
பேய் படம் என்று அறிவித்தாலே அது ஓடாது என்கிற அளவுக்கு வரிசையாக பேய் படங்களாக குவிந்து ரசிகர்களை சலிப்படைய வைத்துவிட்டன. தமிழ் சினிமாக்காரர்களும் இப்போது பேயை விட்டுவிட்டு ஃபேமிலியை பிடித்திருக்கிறார்கள்.
பாபநாசம் படம் வருவதற்கு முன்பு அந்த படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லை. ஆனால் ஃபேமிலி ஆடியன்ஸுக்கு பிடித்து போகவே பாபநாசம் ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான வேதாளமும் தங்கை செண்டிமெண்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த படம். அதுவும் ஹிட் ஆக இப்போது உருவாகும் தமிழ் படங்களில் பெரும்பான்மையானவை குடும்ப செண்டிமெண்ட் தான்.
பீட்சா, ஜிகர்தண்டா என வெரைட்டி காட்டிய கார்த்திக் சுப்புராஜ் இப்போது இயக்கி கொண்டிருக்கும் இறைவி முழுக்க முழுக்க செண்டிமெண்ட் படம். இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான நெருக்கம், பகையை விளக்கும் படம்.
தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் தங்க மகன் அம்மா செண்டிமெண்ட் தூக்கலான படம். அம்மாவின் ஸ்போர்ட்ஸ் கனவை மகன் எப்படி நிறைவேற்றுகிறான் என்ற ரீதியில் கதை.
ஃபேமிலி செண்டிமெண்ட் ஹிட் அடிப்பதாலும் கலெக்ஷனில் அள்ளுவதாலும் பெரிய ஹீரோக்களும் செண்டிமெண்ட்டுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை கேட்க ஆரம்பித்துள்ளனர்.
0 comments:
Post a Comment