Tuesday, December 29, 2015

விஜய்யின் புலி தோல்வியடைய இந்த சென்டிமென்ட் காரணமா?

விஜய் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை திருமலை படத்திலிருந்து தொடங்கினார். 2003 ஆம் ஆண்டு வெளியான அந்தப்படம் வெற்றி. அதைத் தொடர்ந்து 2004 இல் வெளியான கில்லி அவருடைய மதிப்பைப் பன்மடங்கு உயர்த்திவிட்டது. அதன்பின்னர் வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று படங்களில் நடித்துவிடுகிறார்.

ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் அவர் படங்கள் வெளியாகும் போது பெரும்பாலும் இரண்டுபடங்களும் வெற்றி அல்லது இரண்டில் ஒன்று வெற்றி என்று இருந்திருக்கிறது. அதேசமயம் ஒரு வருடத்தில் ஒரேபடம் என்று வெளியான படங்கள் எல்லாம் தோல்வியைத் தழுவி அவருக்கு நெருக்கடி கொடுப்பதாகவே அமைந்திருக்கிறது.

2006 ஆம் ஆண்டு வெளியான ஆதி படம் தோல்வியடைந்தது. விஜய்யின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிவைத்த ரமணா இயக்கத்தில் அவர் நடித்த ஆதி அவருக்குக் கைகொடுக்கவில்லை. அடுத்து 2008 இல் விஜய்க்கு குருவி படம் மட்டும்தான் வெளியானது. விஜய்யை கில்லியாக்கிய தரணியின் இயக்கத்தில் அவர் நடித்திருந்த குருவி ஓடவில்லை.

அதற்கடுத்து 2010 இல் விஜய் நடிப்பில் வெளியான படம் சுறா. அந்தப்படத்தின் நிலை பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அதன்பின் 2013 இல் வெளியான தலைவா படம் வெளியாகவே பெரும் சிரமத்தைச் சந்தித்தது. அதனாலேயே வெற்றி பெற்றிருக்கவேண்டிய அந்தப்படம் தோல்வியைத் தழுவியது.

2014 இல் ஜில்லா, கத்தி ஆகிய இரண்டுபடங்களும் அவர் பெயரைக் காப்பாற்றின. கத்தி நூறுகோடி வசூல் செய்தபடம் என்றும் சொல்லப்பட்டது. இந்தஆண்டு அவருக்கு புலி படம் மட்டும்தான் வெளியானது. அதுவும் தோல்வி.

எனவே, வருடத்துக்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட படங்களில் நடிப்பதுதான் அவருக்கு நல்லது என்று விஜய் ரசிகர்கள் கருதுகிறார்கள்.

0 comments:

Post a Comment