Monday, December 14, 2015

ஏற்கெனவே ஒரு ஆபாசப் பாட்டுக்கு கமிஷனரிடம் கைகட்டி நின்றவர் அனிருத்!

பீப் பாடலுக்காக செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டு, போலீசாரிடமிருந்து தப்பிக்க எனக்கும் அந்தப் பாட்டுக்கும் சம்பந்தமில்லை என்று பொய் சொல்லிக் கொண்டுள்ள அனிருத்துக்கு, இந்த மாதிரி சர்ச்சைகள் புதிதல்ல.

ஏற்கெனவே இருமுறை ஆபாச சர்ச்சைகளில் சிக்கி மன்னிப்புக் கோரியவர் இந்த அனிருத்.

ரஜினியின் நெருங்கிய உறவினர் என்பதால் அனிருத்து சினிமா உலகில் ஸ்பெஷல் மரியாதை. பெரிய வாய்ப்புகள். அவரை திரையுலகுக்கு அறிமுகம் செய்தவர்கள் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் மருமகன் தனுஷும்தான். இன்று வரை தனுஷின் படங்களுக்கு அனிருத்தான் ஆஸ்தான இசையமைப்பாளர்.

அனிருத்தை தன் தம்பி என்று கொண்டாடி வருகிறார் தனுஷ்.

ஆனால் அந்த அனிருத் செய்யும் வேலைகள் பெரும்பாலும் சில்லியானவை. பரபரப்பான இசையமைப்பாளராக வளர்ந்து வந்த நேரத்தில்தான் தன்னைவிட பல ஆண்டுகள் வயது மூத்த ஆன்ட்ரியாவின் உதட்டைக் கடித்தபடி இருந்த படங்களை ஆன்லைனில் கசியவிட்டார். முதலில் யாரோ லீக் பண்ணிவிட்டதாகக் கூறியவர், பின்னர் அந்தப் படங்களுக்காக வருத்தம் தெரிவித்தார். செய்யாத வேலைக்கு இவர் ஏன் வருத்தம் தெரிவித்தார் என்ற கேள்விக்கு பதில் இல்லை.

அடுத்து சில ஆண்டுகளுக்கு முன் உடலுறவைக் குறிக்கும் மோசமான ஆங்கில வார்த்தையை வைத்து கொச்சையான ஆங்கிலப் பாடலை வெளியிட்டார். அதுவும் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. அனிருத்தைக் கைது செய்யக் கோரி கமிஷனரிடம் புகார்கள் குவிந்தன.

அனிருத் கைதாகும் சூழல் ஏற்பட்டபோது, அப்போதைய கமிஷனர் ஜார்ஜை நேரில் சந்தித்தார் அனிருத்தின் தந்தை ரவிச்சந்திரன் என்கிற ராகவேந்தர். மகனின் கேவலமான காரியத்துக்காக மன்னிப்புக் கடிதம் ஒன்றையும் கொடுத்தார். எச்சரித்து அனுப்பினார் ஜார்ஜ்.

இந்த சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கூட முடியவில்லை. மீண்டும் தன் ஆபாச தாண்டவத்தை பீப் பாட்டு என்ற பெயரில் ஆடி முடித்துவிட்டு, 'அப்படியெல்லாம் நான் செய்யவே இல்லைய.. நல்ல பிள்ளையாக்கும்' என்று சீன் போடுகிறார்!

உங்கள் தொப்பையை குறைக்க ஒரு கப் கொள்ளு..!

25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப்பார்க்கும் அப்போதைக்கு அதை பற்றி பீல் பண்ணாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அப்படியே ஒரு அஞ்சு வருசம் கழிச்சி பாத்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும் இளைத்தவன் எள்ளு விதைப்பான், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.

இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.

உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டனர்.

இந்தப் பழமொழிக்கு மற்றொரு அர்த்தமும் கற்பிக்கப்படுகிறது அதாவது, மழை சரியாகப் பெய்தால் மட்டுமே எள்ளு விதைக்க முடியும் மழை தவறினால் எள்ளு உற்பத்தி அடியோடு சரியும் ஆனால் கொள்ளு விதைத்தால் ஓரிரு மழை தவறினால் கூட அது தாக்குப்பிடித்து நல்ல உற்பத்தியை அளிக்கும் எனவும் சிலர் கூறுகின்றனர்.

மருத்துவ குணம்: கொள்ளுப் பருப்பை ஊற வைத்து,அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும் அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு மேலும் இதில் அதிகளவு மாவுச் சத்து உள்ளது.கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.

கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும் உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும் வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பொருமல்,கண்ணோய்கள் போன்றவற்றையும் கொள்ளு நீர் குணப்படுத்தும் வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.பிரசவ அழுக்கை வெளியேற்றும்.கொள்ளும் அரிசியும் கலந்து செய்யப்பட்ட கஞ்சி பசியைத் தூண்டுவதுடன் தாதுவைப் பலப்படுத்தும்.

எலும்புக்கும்,நரம்புக்கும் உரம் தரக் கூடியது கொள்ளுப் பருப்பு என்பதால் அதனைக் கடினமான பணிகளைச் செய்யும் குதிரைக்கும் முன்னோர்கள் அளித்தனர் குதிரைகள் பல மைல் தூரம் ஓடும் சக்தியை பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே ஆனால் அந்த சக்தியின் ஒரு பகுதி அவை உண்ணும் கொள்ளுப் பருப்பில் இருந்தும் கிடைக்கிறது என்பதைப் பலர் உணர்ந்திருக்க மாட்டார்கள் கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு ஊளைச் சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.

வனதேவதைகளுக்குக் காணிக்கையாகக் கொள்ளுப் பருப்பை இறைத்து விடுவார்கள் மேலும் கொள்ளுப் பருப்பை வேகவைக்கும் போது அதில் இருந்து வெளியேறும் ஒருவித வாசனை வனதேவதைகளையும் ஈர்க்கக் கூடியது என்றும் அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது இந்தப் பொடியில் சாதம் கலந்து கேதுவுக்கு வேண்டுதல் செய்வார்கள் இதற்கு கானாப் பொடி என்றும் பெயர்.

குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து குடுத்துப்பாருங்கள் சளி காணாமல் போயிவிடும் என்கிறார்கள் அப்படி ஒரு அருமையான மருத்துவ குணம் இந்த கொள்ளுக்கு உண்டு உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அருந்தலாமாம்.

குளிர்காலத்தில் தான் அதிகம் சளி பிடிக்கும் அந்த காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காதாம் சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும் அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள் இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.

கொள்ளை ஆட்டி பால் எடுத்து அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும் கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம் இ‌ப்படி செ‌ய்ய முடியாதவ‌ர்க‌ள் கொ‌ள்ளு ரச‌ம்,கொ‌ள்ளு துவைய‌ல்,கொ‌ள்ளு குழ‌ம்பு ஆ‌கியவை வை‌த்து அ‌வ்வ‌ப்போது உ‌ண்டு வ‌ந்தாலு‌ம் உட‌ல் எடை குறையு‌ம்.

கொள்ளு சூப்
தேவையான பொருள்கள்:
கொள்ளு – 4 ஸ்பூன்
பூண்டு – 5 பல்
தக்காளி – 2
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் – 1ஃ2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது

தாளிக்கநல்லெண்ணெய் – சிறிது
கடுகு – சிறிது
வரமிளகாய் – 2

செய்முறை:

மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும் அரைத்தக் கலவையில் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும்.

வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய்,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

கொள்ளு சூப் 2
தேவையான பொருட்கள் :
கொள்ளு 1 கப்
தக்காளி 1 / 2
சின்ன கத்தரிக்காய் 1
பச்சை மிளகாய் 4
தனியா 1 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
கறிவேப்பில்லை சிறிது
புளி சிறிது
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
எண்ணெய் 1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

செய்முறை:

முதலில் குக்கரை எடுத்து அதில் கொள்ளு,கத்தரிக்காய்,தக்காளி,உப்பு,மஞ்சள் தூள்,தண்ணீர் சேர்த்து 5 விசில் வரும் வரை வேக விடவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் வெங்காயம் (சிறிதாக வெட்டியது),பச்சைமிளகாய்,மல்லி, சீரகம், கறிவேப்பில்லை போட்டு எண்ணெய் விட்டு நன்கு வதக்கி வேக வைத்த கொள்ளை சேர்த்து ஒரு கொதி விடவும்.பின்னர் அத்துடன் புளி சேர்த்து அரைக்கவும்.சூடான சாதத்துடன் நெய் விட்டு சாப்பிடவும்.

கொள்ளு ரசம்
கொள்ளு – 1 கப்
வரமிளகாய் – 3
மல்லி – 1 டீஸ்பூன்
சீரகம் – 1ஃ2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1ஃ2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் – 1ஃ2 அல்லது சின்ன வெங்காயம் – 8 நறுக்கியது
பூண்டு – 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு

செய்முறை:

கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும் வேக வைத்த கொள்ளு,வரமிளகாய்,மல்லி, சீரகம்,மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும்.வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.
அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.

கொள்ளு மசியல்
கொள்ளு – 200 கிராம்
சீரகம் – 1 டீஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
தக்காளி – 2
காய்ந்த மிளகாய் – 4
பூண்டு – 5 பல்
சிறிய வெங்காயம் – 10
புளி – நெல்லிக்காய் அளவில் பாதி
கறிவேப்பிலை – 10 இலைகள்
கொத்தமல்லி இலை – சிறிது
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும் அரைத்தக் கலவையில் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும். வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,வரமிளகாய,கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும் நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கித் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.

கொள்ளு குழம்பு
கொள்ளு – 1 கப்
வரமிளகாய் – 3
மல்லி – 1 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை
பெரிய வெங்காயம் – 1/2 அல்லது சின்ன வெங்காயம் – 8 நறுக்கியது
பூண்டு – 3 பல் நறுக்கியது
எண்ணெய்
கடுகு

செய்முறை:

கொள்ளை குக்கரில் வைத்து 3 கப் தண்ணீர் விட்டு 4 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும் வேக வைத்த கொள்ளு,வரமிளகாய்,மல்லி,சீரகம், மஞ்சள்தூள் சேர்த்து மிக்சியில் நன்கு அரைக்கவும்.வேண்டுமானால் வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்.அத்துடன் அரைத்தவற்றை சேர்த்து ஒரு கொதி விட்டு எடுக்கவும்.

பொடியாக்கி வைத்துக்கொள்ள:

துவரம் பருப்பு,கொள்ளு இரண்டையும் தனித்தனியாக எண்ணெய் விடாத வெறும் வாணலியில் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.காய்ந்த மிளகாய்,மிளகு,சீரகம்,நசுக்கிய பூண்டையும் தனித்தனியாக நன்கு வறுத்துக் கொள்ளவும்.நன்கு ஆறியதும் வறுத்த பொருள்களுடன் பெருங்காயம்,உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து,காற்றுப் புகாத பாத்திரத்துள் எடுத்துவைக்கவும்.

மருதநாயகம் மீண்டும் தொடக்கம்- தயாரிப்பாளர் இவரா?

தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் மருதநாயகம். இப்படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்து, பட்ஜெட் காரணமாக நின்றது.

இந்நிலையில் இப்படத்தின் போஸ்ட்ரை ஐங்கரன் நிறுவனம் தன் டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டது.

இதன் மூலம் ஐங்கரன் நிறுவனமே இப்படத்தின் மீதமிருக்கும் பகுதியை தயாரிக்கவிருப்பதாக தெரிகிறது. மேலும், லண்டனில் உள்ள நண்பர் ஒருவர் இப்படத்தை தயாரிக்க விருப்பப்படுவதாக கமல் ஒரு பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மருந்து வாங்கும் போது... எச்சரிக்கை! கவனம் தேவை...!

மருந்து வாங்கும் போது... கீழ்க்கண்ட விஷயங்களை அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இது உயிர் பற்றிய விஷயம். எனவே அக்கறை அவசியம்.

1. மருத்துவரின் சீட்டு இல்லாமல் வாங்காதீர்கள்!

தமிழ் சினிமாவின் பிரபல வசனங்களில் ஒன்று, யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும. யார் வெட்டினாலும் கத்தி வெட்டும். மருந்து, டாக்டர் எழுதிக் கொடுத்தாலென்ன... கடைக்காரரே கொடுத்தால் என்ன? என்று நினைப்பவர் அநேகர். அது உண்மையல்ல. குடும்ப மருத்துவருக்குக் கொடுக்கும் பணம் உங்கள் உடல் நலத்திற்கான முதலீடு என்பதை உணருங்கள். நீங்கள் சரியான மருத்துவரிடம் 50, 100 ரூபாய் கொடுத்தால் அவர் குறைந்தது 5 மடங்கு பணம் மிச்சப்படுத்தும் வேலையைச் செய்வார்!

இப்போது பெரும்பாலான மருத்துவர் கள் தங்கள் மருந்துச் சீட்டை தெளிவாக, தனித்தனியாக கொட்டை எழுத்துக்களில் தான் எழுதித் தருகின்றனர். சிலர் கம்ப் யூட்டர் மூலம் பிரிண்ட் செய்யப்பட்ட மருந்துச் சீட்டை கொடுக்கிறார்கள்.

கையெழுத்துப் புரியவில்லை என்றால் கேட்டு விடுங்கள்! கோபிக்க மாட்டார்! சிலர் பழைய சீட்டை வைத்தே வருடக் கணக்கில் வாங்குவார்கள். அதுவும் தவறு! அவ்வப்போது மருத்துவரைப் பாருங்கள்!

2. செல்போனில் மருந்துச் சீட்டு நீண்ட காலத்திற்கு சாப்பிட வேண்டிய உயிர் காக்கும் மருந்துகளின் பெயர், டோஸ் அளவு போன்றவற்றை Cell Phone™ மெஸேஜ் ஆக எழுதி பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த   Message  வீட்டில் உள்ள அனைத்து செல்ஃபோனி லும் இருக்கட்டும். அவசரத்தில் சிகிச்சை யளிக்க மருத்துவர் கேட்கும்போது இது உயிர் காக்க உதவும்.

3. பில் இல்லா மருந்து மருந்தல்ல எங்கே வாங்கினாலும், எவ்வளவு வாங்கினாலும் எவ்வளவு அவசர மானாலும், பில் இல்லாமல் மருந்துகளை வாங்காதீர்கள். பில்லில் உங்கள் பெயர், மருத்துவரின் பெயரும் இருக்கட்டும். மருத்துவரின் மருந்துச் சீட்டுடன், பில்லை வைத்து கவனமாக சரிபார்த்து, வாங்குங்கள். சந்தேகம் இருக்கும் பட்சம் மருத்துவரிடமோ அவரது உதவியாளரிடமோ Cross Check செய்து கொள்ளுங்கள்.

4. உதிரிகள் வேண்டவே வேண்டாம் மருந்தின் பெயர், மருந்துப் பொருட்களின் பெயர், தயாரித்த கம்பெனியின்  பெயர், விற்கும் கம்பெனியின் பெயர் மருந்தின் வீரிய அளவு, மருந்து தயாரித்த தேதி காலாவதி தேதி ஆகியவற்றை முழு அட்டையாக மாத்திரை வாங்கும் போதுதான் கவனித்து வாங்க முடியும். எனவே கூடுமானவரை உதிரியாக மாத்திரை வாங்குவதை தவிர்த்து விடுங் கள். உதிரி மாத்திரைகள், காலாவதி, போலி, சாம்பிள் மாத்திரைகளாகக் கூட இருக்கக் கூடும். எனவே கூடுதல் கவனம் தேவை.

5. வீரியமில்லாமல் காரியமில்லை மாத்திரை பெயர் பார்த்து வாங்கும் போது அதன் அளவு 2 மிலி, 5 மிலி, 10 மிலி என வீரியத்தின் அளவு பார்த்து வாங்க வேண்டும். இது மிக முக்கியம்.

6. காலாவதி மாத்திரை காலனிடம் சேர்க்கும் எந்த மருந்தையும் நீங்களாகப் பார்த்து, காலாவதி தேதி சரிபாருங்கள். சில மாத் திரைகளில், 18 மாதங்கள், 24 மாதங்கள். தயாரித்த தேதியிலிருந்து என போட்டிருப் பார்கள். அதையும் சரிபாருங்கள்.

ஒரே வகையான மருந்து 6 மாதம் ஒரு கம்பெனியும் மற்றொரு கம்பெனி 3 வருடம் கழித்தும் காலாவதி தேதியை குறிப்பிட்டிருக்கும். அது மருந்து தயாரிக் கும் முறை, மருந்தின் உட்பொருட்கள் பொறுத்து மாறக்கூடும். நீங்களாக ஒரு முடிவுக்கு வர வேண்டாம்.

சில மருந்துகள் 1 நாள் தாண்டினால் கூட விஷமாக மாற வாய்ப்பு உண்டு. உதாரணம் டெட்ராசைக்ளின் வகை மருந்துகள். சில மருந்துகளில் காலாவதி தேதி நீண்ட நாட்கள் இருந்தாலும், குறிப்பாக குழந்தைகளுக்கு பவுடர் வடிவில் கொடுக்கப்படும் ‘ஆன்டி பயாடிக்Õ வகை மருந்துகள், காய்ச்சி ஆறவைத்த நீரில் கலந்து 5 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என சிறிய எழுத்தில் எழுதியிருப்பார்கள். அதுபோன்ற மருந்து களை 5 நாட்களுக்கு மேல் வைக்கக் கூடாது.

7. நீண்ட நாட்களுக்கு...

 நீண்ட நாட்களுக்கு சாப்பிட வேண்டிய, தினசரி தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள் குறைந்தது 1 வாரத்துக்கான அளவாவது வீட்டில் இருக்கட்டும். இரவு ஒரே மாத்திரை இருந்து அதுவும் கீழே தவறி விழுந்துவிட்டால், தேவையில்லாத, பயம், பதட்டம், கவலை, அலைச்சல் டென்ஷன் இதை தவிர்க்க கைவசம் சற்று மாத்திரைகள், பர்ஸ், அல்லது ஹேண்ட் பேகில் இருக்கட்டும்.

8. குறைந்த செலவில் நிறைய மருந்துகள் சில மொத்த மருந்து வியாபாரிகளின் சில்லறை விலைக் கடைகளிலோ, சேவை நிறுவனங்கள் நடத்தும் கடைகளிளோ, 10 முதல் 20% வரை எம்.ஆர்.பி. விலையில் இருந்து தள்ளுபடி விலையில் மருந்து கிடைக்கும். ஒரு மாதத்திற்குத் தேவை யான மருந்துகளை இதுபோன்ற கடை களில் வாங்கினாலே கணிசமான பணம் மிச்சமாகும். சில கடைகளில் போனில் ஆர்டர் கொடுத்தால் இலவச டோர் டெலிவரி வசதியும் உண்டு. பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரத்தை மிச்சப்படுத்துங்கள்.

9. அதே மருந்து... வேறு கம்பெனி சில மருந்து கம்பெனியின் தயாரிப் புகள் இல்லாதபோது நீங்களாகவே வேறு கம்பெனி மருந்துகளை மருத்துவரின் அனுமதியில்லாமல் வாங்காதீர்கள். போலி கம்பெனியா, தடைசெய்யப்பட்ட மருந்துகள் கலந்துள்ளனவா என்பதை உங்கள் மருத்துவர் அறிவார். குறிப்பாக வலிப்பு/ சர்க்கரை வியாதி/ ரத்தக் கொதிப்பு மாத்திரை வாங்கும்போது, வீரியம் அதிகரித்தாலோ, குறைந்தாலோ, தேவையில்லாத பாதிப்புகள் ஏற்படக் கூடும்.

அதுபோலவே மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்தை நீங்களாகவே குறைத்துக் கொள்ளவோ அதிகரித்துக் கொள்ளவோ வேண்டாம்.

என் நண்பர் ஒருவர் ‘விருந்துக்குப் போய்விட்டு வந்தால் சர்க்கரை மாத்திரை இரண்டாகப் போட்டுக் கொள்வேன்’ என்பார். தலைக்கு மேல் கத்தி தொங்கு வது போன்றது இது. எப்போதும் ஆபத்து நேரலாம்.

10. மருந்துகள் பாதுகாக்க குழந்தைகள் கைக்கு எட்டாமல் வைக்கவும். பல மாத்திரைகள் கலர் கலராக ஜெம்ஸ் மிட்டாய் போல இருப்பதால் குழந்தைகள் வாயில் போட்டுக் கொள்ளும் ஆபத்து அதிகம்.

சில மருந்து மாத்திரைகள் குறிப்பாக நெஞ்சுவலி மாத்திரைகள் போன்றவை கைக்கு எட்டும் வகையிலும், தேவைப்பட்டால் ஒவ்வொரு அறையிலும் இருப்பது நலம்.

சில மருந்துகளை குளிர் சாதனப் பெட்டியில் தான் (இன்சுலின் போன்றவை) வைக்க வேண்டும். ஆனால் ஓபஸ் பெட்டியில் (ப்ரீஜரில்) வைக்கக் கூடாது.

பொதுவாக எல்லா மருந்துகளையும் வெயில், சூடுபடாத, ஈரம் இல்லாத உலர்ந்த இடத்தில் வைப்பது அவசியம். அடுப்பு அருகே, ப்ரிட்ஜின் மேல், சூடான பாத்திரம், ஹீட்டர் அருகே அல்லது வெயில்படும் இடங்களில் மருந்துகளை வைத்தால் மருந்து கெட்டுப்போக வாய்ப்பு உண்டு. சிலவகை தடுப்பு மருந்துகளில், மருந்தின் வீரியம் கெட்டுப் போனதை அந்த லேபிள் கலர் மாறு வதைப் பொறுத்து கண்டுபிடிக்க இயலும்.