
இந்த ஹாலிவுட் வாய்ப்பினால் உச்சகட்ட சந்தோஷத்தில் இருக்கும் அமிதாஷ் இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில், "ஆமாம்.. நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். 'ஸ்டெப் அப்', 'சேவ் த லாஸ்ட் டான்ஸ்' போன்ற ஹாலிவுட் படங்களை இயக்கிய ட்வேன் அட்லரின் படத்தில் நான் நடிக்கவிருக்கிறேன். முழுக்க முழுக்க நடனத்தை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படம் இந்தியாவில் எடுக்கப்படவுள்ளது.
இந்த படத்தின் கேஸ்டிங் டைரக்டரான நளினி ரத்னத்திற்கு நான் நடனமாடிய சில காட்சிகளை அனுப்பி வைத்தேன். அதன் பிறகு 4 முறை ஆடிஷனுக்காக சென்றேன். நடனம் மற்றும் நடிப்புத்தேர்வில் 3 முறை பங்கேற்று என் திறமையை நிரூபித்த பிறகே நான் இந்த கதாபாத்திரத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இந்தியா மற்றும் அமெரிக்காவில் நடனத்துறையில் உள்ள 2 பெண்களைக் கொண்ட முக்கோணக் காதல் கதையாக இந்தப்படம் இருக்கும்.
இந்த படத்தில் 'பாஜிராவ் மஸ்தானி' படத்தின் நடன இயக்குனரான சம்பா கோபி கிருஷ்ணா மற்றும் உலகப்புகழ் பெற்ற எம்மி விருது வென்ற டெசண்ட்ரா சாவேஸ் ஆகியோர் நடன இயக்குனர்களாக பணியாற்றுகிறார்கள். இவர்களுடன் பணியாற்ற இருப்பது நிச்சயம் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்றார்.
மும்பையில் வசித்து வரும் அமிதாஷ் தற்போது இந்த படத்திற்கான பயிற்சி பட்டறையில் பங்கேற்று வருகிறார்.
0 comments:
Post a Comment