Thursday, December 24, 2015

எந்திரன் 2.Oவில் வெடித்ததா பிரச்சனை? சர்ச்சை குறித்து தயாரிப்பாளர் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இணையும் மூன்றாவது படம் எந்திரன் 2.O. இப்படத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடிக்கவுள்ளார்.

மேலும், ஷங்கரின் ஆதர்ஸ இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானே இப்படத்திற்கும் இசை. ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்தில் ஈழத்துக் கலைஞர்கள் மூவருக்கு வாய்ப்பளித்துள்ளதாக செய்தி வெளியானது.

ஆனால், சமீபத்தில் வந்த செய்தி ஒன்றில் ஐங்கரன் கருணாமூர்த்தி ஈழத்து கலைஞர்களை எப்படியாவது இந்த படத்தில் பாட வைத்து விட வேண்டும் என முயற்சி செய்ததாகவும், லைகா குழுமத்தின் நிறுவனர் சுபாஷ்கரன் இதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் ஒரு செய்தி Lyca Production என்ற பெயரிலேயே ஊடகங்களுக்கு போலி மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.

இதுகுறித்து லங்காசிறியிலிருந்து எந்திரன் 2.O தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அல்லிராஜாவுடன் தொடர்பு கொண்டு பேசப்பட்டது.

இதற்கு சுபாஷ்கரன் பதிலளிக்கையில், இது லைகா குழுமத்தின் போட்டி நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட வதந்தி செய்தியாகும். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் யாரைப் பாட வைக்க வேண்டும் என்பதை இயக்குனர் ஷங்கர் கூட முடிவு செய்ய முடியாது. அப்படியிருக்க நான் முடிவெடுக்க வாய்ப்பேயில்லை. நான் தயாரிப்பாளர் மட்டுமே.

ஆனால் ஏ.ஆர். ரஹ்மான் ஈழத்துக்கலைஞர்களை இப்படத்தில் பாடவைக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் எனக்கு 100 சதவிகிதம் சம்மதம் தான். அதை மகிழ்ச்சியோடு நாங்களே அறிவிப்போம் என்று இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மேலும் இப்படத்தைப் பற்றி லைகா குழுமத்தின் துணைத்தலைவர் பிரேம் சிவசாமி பேசுகையில், லைகா நிறுவனம் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம், சிரஞ்சீவி நடிக்கும் கத்தி தெலுங்கு ரீமேக், அக்ஷய்குமார் நடிக்கும் கத்தி ஹிந்தி ரீமேக், ஜிவி பிரகாஷ் படம், விசாரணை உள்ளிட்ட பல படங்களின் மூலம் இந்திய சினிமாவில் ரூ. 1000 கோடி முதலீடு செய்துள்ளோம். இதனை ஏற்றுக்கொள்ள முடியாத போட்டி நிறுவனங்கள் தான் வதந்திகளை கிளப்பி வருகின்றனர். கத்தி படத்திலும் இதே மாதிரியாக பல தடைகளை எங்களுக்கு உருவாக்கினர் என்று கூறினார்.

இப்படத்தின் தலைப்பு பற்றி நிலவும் குழப்பத்திற்கு, எந்திரன் படத்தின் தொடர்ச்சி தான் இந்த படம். இதன் பெயர் 2.O(ஓ) தான். முதல் பாகத்தை தயாரித்தது வேறு நிறுவனம் என்பதால் நிலவும் சில சட்டசிக்கலால் நாங்கள் எந்திரன் என்ற பெயரை பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த செய்தியில் கூறப்பட்ட MC Sai, Arjun ஆகிய ஈழத்துக் கலைஞர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, Lyca Productionலிருந்தோ, ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பிலிருந்தோ தங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை, இந்த செய்தியை ஊடகங்களிலிருந்து மட்டும்தான் நாங்கள் படித்தோம் என்று கூறியுள்ளனர்.

0 comments:

Post a Comment