
டைட்டானிக் புகழ் லியோனார்டோ டிகாப்ரியோ நடித்திருக்கும் படம் "தி ரேவேனன்ட்". அமெரிக்கக் காடுகளில் பயணங்களை மேற்கொள்ளும் ஹுக்ஹ் கிளாஸ் என்பவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் தயாராகியுள்ளது. சென்ற ஆண்டு சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதைத்தட்டி சென்ற "பேர்ட்மேன்" படத்தை இயக்கிய அலெஜன்றொ கோன்சாலஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
ஹாலிவுட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் கிருஸ்துமஸ் தினத்தன்று திரையில் வெளிவர இருந்தது. அனால், கடந்து 20ஆம் தேதியன்று இணையதங்களில் படத்தை யாரோ திருட்டுத்தனமாக வெளியிட சில மணி நேரங்களில் பல லட்சம் மக்கள் டவுன்லோட் செய்தனர். இதனால் படத்தின் லாபம் பெரிதும் பாதிக்கப்படலாம் என படக்குழு கவலையில் உள்ளது.
அதேபோல, பிரபல இயக்குநர் குண்டின் டரண்டினொ இயக்கத்தில் வெளிவர இருந்த " தி ஹேட்ப்ஹுல் எய்ட்" திரைப்படமும் இணையத்தில் வெளியாகியுள்ளது. ரத்தம் தெறிக்க தெறிக்க படங்களை எடுத்து ஹாலிவுட் ரசிகர்களை தெறிக்கவிடும் இவரது படத்திற்கு இந்த நிலைமையா...? என ஹாலிவுட் வட்டாரங்கள் புலம்பி வருகின்றன.
படம் இணையத்தில் வெளியான சோகம் ஒருபுறம் இருக்க ,அதை லட்சக்கணக்கானோர் டவுன்லோட் செய்து பார்த்து வருவது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியுள்ளது.
0 comments:
Post a Comment