Thursday, December 24, 2015

ஜெயம் ரவியின் “‘மூவுலகம்’ போற்றும் ‘பூலோகம்!”

ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில் புரட்சி இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனின் உதவியாளர் என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி குத்துச்சண்டை வீரராக நடிக்க, த்ரிஷா அவரது ஜோடியாக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படமே ‘பூலோகம்’ .

பரம்பரை பரம்பரையாக பாக்ஸிங் எனும் குத்துசண்டை விலையாட்டில் கோலோச்சி வரும் வட சென்னை பகுதிவாசி ஜெயம்ரவி. பாக்ஸரான தன் அப்பாவை தனது சின்ன வயதிலேயே இழந்த ரவியை பெரிய பாக்ஸராக்கிறார் பாக்ஸிங்கை குலத்தொழிலாக கொண்ட பொன்வண்ணன். பெரிய பாக்ஸராக வளர்ந்து ஆளாகும் ஜெயம் ரவியை வைத்து பெட்டிங் நடத்தி பணம் பண்ணுகிறார் பிரகாஷ்ராஜ்., ஒரு நாள் குத்துச் சண்டை போட்டியில் தன்னால் தாக்கப்படும் எதிராளி, உயிர்போகும் நிலைக்கு ஆளாவது கண்டு மனம் இறங்கும் ஜெயம் ரவி., இனி குத்துசண்டை வேண்டாம் என ஒதுங்க., அவரை வைத்து பணம் பார்க்கும் பிரகாஷ்ராஜ் அவரை விடா பிடியாக துரத்தி தன் பணத்தாசைக்கு தொடர்ந்து பலியாக்க முயற்சிக்கிறார்.

பிரகாஷ் ராஜின் பணத்தாசையை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொள்ளும் ரவி., அவரிடமிருந்து விலகி நிற்க முயற்சிக்க., அதில் வெகுண்டெழும் – பிரகாஷ்ராஜ்., ரவியை தீர்த்து கட்ட வெளிநாட்டில் இருந்து ஒரு பாக்ஸரை களம் இறக்குகிறார். இறுதியில், விலகி நின்ற ஜெயம் ரவி ஜெயித்தாரா ? வெளிநாட்டு பாக்ஸரும் அவரை களம் இறக்கிய பிரகாஷ் ராஜூம் ஜெயித்தனரா..? எனும் கதையுடன்., ரவி வசிக்கும் பகுதியில் ஹோட்டல் நடத்தும் த்ரிஷாவுடனான ரவியின் காதலையும் கலந்து கட்டி பூலோகத்தை புதுமைலோகமாக படைத்திருக்கின்றனர். பலே பலே!

ஜெயம் ரவி, இளம் குத்துச் சண்டை வீரராக கச்சிதமாக நடித்திருக்கிறார். குத்துசண்டை காட்சிகளில் நிஜ பாக்ஸிங் வீரர்களே தோத்துப் போகுமளவிற்கு ரிஸ்க் எடுத்திருக்கும் ரவிக்கு நிச்சயம் ஒரு ஹேட்ஸ் ஆப் சொல்லியே ஆகவேண்டும்!

த்ரிஷா, லோக்கல் ஹோட்டல் அதிபராக செம கலக்கல்.

பிரகாஷ்ராஜ் , சைலண்ட் வில்லதனத்தில் வழக்கம் போலவே சக்ஸஸ்புல் நடிப்பை வழங்கி சபாஷ் வாங்கி விடுகிறார்.

பொன்வண்ணனும் , தன் பங்கிற்கு., ரவியின் குருநாதராக பொலந்து கட்டியிருக்கிரார். க்ளைமாக்ஸில் வரும் அந்த ஹாலிவுட் பாக்ஸரும் கச்சிதம்!

ஜெயம் ரவி – த்ரிஷா – பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரின் நல் நடிப்பு மாதிரியே., S.R. சதீஷ்குமாரின் ஒவிய ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்த் தேவாவின் இனிய இசை , S.P. ஜனநாதனின் ‘நறுக்’வசனம் … உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள்., N.கல்யாண கிருஷ்ணனின் எழுத்து , இயக்கத்தில் பூலோகம் படத்தை மூவுலகமும் போற்றும்படி மிளிர வைத்துள்ளது என்றால் மிகையல்ல!

நிச்சயம் , “‘மூவுலகம்’ போற்றும் ‘பூலோகம்!” 

0 comments:

Post a Comment