
இதுபற்றி பட்டிமன்றம் ராஜா கூறுகையில், சினிமாவில் நான் அறிமுகமானதே அப்பா வேடம் என்பதினாலோ என்னவோ எனக்கு தொடர்ந்து அப்பா வேடங்களாகவே கிடைக்கிறது. அப்பா நடிகர் என்கிற முத்திரையை அழுத்தமாக குத்தி விட்டார்கள். அப்படி தரும் வேடங்களில் கோட்சூட் போட்டு வரும் வசதியான அப்பாவாக காட்டுகிறார்களா என்றால் இல்லை. ஒவ்வொரு படத்திலும் வேஷ்டி சட்டை அல்லது லுங்கி பனியன் அணிந்து நடிப்பது போல்தான் கேரக்டர் தருகிறார்கள்.
தற்போது ஒரு படத்தில் எனக்கு மளிகை கடைக்காரர் வேடம் தந்திருக்கிறார்கள். ஆனால் எனக்கு பொட்டலம்கூட போடத் தெரியாது என்று கூறும் பட்டிமன்றம் ராஜாவுக்கு, இப்போது நடித்து வருவதை விட அழுத்தமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் ஏற்பட்டுள்ளது. அதனால், தொடர்ந்து அப்பாவாக மட்டுமே என்னை நடிக்க வைக்காமல் வித்தியாசமான குணசித்ர வேடங்களிலும் நடிக்க வையுங்கள் என்றும் என்னை புக் பண்ண வரும் டைரக்டர்களிடம் கேட்டுக்கொண்டு வருகிறேன் என்கிறார்
0 comments:
Post a Comment