
ஆஸ்கார் பிலிம்ஸ் பட நிறுவனம் சில வருடங்களுக்கு முன் ஐ, விஸ்வரூபம்-2, பூலோகம், மரியான், வல்லினம், திருமணம் எனும் நிக்காஹ் என ஒரே நேரத்தில் வேறு பல படங்களையும் தயாரித்து வந்தது. இவற்றில் நடித்த ஹீரோக்களின் அன்றைய மார்க்கெட் நிலவரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு படங்களையும் முடித்து வெளியிட்டு வந்தது. ஜெயம்ரவிக்கு மார்க்கெட் இல்லை என்பதால் பூலோகம் படத்தை முடிக்கவும்... வெளியிடவும் ஆர்வம் காட்டவில்லை. அதன் காரணமாக ஏறக்குறைய நான்கு வருடத்துக்கும் மேலாக பூலோகம் படம் வெளியாகாமலே கிடந்தது. ஃபர்ஸ்ட்காப்பி ரெடியானநிலையிலும் இரண்டு வருடங்கள் பூலோகம் படம் கேட்பாரற்று கிடந்தது.
இந்நிலையில் ஒருவழியாக சமீபத்தில் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது பூலோகம் படம். அதர்வா நடித்த கணிதன் படமும் ஏறக்குறைய பூலோகம் படம் போலவே நீண்டகாலமாக தயாரிப்புநிலையிலேயே இருக்கிறது. தற்போது அதர்வா நடித்த ஈட்டி படத்தின் வெற்றியை அடுத்து கணிதன் படத்தின் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பரபரப்பாக வேலைகளை முடித்து விரைவில் கணிதன் படத்தை வெளியிட உள்ளனர்.
பூலோகம் படத்தைப்போல் கணிதன் படமும் வாகை சூடுமா? பார்ப்போம்... !
Posted in: நிகழ்வுகள்
Email This
BlogThis!
Share to Facebook
0 comments:
Post a Comment