
ரஷ்யா, ஆப்கானிஸ்தான் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி நாடு திரும்பும் வழியில் திடீரென பாகிஸ்தான் சென்றார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள்து.
இதனிடையே பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான சிவசேனா பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்து தமது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டும் எந்த ஒரு தலைவரும் அரசியலில் நீடித்ததில்லை. வாஜ்பாய், அத்வானி ஆகியோர் பாகிஸ்தானிடம் நெருக்கம் காட்டினர். அவர்கள் தீவிர அரசியலில் நீடிக்க முடியாமல் போனது.
முகமது அலி ஜின்னா நினைவிடத்துக்கு போன அத்வானி அவரை புகழ்ந்துவிட்டு எல்லாம் திரும்பினார். இதனால் அவரது அரசியல் வாழ்க்கையே அஸ்தமனமானது.
அந்த மண்ணின் தன்மை அப்படியானது. லட்சக்கணக்கான அப்பாவி இந்தியர்களை பாகிஸ்தான் கொன்று குவித்ததால் அது சபிக்கப்பட்ட மண். அப்பாவி இந்தியர்களின் ரத்தம் தோய்ந்த மண்ணில் கால் பதித்ததற்கு பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
இவ்வாறு சாம்னாவில் எழுதப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment