்து அவர்கள் தான் அறிமுக பாடல்கள் எழுதுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க ஒரு தடவ பல் தேக்கிறது 9 சிகரட்டுக்கு சமம்..மறைக்கப்பட்ட உண்மை

 உங்க டூத்பேஸ்ட் " - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!


" உங்க டூத்பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இருக்கா..? " -னு


சூர்யா கேட்டாரேன்னு அந்த பேஸ்ட் வாங்கி


யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்...


அப்புறம்


" உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா..? " -னு


அனுஷ்கா கேட்டாங்க... அதனால அதையும்


வாங்கினேன்..


( ஹி., ஹி., அனுஷ்கா பீல் பண்ணினா  மனசு தாங்காதுல்ல... )


 சரி மேட்டர்க்கு வருவோம்...




கம்பெனிக்காரன் குடுத்த காசை வாங்கிட்டு அது இருக்கா..? இது இருக்கான்னு கேட்டாங்களே தவிர... அதுல நிக்கோடின் இருக்குன்னு யாருமே சொல்லலை...


என்னாது நிக்கோடினா..?!!


( அடப்பாவிகளா.. நிம்மதியா பல்லு வெளக்க


கூட விட மாட்டீங்களா..?!!! )


DISPAR ( Delhi Institute of Pharmaceutical Sciences & Research )


நிறைய இந்திய டூத்பேஸ்ட்ல நிக்கோடின்


இருக்குன்னு கண்டுபிடிச்சி இருக்காங்க..


( நிக்கோடின் கேன்சரை உண்டாக்கும் )


Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்ப­ட்டு இருக்கு..


ஒரு சிகரெட்லயே 2mg தான் நிக்கோடின் இருக்காம். ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்..


அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... அவ்வ்வ்....!!!


இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்ட நம்ம பத்திரிக்கை , டி.வி சேனல்களோட சேவையை எப்படிதான் பாராட்றது..?


" என்னங்க இது அநியாயமா இருக்கு..?


நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணுது..?"-னு


தானே கேக்க வர்றீங்க..?


ம்ம்... என்னங்க பண்றது..?


"காசுக்காக மக்களுக்கு கவர்மென்ட்டே சாராயம் விக்கிற நாடுங்க இது..




இங்கே போயி நியாயமாவது, தர்மமாவது..!"

நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?

அப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக.. உங்களின் விலைமதிப்பற்ற இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக படிக்கவும்…


மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்:


சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.


சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும். திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும். இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சபடும்.


இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.


மாரடைப்பு பற்றி ஒரு குறிப்பு:


மாரடைப்பின் முதல் அறிகுறி இடது கையில் ஏற்படும் கடுமையான வலி ஆகும். தாடையில் தீவிர வலி ஏற்பட்டாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


மாரடைப்பு வரும்போது பொதுவாக நெஞ்சு வலி ஏற்படாது. குமட்டல் மற்றும் கடுமையான வியர்வையே மாரடைப்பு ஏற்பட பொதுவான அறிகுறிகள் ஆகும். 60% சதவீத மக்கள் தூக்கத்தில் மாரடைப்பு ஏற்படும்போது அவர்களால் எழுந்துகொள்ள முடியாது.


உறக்கத்திலேயே இறந்துவிடுவர். தாடை வலி ஏற்பட்டவர்கள் மட்டுமே அயர்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ள முடியும். ஆகவே எப்பொழுதும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவல்

இதுவரை நீங்கள் மாலையில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை வெறுமனே வேக வைத்து தான் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கைக் கொண்டு வறுவல் செய்து மதிய வேளையில் சாம்பார் சாதம் அல்லது குழம்பு சாதத்திற்கு சைடு டிஷ்ஷாக சாப்பிடலாம். மேலும் குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

சரி, இப்போது அந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 5
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை நீரில் நன்கு கழுவி, குக்கரில் போட்டு போதிய அளவு தண்ணீர் ஊற்றி 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.

விசில் போனதும் குக்கரை திறந்து, கிழங்கின் தோலை உரித்துவிட்டு, பின் வட்ட துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கிவிட வேண்டும்.

பின்பு அதில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை சேர்த்து, அத்துடன் உப்பு, மிளகாய் தூள், சாம்பார் பொடி சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

ஒருவேளை வாணலியில் கிழங்கு அடிபிடிப்பது போன்று தெரிந்தால், எண்ணெய் சிறிது ஊற்றி நன்கு பிரட்டி விட வேண்டும். கிழங்கானது பொன்னிறமானதும் அதனை இறக்கினால், சுவையான சர்க்கரைவள்ளிக் கிழங்கு வறுவல் ரெடி!!!