
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டான்டப் காமெடி செய்து புகழ் பெற்றவர் ரோபோ சங்கர். அதையடுத்து பல சின்னத்திரை மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த அவர் சினிமாவிலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் பாலாஜிமோகன் இயக்கிய வாய்மூடி பேசவும் படம்தான் அவரை பேச வைத்தது. அந்த படத்தில் குடிகாரர்கள் சங்கத்தலைவராக நடித்த ரோபோ சங்கரை பின்னர் பல படங்களுக்கு புக் பண்ணினார். குறிப்பாக, மாரி, மாயா, ஸ்ட்ராபெர்ரி, திரிஷா இல்லன்னா நயன்தாரா, மய்யம் போன்ற பல படங்களில் காமெடியனாக நடித்தார். இதில் மாரி படத்தில் ஷோலோ காமெடியனாக நடித்திருந்தார்.
அதையடுத்து, இப்போது ரஜினிமுருகன், வீர சிவாஜி உள்பட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இப்படி தான் நடிக்கும் படங்களில் தன்னுடன் இணைந்து காமெடி செய்வதற்காக அவர் சினிமாவில் ஏற்கனவே நடித்து வரும் காமெடியன்களை கூட்டணி சேர்த்துக்கொள்வதில்லை. மாறாக, தன்னுடன் சேனல்களில் காமெடி நிகழ்ச்சிகளில் நடித்தவர்களையே இணைத்துக்கொண்டு வருகிறார். அதனால், சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வர ஆசைப்படும் காமெடி நடிகர்கள் ரோபோ சங்கர் நடித்து வரும் படப்பிடிப்பு தளங்களுக்கு சென்று அவரிடம் சான்ஸ் கேட்பது அதிகரித்து வருகிறது.
Posted in: சினிமா,நிகழ்வுகள்
Email This
BlogThis!
Share to Facebook
0 comments:
Post a Comment