Saturday, December 26, 2015

பலம் இழந்து வரும் ஆண்டிபயாடிக் மருந்துகள், பயமுறுத்தும் அசைவ உணவுகள்...

‘நமது உடலை தாக்கும் கிருமிகளை அழித்து நம்மை காப்பாற்றிய ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகள் மெதுவாக பலம் இழந்து வருகிறது’ என்று உலக சுகாதார மையத்தின் அதிகாரி மார்காட் சான் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்த நோய் கிருமிகள் அதிக சக்தியுடன் ஆண்டிபயாடிக் மருந்துகளை முறியடித்து வளர்வதின் ரகசியம் மேலும் அதிர்ச்சி தருகிறது.

உற்பத்தி செய்யப்படும் ஆண்டிபயாடிக் மருந்துகளின் பெரும் பகுதி ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற மிருகங்களுக்கு அளிக்கப்படுகிறது. இவற்றை நாம் உண்பதால், இந்த ரக ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு நமக்கு வரும் நோய்கள் கட்டுபடுவதில்லை.
இது முதல் காரணம்!

இரண்டாவது காரணம், புதுவித ஆண்டிபயாடிக் மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி அதிகம் நடைபெறவில்லை என்பது தான்!
பிறகு இதற்கு என்ன தான் தீர்வு?

‘எல்லோரும் சைவமாக மாறி விடுங்கள்’ என்கிறார் மார்கிரட்!
‘இல்லை என்றால் வெகு சீக்கிரம் சாதாரண சளி என்றால் கூட கட்டுபடுத்த முடியாத நிலை வந்து விடும். மற்ற பயங்கரமான வியாதிகளை நினைத்து பாருங்கள்’ என்று எச்சரிக்கிறது உலக சுகாதார மையம்!

0 comments:

Post a Comment