Sunday, December 20, 2015

பாஜிராவ் மஸ்தானி - திரை விமர்சனம் மொத்தத்தில்-மாஸ்டர்பீஸ்

பாகுபலி படத்திற்கு பிறகு சரித்திர படங்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்தவகையில் மராட்டிய மன்னர் பாஜிராவ், அவரது இரண்டாவது மனைவி மஸ்தானியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு வெளியாகியுள்ள சரித்திர காவிய திரைப்படம் பாஜிராவ் மஸ்தானி. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், திரைக்கு வந்துள்ள இந்தப்படம் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்தது என்று இனி பார்ப்போம்...

பாஜிராவ் பலால் பட் எனும் ரன்வீர் சிங், போரில் பல வெற்றிகளை கண்டவர். அவரிடத்தில் மஸ்தானி எனும் தீபிகாவின் தந்தையும், அரசருமான சத்ரசால், முகலாயர்களிடமிருந்து தன் தாய்நாடான பண்டல்கண்ட்டை காப்பாற்றும்படி கேட்கிறார். மஸ்தானிக்காக, சத்ரசாலுக்கு உதவ முடிவு செய்கிறார் பாஜிராவ், கூடவே அவருடன் காதல் வயப்படுகிறார். மஸ்தானியை பாஜிராவ் காதலிப்பது அவரது மனைவியான காசியாப் எனும் ப்ரியங்கா சோப்ராவுக்கும் தெரியவருகிறது. இவர்களது காதலை ப்ரியங்கா ஏற்று கொண்டாரா.?, மஸ்தானியுடன் போர் புரிந்து அவரது தாய்நாட்டை பாஜிராவ் காப்பாற்றி கொடுத்தாரா..? எனும் கேள்விக்கு விறுவிறுப்பாக பதில் சொல்கிறது பாஜிராவ் மஸ்தானி படத்தின் மீதிக்கதை!

படத்தில் நடித்த ஒவ்வொருவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக பாஜிராவ்வாக வரும் ரன்வீர் சிங், மஸ்தானியாக வரும் தீபிகா படுகோனே மற்றும் காசிபாயாக வரும் ப்ரியங்கா சோப்ரா... மூவரும் படத்தின் பெரும் பலம் என்றே சொல்லலாம். அதிலும் ப்ரியங்கா சோப்ரா படம் முழுக்க அசத்தியிருக்கிறார். போர்க்கள காட்சியில் ரன்வீர், தீபிகாவின் வீரம் மற்றும் சண்டைக்காட்சிகள் 'வாவ்' சொல்ல வைக்கிறது.

படத்தின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி. சொல்லவே வேண்டாம்... படத்தில் ஒவ்வொரு காட்சியையும் அவ்வளவு அழகாக செதுக்கியிருக்கிறார். கதையாகட்டும், திரைக்கதையாகட்டும், வசனங்களாகட்டும்... எல்லாமே சிறப்பாக உள்ளது. காதல் காட்சிகளிலும் சரி, சண்டைக்காட்சிகளிலும் சரி சஞ்சய் லீலா பன்சாலியின் திறமை வெளிப்படுகிறது. கூடவே படத்தின் இசை, பின்னணி இசை, ஒளிப்பதிவு எல்லாமும் சேர்ந்து ''பாஜிராவ் மஸ்தானி'' படத்தை 'மாஸ்டர்பீஸ்' படமாக்கியுள்ளது.

சரித்திரகால கதையில், ரொமானட்டிக் கதையையும் சேர்த்து ஒரு பக்கா படமாக, அனைவரும் பார்க்கும்படியுமான படத்தை தந்துள்ளார் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி.

!''

0 comments:

Post a Comment