Sunday, December 20, 2015

பெண்களுக்கு ஆதரவாதானே பாடுனேன். அது தப்பா? சிம்பு உருக்கம்!

“அந்த டேஷ் பாடல் பெண்களுக்கு ஆதரவான பாடல்தான். அதையேன் புரிஞ்சுக்காம என் மேல் கோபப்படுறீங்க” என்று குறிப்பிட்டிருக்கிறார் சிம்பு. பல நாட்களாக விளக்கம் ஏதும் கூறாமலிருந்த சிம்பு, பா.ம.க, மதிமுக, விடுதலைசிறுத்தைகள் போன்ற கட்சிகள் களத்தில் குதித்ததும் இந்த பிரச்சனையை இனிமேலும் வளர விடக் கூடாது என்று நினைத்தார் போலிருக்கிறது. இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தனது விளக்கத்தை அளித்திருக்கிறார். நடுநடுவே உருக்கமாக அவர் பேசியதை கேட்டால், “தம்பி… இன்னும் இது மாதிரி பாட்டு ஏதாவது இருந்தா சொல்லிடுப்பா…” என்று மக்களும் கட்டிப்பிடித்து கண்ணீர் சிந்திவிடுவார்கள். அப்படியொரு உருக்கம்…. கவலை அதில்!

அட்றா அவள. கொல்றா அவளன்னு பாட்டு எழுதுனவனெல்லாம் விட்டுட்டீங்க. (போற போக்குல தனுஷையும் போட்டு தாக்கிட்டாரே) ஆனால் காதல் தோல்வியால் விஷம் குடிச்சு சாவாதே. வாழ்க்கையில உருப்படுற வேலைய பாரு. பெண்கள் பின்னால் சுத்தாதன்னு ஒரு பாட்டு எழுதியிருக்கேன். அதையேன் புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்க? அந்த பாடல் முழுக்க முழுக்க என்னுடைய பிரைவஸி. நான் அதை எந்த டி.வி சேனலிலும் வெளியிடல. சினிமாவிலேயும் பயன்படுத்தல. என் அனுமதியில்லாமல் யாரோ அதை திருடி வெளியிட்டா அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?

முப்பது வருஷமா இந்த சினிமா துறையில் இருக்கேன். கால் முட்டி தரையில் படுற மாதிரி இந்த ஜனங்களுக்காக ஆடியிருக்கேன். டாக்டர் கூட, இப்படியெல்லாம் ஆடுனா அது பின்னால பிரச்சனையை கொடுக்கும்னு சொல்லியிருக்கார். அவர் சொன்னதையும் கேட்காம உங்களுக்காக ஆடியிருக்கேன். அப்படிப்பட்ட என்னை ஒரு பாடலுக்காக இவ்வளவு வேதனைப்படுத்துறீங்களே… நான் எங்கேயும் ஓடி ஒளிய மாட்டேன். நான் குற்றமற்றவன்னு நிரூபிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

இவர் பேட்டி ஒருபுறம் வந்து கொண்டிருக்க, சிம்புவின் அப்பா டி.ராஜேந்தரும் ஒரு விளக்கம் அளித்திருக்கிறார். நாங்கள் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருக்கோம். கோடிக்கணக்குல பாதிப்பு. சிம்புவின் இமேஜை தகர்ப்பதற்காக ஒரு சிலர் திட்டம் போட்டு சதி செய்திருக்கிறாங்க. ஆனால் அதையெல்லாம் கடவுள் துணையால சமாளிப்போம். சிம்பு மேல எந்த தப்பும் இல்ல. என்னை இந்தளவுக்கு உயர்த்தியது தமிழ் மக்கள்தான். நீங்க புரிஞ்சுப்பீங்கன்னு நம்புறேன் என்று கூறியிருக்கிறார் டி.ஆர்.

கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாடு இந்த சிம்புவால் அல்லோகல்லோலப்படுகிறது. தந்தையும் மகனும் சொன்ன இந்த விளக்கம் எடுபடுமா? அது மக்களின் சகிப்புத் தன்மையை பொருத்த விஷயம்.

0 comments:

Post a Comment