
ஆனால் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் 2.O படப்பிடிப்பு ஆரம்பமாகி இத்தனை நாட்களாகிவிட்ட நிலையில் இன்னும் அந்தப் படத்தின் கதையை பற்றி யாரும் விவாதிக்கவில்லை.
ஏற்கெனவே படப்பிடிப்பு நடைபெற்று வரும் ஈவிபி ஸ்டுடியோவில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எந்த விதத்திலும் அவர்களாக புகைப்படத்தை வெளியிடும் முன் தப்பித் தவறி எந்த புகைப்படும் வெளியாகாது என படக்குழுவினரே தெரிவிக்கிறார்கள்.
சென்னையில் அடுத்த ஒரு மாதத்திற்கு படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்கிறார்கள். 2.O படத்தின் கதை இதுவாகத்தான் இருக்கும் என யாருமே எழுத ஆரம்பிக்காதது ஆச்சரியமாக உள்ளது.
0 comments:
Post a Comment