
இதனால் நடிகர்சங்கத்தைச் சேர்ந்த மூத்தநடிகர்கள், சிம்புவுக்காக ஒரு மன்னிப்பு அறிக்கையை ஒருநாள் முழுக்க அமர்ந்து தயார் செய்து சிம்புவுக்கு அனுப்பியிருக்கிறார்கள். வெளிமாநிலத்தில் தங்கியிருந்த சிம்பு அறிக்கை தயாராகும்வரை நடிகர்சங்கத்தினரோடு தொடர்பில் இருந்திருக்கிறார்.
அறிக்கை அவர் பார்வைக்குப் போன பிறகு இவர்களுடைய தொடர்பிலிருந்து விலகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதன்பின் அவரைத் தொடர்புகொள்ள பலமுறை முயன்றும் அது நடக்காமல் போய்விட்டதென்கிறார்கள். மன்னிப்புக் கேட்க தயாரான அவர் கடைசிநேரத்தில் பின்வாங்கியது எதனால்? என்று தெரியாமல் நடிகர்சங்கத்தினர் குழம்பிக்கொண்டிருக்கிறார்களாம்.
முன்பே அவர் இதற்கு ஒப்புக்கொள்ளாமல் இருந்திருந்தால் ஒருநாளை வீணடித்திருக்க வேண்டியிருக்காது என்று மூத்தநடிகர்கள் வருந்துவதாகவும் சொல்கிறார்கள். இந்தச்சிக்கல் முடிவுக்கு வந்துவிடாமல் தொடரவேண்டும் என்பதற்காக சிம்புவே இப்படிச் செய்தாரா? என்கிற சந்தேகமும் திரைத்துறையினர் மத்தியில் எழுந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
0 comments:
Post a Comment