Wednesday, December 9, 2015

அடுப்பில்லாமலும் சமையல் செய்யலாம்

 பேரீச்சைச் சாறு:
பேரிச்சம் பழத்தைக் கழுவி, குறைந்தது 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும், பின்னர் பிசைந்து வடி கட்டிக் கொள்ள வேண்டும்.

அளவு: 200 மி.லி. தண்ணீருக்கு (ஒரு டம்ளர்) 3 பேரீச்சம்பழம்.

எலுமிச்சை பானகம்:
ஓர் எலுமிச்சை பழத்தை பிழிந்து 3 டம்ளர் தண்ணீர் கலந்து நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் 50 கிராம் சேர்த்து அத்துடன் வாசனைக்காக 4 ஏலக்காய்களைத் தூள் செய்து போட்டுக் கொள்ளலாம்.

அவல் பாயசம்:
அவலைக் கழுவி 2 மணி நேரம் ஊற வைத்து, கனிந்த மொந்தன்பழம் சேர்த்துப் பிசைந்து தேங்காய்ப் பால், நாட்டுச் சர்க்கரை கலந்து கொள்ள வேண்டும். சிறிது ஏலக்காய்த் தூள், முந்திரிப் பருப்பு, காய்ந்த திராட்சை சேர்க்கலாம்.

அளவு: 5 பேர்க்கு அவல் 100 கிராம், தேங்காய்1, மொந்தன் பழம் 3, சர்க்கரை 50 கிராம், முந்திரிப் பருப்பு 10, காய்ந்த திராட்சை 15, ஏலக்காய் 5.

கேரட் கீர்:
கேரட் துருவலை கிரைண்டர் அல்லது மிக்ஸியில் ஆட்டிச் சாறு எடுத்து, அத்துடன் தேங்காய்ப்பால், நாட்டுடுச் சர்க்கரை கலந்து கொள்ள வேண்டும். வாசனைக்காக ஏலக்காய், பச்சைக் கற்பூரம் சேர்க்கலாம்.

அளவு:
5 பேர்க்கு கேரட் 500 கிராம், பெரிய தெங்காய் 1, நாட்டுச் ச்ர்க்கரை 100 கிராம், ஏலக்காய் 10, பச்சைக் கற்பூரம் 4 சிட்டிகை.

கேரட் அல்வா:
கேரட் சக்கையுடன் தேங்காய்த் துருவல், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த் தூள் சேர்த்தால் அல்வா தயார்.


எந்திரன் 2 வில்லன் இவரா?

ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் மாபெரும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கின்றது

இப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் மோதவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் வந்த தகவலின் படி பாலிவுட் நடிகர் ஒருவரும் இப்படத்தில் நடிக்கவுள்ளாராம்.

கத்தி படத்தில் விஜய்யுடன் மோதிய நீல்நிதின் முகேஷ் தான் இதில் இரண்டாவது வில்லனாம்

90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும்.....?

ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் உள்ள பனிக்கட்டி இப்போதைய வேகத்திலேயே உருகினால் அடுத்த 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும் என்கிறார் ‘ஐஸ் மேன்’ என்று அழைக்கப்படும் உலகின் முன்னணி துருவப் பகுதி ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஸ்வான்.

தனது வாழ்வின் பெரும்பாலான பகுதிகளை துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பிரதேசங்களில் ஆராய்ச்சியில் கழித்துள்ள இவர், அங்கு நடந்து வரும் இயற்கை மாற்றங்களால் அதிர்ந்து போயுள்ளதாகக் கூறுகிறார்.

இப்போது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத எரிசக்திக்கு உலகம் மாற வேண்டியதன் அவசரமான அவசியம் குறித்து உலகெங்கும் பயணித்து பிரச்சாரம் செய்து வரும் இவர் சென்னை வந்துள்ளார். பல்வேறு விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்தி வரும் நிருபர்களிடம் பேசுகையில்,

நான் உண்மையில் ஐஸ் மேன் தான், எனது பெரும்பாலான நாட்களை மைனஸ் 73 டிகிரி வெப்பநிலையில் கழித்துவிட்டேன். அந்த வெப்பத்தில் நம் கண்களில் உள்ள நீர் பனிக்கட்டியாகிவிடும், பார்வை தெரியாது. பற்களில் பிளவுகள் ஏற்பட்டுவிடும். சென்னையி்ன் இந்த சூடான வெப்பநிலை எனக்கு புத்துணர்ச்சியைத் தந்துள்ளது.

அண்டார்டிகாவிலும் ஆர்ட்டிக் பகுதிகளில் பனி மலைகள் மிக வேகமாக உருகி வருகின்றன. இதை நான் கண்கூடாகவே பார்த்துள்ளேன். சென்னையில் நீங்கள் ஓட்டும் கார்கள், பைக்குகளில் இருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்ஸைட் துருவப் பனியை உருக்குவதை நீ்ங்கள் உணர வேண்டும்.

இந்த பனி உருகலால் உலகின் கடல் மட்டம் வி்ஞ்ஞானிகள் கூறியதை விட மிக வேகமாகவே உயர்ந்து வருகிறது. கடல் மட்டம் 2 மீட்டர் உயர்ந்தால் போதும், அது உலகின் பல்வேறு பகுதிகளை நீரி்ல் மூழ்கடித்துவிடும். இது மிக வேகமாகவே நடக்கப் போகிறது என்ற அபாயத்தை உணர்த்தவே நான் பனிப் பகுதிகளை விட்டுவிட்டு உலக நாடுகளை சுற்றி வந்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளேன்.

இந்த சுற்றுச்சூழல் பேராபத்தை தவிர்க்க ஒரே வழி சூரிய மின்சாரமும் காற்றாலை மின்சாரமும் தான். இல்லாவிட்டால் நிலக்கரி, பெட்ரோலியத்தை எரித்து நாம் தயாரிக்கும் எரிசக்தியே நம்மை அழித்துவிடும் என்கிறார்.

தனது 33 வயதிலேயே வட துருவத்தையும் தென் துருவத்தையும் முழுக்க முழுக்க நடந்தே கடந்த மனிதர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராபர்ட் சவான் 1984-ம் ஆண்டு தென்துருவத்தில் 70 நாட்கள் 900 மைல் தூரம் நடந்து சென்று ஆய்வு நடத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டனைச் சேர்ந்த இவர் ஆரம்ப காலத்தில் தனது துருவப் பகுதி ஆராய்ச்சிக்காக டாக்சி ஓட்டியும், குடோன்களில் வேலைபார்த்தும் பணம் சேர்த்துள்ளார்.

கடும் போராட்டத்துக்குப் பின் ஒரு வழியாக சில சுற்றுச்சூழல் அமைப்புகளும் கைகொடுக்கவே 1984ம் ஆண்டு சதர்ன் குவெஸ்ட் என்ற கப்பலை வாடகைக்கு எடு்த்துக் கொண்டு 3 மாதம் 15,000 மைல்கள் பயணித்து அண்டார்டிகாவை அடைந்துள்ளார். இவருடன் இரு நண்பர்களும் பயணித்தனர்.

அண்டார்டிகாவில் இந்த மூவரும் 1,400 கி.மீ. தூரம் நடந்துள்ளனர். வயர்லெஸ் உதவியோ, அவசரகால உதவியோ இல்லாமல் இவர்கள் 70 நாட்கள் நடந்துள்ளனர்.

இந்தப் பயணத்தின்போது இவர்களின் கண்களின் நிறம் மாறியுள்ளது. இதற்கான காரணத்தை அவர்கள் கண்டறிந்தபோது அதிர்ந்து போயினராம்.

இவர்களது கண்களி்ல் உள்ள நிறமிகள் நிறமிழக்கக் காரணம், அண்டார்டிகா பகுதியின் மேலே வளி மண்டலத்தில் ஓசோன் படத்தில் ஏற்பட்ட ஓட்டை வழியாக ஊடுருவிய சூரியக் கதி்ர்கள் என்று தெரியவந்ததாம்.

இந்தப் பயணத்துக்குப் பின்னர் ஆர்ட்டிக் பிரதேசத்துக்கு 8 நிபுணர்களுடன் பயணித்தார் ஸ்வான். அங்கு 56 நாட்கள் சுமார் 1,000 கி.மீ. நடந்து ஆய்வுகளை மேற்கொண்டபோது பனிக் கட்டிகள் மிக வேகமாக உருகுவதைக் கண்டு அதிர்ந்துள்ளனர்.

உலகின் வெப்பமயமாதலுக்கு வளர்ந்த நாடுகள் இதுவரை செய்த தவறுகளே காரணம் என்று கூறும் ஸ்வான், அதே தவறை இந்தியாவும் சீனாவும் செய்துவிடக் கூடாது. வேகமாக பொருளாதார வளர்ச்சியை எட்டி வரும் இந்த நாடுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையான எரிசக்தி சூரியனிடமிருந்தும் காற்றாலைகளில் இருந்தும் வந்தால், உலகம் தப்பும் என்கிறார்.


எல்லோரும் வாழ்வோம் !
நன்றாக வாழ்வோம் !!
ஒன்றாக வாழ்வோம் !!!

ஒட்றா ரெண்டாவது வார போஸ்ட்டர…! பாபி சிம்ஹா படத்துக்கு மவுசு!

கையில் இருக்கிற அத்தனை ஆயுதங்களையும் எடுத்து ஜனங்களை விடாமல் தொடர்ந்து அடித்தது மழை. ஜனங்களும் வெள்ளத்தில் சிக்கி ஒரே குய்யோ முய்யோ… அந்த நேரத்தில்தான் ‘உறுமீன்’ ரிலீஸ். கடந்த 4 ந் தேதி வெளியாவதாக இருந்த ரஜினி முருகன், ஈட்டி ஆகிய இரு படங்களும் ‘ஆளை விட்றா மழைப்பயலே’ என்று அடுத்தடுத்த தேதிகளுக்கு ஓடிவிட, வேறு வழியில்லாமல் திரைக்கு வந்தது உறுமீன். “இவ்ளோ மழையடிக்குது. உங்களுக்கு அவ்வளவு தைரியமா? ஜனங்களோட கஷ்டத்தை நினைச்சு பார்த்தீங்களா?” என்று நேருக்கு நேர் சுடு சொல் வீசிய அத்தனை கேள்விகளையும் மிக நாசுக்காக தவிர்த்துவிட்டு ரிலீஸ் வேலையை பார்த்தது படத்தை வெளியிட்ட தேனான்டாள் பிலிம்ஸ்.

“நாங்க இந்த மழையை எதிர்பார்க்கல. முன்னாடியே வெளிநாட்டு ரிலீசுக்கான பிரிண்ட்டை அனுப்பிட்டோம். இப்போ தமிழ்நாட்டுல ரிலீசை தள்ளி வைச்சா, படம் வர்றதுக்குள்ள திருட்டு விசிடி வந்துடும். அதனாலதான் ரிலீஸ் பண்றோம். மற்றபடி ஜனங்க இவ்ளோ கஷ்டத்துல இருக்கும்போது அந்த துக்கத்துல நாங்களும் பங்கெடுத்துக்கணும்னு நினைச்சாலும் முடியல” என்று அப்பாவி முகம் காட்டினார் டைரக்டர் சக்திவேல் பெருமாள்சாமி. இருந்தாலும் சென்னையில் சில தியேட்டர்களிலும், பிற மாவட்டங்களில் சுமார் 175 தியேட்டர்களிலும் படத்தை வெளியிட்டார்கள்.

எல்லா இடங்களிலும் நல்ல ரெஸ்பான்ஸ். இந்த மழை மட்டும் இல்லேன்னா இன்னும் கூட கல்லா கட்டியிருக்கலாம் என்கிற நிலைமை. நாலாபுறத்திலிருந்தும் படத்திற்கு கிடைத்த மவுத் ரெஸ்பான்ஸ், தேனான்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தை உற்சாகப்படுத்தியிருக்கிறது. அதற்காக என்ன செஞ்சாங்களாம்?

“அட்றா செகண்ட் வீக் போஸ்டரை!” என்று கூறிவிட்டார்கள். சுட சுட தயாராகிக் கொண்டிருக்கிறது வெற்றிகரமான 2 வது வார போஸ்டர். பாபி சிம்ஹா சும்மாவே முறுக்குவாரு. இப்ப இது வேறயா?