Wednesday, December 9, 2015

வானிலை குறித்த முன்னெச்சரிக்கை எதையும் வெளியிடவில்லை: நாசா விளக்கம்

 வானிலை குறித்த முன்னெச்சரிக்கை எதையும் வெளியிடவில்லை என்று சென்னை அரசு கல்லுாரி பேராசிரியரின் இ - மெயில் கடிதத்திற்கு, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா அதிகாரப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.

ஒரு மாதத்துக்கு மேலாக பெய்த கன மழையால், சென்னை நகரம் துவம்சமாகி விட்டது. அதே நேரம், மழை மற்றும் புயல் குறித்து, பல வதந்திகள் வலம் வந்து, மக்களை மிரட்டி கொண்டு இருந்தது.

சென்னையில் நவம்பர் 21, 22ல் மிகக் கன மழை பெய்யும் என, அந்த தகவலில் சொல்லப்பட்டு இருந்தது. மற்றொரு தகவலில் டிசம்பர் 7, 8ல் சென்னையை சுற்றி மிகக் கன மழை பெய்து, சென்னை நகரமே மூழ்கும் அபாயம் உள்ளது என, நாசா எச்சரித்துள்ளது என்ற வதந்தி பரவியது. இந்த தகவல் வாட்ஸ் ஆப், பேஸ்புக், டுவிட்டர் மூலம் பகிரப்பட்டு சென்னை மக்களை பெரும் பீதி அடைய செய்தது.

இந்நிலையில், சென்னை, வியாசர்பாடி, அம்பேத்கர் அரசு கல்லுாரியின் ஆங்கில துறை தலைவர், பேராசிரியர் ரவிச்சந்திரன், இந்த தகவல் குறித்து, நாசா தலைமையகத்திற்கு, இ - மெயிலில் அவசர கடிதம் அனுப்பினார். அதற்கு உடனடியாக, நாசாவிலிருந்து பதில் வந்துள்ளது. நாசாவின் மழை பொழிவு கணக்கீடு துறை விஞ்ஞானியும், திட்டத்துறை அதிகாரியுமான ஜார்ஜ் ஹப்மேன் அளித்த பதில் அளித்துள்ளார்.

அந்த பதிலில் "மழை எவ்வளவு பெய்யும்' என, நாசா கணக்கிடுவதாக பரவும் செய்தி எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. நாசா என்பது, ஒரு ஆராய்ச்சி நிறுவனம். எங்கள் நிறுவனம், வானிலை தொடர்பான முன்னெச்சரிக்கையை தெரிவிப்பதில்லை. மழை எவ்வளவு பெய்யும் என, எதிர்கால கணிப்புகளை மேற்கொள்வதில்லை.மாறாக, உலகில் ஒவ்வொரு பகுதிகளிலும், எவ்வளவு மழை பெய்துள்ளது என்பதையே, செயற்கைக்கோள்கள் மூலம் படமெடுத்து கணக்கிடுவோம்.

அதே நேரம், எங்கள் தகவல்களை, வானிலை தொடர்பான முன்னெச்சரிக்கைக்கு மற்ற நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. எனவே, இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். மாறாக வதந்திகளை பரப்பி எங்களை மேற்கோள் காட்டும் இணையதள முகவரிகளை எங்களுக்கு அனுப்பினால், விசாரணை நடத்துவோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.


சர்க்கரை நோய்- சில கசப்பான உண்மைகள்!


முன் ஒரு காலத்தில்,’பணக்காரர்களின் வியாதி’ என்று அழைக்கப்பட்டது சர்க்கரை நோய். ஆனால் இன்றோ, சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடே இல்லை என்ற அளவுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதை ‘வாழ்க்கைமுறை நோய்’ என்று கூறுவர். சர்க்கரை நோய் எல்லோருக்கும் வரும் என்று இல்லை. அப்படியே வந்தாலும் தடுத்துவிடலாம். நாம் சாப்பிடும் உணவு, வாழ்க்கைமுறை, உடற்பயிற்சி, சுற்றுச்சூழல் போன்ற காரணிகள், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை முடிவு செய்கின்றன.

ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மேற்கொண்டால் சர்க்கரை நோயைத் தடுக்க முடியும்.


தற்போது கிட்டத்தட்ட ஆறரைக் கோடி இந்தியர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது. 7.7 கோடி இந்தியர்கள், சர்க்கரை நோய் வருவதற்கான எல்லைக்கோட்டில் உள்ளனர். 2030-ல் இது 8.7 கோடியாக அதிகரித்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இனியாவது நாம் ஆரோக்கிய வாழ்வை மேற்கொண்டால் சர்க்கரை நோய் வராமல் காத்துக்கொள்ளலாம்.
 
சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டதால், இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்தவகையில் ஆலோசனைகளை அள்ளி வீசுகின்றனர். எதையாவது செய்து நோயைக் குணப்படுத்திவிட வேண்டும் என்று மக்களும் இருக்கின்றனர்.

அது சரி! சர்க்கரை நோயை எப்படிக் கண்டறிவது?எப்படி என்கிறிர்களா?

முதலில் சாதாரண ரத்த பரிசோதனை பற்றி பார்ப்போம்:ஒருவருக்கு ரத்தத்தில் 200 மில்லிகிராம் / டெசி லிட்டர் என்ற அளவில் இருந்தால் – அவருக்கு சர்க்கரை நோய் உள்ளது என்று அர்த்தம். 140 – அதற்கு கீழ் இருந்தால் ‘இயல்பான நிலை’ என்று அர்த்தம். ஒருவருக்கு 140-க்கு மேல் சர்க்கரை அளவு செல்லும்போது, அவருக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த மற்றொரு பரிசோதனைக்குப் பரிந்துரைக்கப்படும்.


இதன்படி, சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் ரத்தம் பரிசோதனை செய்யப்படும். இதில் 140-க்கும் குறைவாக இருந்தால் அது சராசரி. 200-க்கு மேல் இருந்தால் சர்க்கரை நோய். இதிலும்குழப்பம் என்றால், அடுத்தக்கட்டப் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படும்.


2 ஹெச்பிஏ1சி (HbA1c)பரிசோதனை:முன்னரே சொன்னது போல் நம்முடைய ரத்தத்தில் ரத்தச் சிவப்பு அணுக்கள் உள்ளன. குளுகோஸானது இந்தச் சிவப்பு அணுவில் எளிதில் ஒட்டிக்கொள்ளும். இந்தச் ரத்த சிவப்பு அணுக்கள் எட்டு முதல் 12 வாரங்கள் வரை இருக்கும். அதன் பிறகு அவை அழிக்கப்படும். இந்தச் ரத்த சிவப்பு அணுவைப் பரிசோதனைசெய்வதன் மூலம், எட்டு முதல் 12 வாரங்களில்ல் ஒருவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு என்பதைக் கண்டறிய முடியும். பரிசோதனை முடிவில் 6.5 சதவிகிதத்துக்கு மேல் என்று வந்தால், அவருக்கு சர்க்கரை நோய். 5.7 முதல் 6.4 சதவிகிதம் வரை இருந்தால், சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலை. 5.7 சதவிகிதத்துக்கும் கீழ் இருந்தால், அது இயல்பான அளவு (Normal).
                         

சிலர், சர்க்கரை நோய் ரத்தப் பரிசோதனைக்கு ஒரு வாரத்துக்கு முன்னர் இருந்தே சரியான உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சிகள் மேற்கொண்டு சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டுவருவர். இவர்களுக்கு பரிசோதனை செய்யும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு சரியாக உள்ளதுபோல தோன்றும். இந்த ஹெச்பிஏ1சி பரிசோதனை செய்வதன்- மூலம், மூன்று மாதக் காலத்து சர்க்கரை அளவைக் கணக்கிடலாம்.

திரை இசையில் திருப்பம் உண்டாக்கிய இளையராஜா: கிராமிய இசைக்கு புத்துயிர் அளித்தார்

தமிழ்த் திரையுலகில் `இசை'யாகவே வாழ்ந்து கொண்டிருப்பவர் `இசைஞானி' இளையராஜா. 1976-ம் ஆண்டு `அன்னக்கிளி' மூலம் சினிமாவுக்குள் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்த இளையராஜாவுக்கு, இசைத்துறையில் இது 31-வது ஆண்டு.

"அன்னக்கிளி'' படத்தில் "அன்னக்கிளி உன்னைத்தேடுதே'', "மச்சானைப் பார்த்தீங்களா'' எனத் தொடங்கிய இந்த இசையருவி, நதியாக ஓடத்தொடங்கி இன்று கடல் அளவுக்கு தன் இசை எல்லையை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறது.

இளையராஜா பிறந்தது மதுரை மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரம் கிராமம். 1943-ம் ஆண்டு பெற்றோருக்கு ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவருக்கு அடுத்து ஆறாவதாக பிறந்தவர் அமர்சிங் என்ற கங்கை அமரன்.

தனது குடும்பம் பற்றி இளையராஜா கூறுகிறார்:

"நான் பிறந்தது மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணைபுரம் என்னும் கிராமத்தில். இப்போது அது தேனி மாவட்டத்தில் உள்ளது.

அப்பா பெயர் ராமசாமி. அம்மா சின்னத்தாயம்மாள். ஊரில் அப்பாவை `கங்காணி' ராமசாமி என்றால்தான் தெரியும். அப்பாவுக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவிக்குப் பிறந்த குழந்தைகளில் நான் ஐந்தாவது. ஆறாவது என் தம்பி அமரன் (கங்கை அமரன்).

எங்களுக்கு மூத்த அண்ணன் பாவலர் வரதராஜன். அடுத்து அக்காள் கமலம். அடுத்து பத்மாவதி. அடுத்தவர் அண்ணன் பாஸ்கர்.

1943-ம் ஆண்டு நான் பிறந்தேன். தமிழில் வைகாசி மாதம் 20-ந்தேதி. (3-6-1943)

அப்பாவுக்கு ஜோதிடம் தெரியும். என் பிறந்த நேரத்தை கணித்த அப்பா, அம்மாவிடம் "இவன் நம் வீட்டிலேயே முக்கியமானவன். இவனால் சீரும் சிறப்பும் வருவதையெல்லாம் பார்த்து சந்தோஷம் அனுபவித்த பிறகுதான் நீ போவாய்'' என்று கூறியிருக்கிறார்.

அப்பா சொன்னதில் உள்ள `உள் அர்த்தம்' அம்மாவை பாதிக்கச் செய்துவிட்டது. "நீங்க என்ன சொல்றீங்க?'' என்று பதட்டத்துடன் கேட்டிருக்கிறார்.

பதிலுக்கு அப்பா, "எல்லாம் இவன் ஜாதகத்தை கணித்த பிறகே சொல்கிறேன். இவனுக்கு 9 வயது வரும்போது நான் போய்விடுவேன்'' என்று சொல்லியிருக்கிறார்.

அப்பா அவர் சொன்னதுபோலவே என் 9-வது வயதில் (1952-ம் வருஷம் ஏப்ரல் 10-ந்தேதி) காலமாகிவிட்டார். அப்பா இறக்கும்போது நான் நாலாவது படித்துக் கொண்டிருந்தேன். உயிர் பிரியும் நேரத்தில் என் கையையும் அண்ணன் பாஸ்கரின் கையையும் பாவலர் அண்ணன் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டு, அண்ணன் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார். அத்தோடு உலக வாழ்க்கையில் இருந்து விடைபெற்றுக்கொண்டார்.

எனக்கு அப்பா வைத்த பெயர் ஞானதேசிகன். ஆனால் பள்ளியில் சேர்க்கும்போது ராஜையா என்று மாற்றி விட்டார். ஆனால் `ராசையா' என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டேன். பட்டிக்காடு அல்லவா! `ராஜையா'வுக்கு பதில் ராசையாதான் அவர்களுக்கு சுலபம்.

நான் படிப்பிலும் பெரிய விசேஷம் கிடையாது. பண்ணைபுரத்தில் பெருமாள் வாத்தியார் என்பவர் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்தார். அதில் ஐந்தாம் வகுப்பு வரைதான் இருந்தது.

பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதுதான் சினிமா பார்க்கும் வழக்கம் ஏற்பட்டது. ஊரில் ஒரு டூரிங் டாக்கீஸ் இருந்தது. அதில் நானும் பாஸ்கர் அண்ணனும் அடிக்கடி சினிமா பார்க்கச் செல்வது வழக்கமாகி விட்டது.

இப்படி பார்த்த ஒரு படம் பானுமதி, நாகேஸ்வரராவ் நடித்த "லைலா மஜ்னு.'' இந்தப் படத்தை பாடல்களுக்காக மூன்று நான்கு முறை பார்த்தோம். பாடல்கள் எல்லாம் எங்களுக்கு மனப்பாடமாகி விட்டது. அண்ணன் பாவலர் எப்போதுமே அந்தப் பாடல்களை பாடிக்கொண்டிருப்பார்.

அந்தப் படத்தில் வரும் ஒரு காட்சி எனக்குள் ஆழமாக பதிந்து விட்டது. ஆசிரியர் பாடம் எழுதச் சொல்ல, கயஸ் மட்டும் `லைலா லைலா' என்று தன்னுடைய சிலேட்டில் எழுதிக்கொண்டிருப்பான். இதைப் பார்த்த ஆசிரியர் கயஸின் கையில் பிரம்பால் விளாசி விடுவார். கை புண்ணாகி விடும். எங்கள் வகுப்பிலும் ஆசிரியர் ஏதோ எழுதச் சொல்லியிருந்தார். முந்தின நாள் இரவு ஆட்டம் பார்த்த ஞாபகத்தில் சிலேட்டில் `லைலா லைலா' என்று எழுதியிருந்தேன்.

என்ன நடந்தது தெரியுமா? படத்தில் கயஸுக்கு விழுந்த அடியை விட எனக்கு பலமாக அடி விழுந்தது. கயஸுக்கு வருத்தப்பட என் மாதிரி ரசிகர்கள் இருந்தார்கள். எனக்காக வருத்தப்படத்தான் யாருமில்லை.

இந்தப் படத்தின் பாடல்களால் - நான் வளர வளர, கயஸை விடவும் லைலா மீது எனக்கு காதல் அதிகமாகி விட்டது. அந்தப் படத்துக்கு சி.ஆர்.சுப்பராமன் இசையமைத்திருந்தார். பின்னாளில் இவரே என் மானசீக குரு ஆனார்.

அண்ணனுக்கு (பாவலர் வரதராஜன்) பாட்டு, நாடகம், கச்சேரி என்பதில் ஆர்வம் அதிகம். திருச்சி வானொலி நிலையத்தில் நிலைய வித்வானாக இருந்த மரியானந்த பாகவதரிடம் கொஞ்சம் சங்கீதம் கற்றிருந்தார். இசை எனக்கு அறிமுகமானதும், ஆர்வமானதும் அண்ணனால்தான். நான் ஓரளவுக்கு ராகங்கள் பற்றி தெரிந்து கொண்டதற்குக் காரணமும் அவர்தான். இப்படித்தான் எனக்கு ராகங்கள் கல்யாணியும், சங்கராபரணமும், கரகரப்பிரியாவும், தோடியும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய அளவுக்கு தெரியவந்தது.

தவறாக புரிந்து கொண்டுள்ள ஏழு அறிவியல் உண்மைகள்!

என்னதான் அறிவியல் வளர்ந்தாலும், மக்கள் சில விடயங்களை தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.


வைரம்

வைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆபரணம் ஆகும் . இது எங்கிருந்து கிடைக்கிறது என்று தெரியுமா, ஆம் பூமிக்கு அடியில் புதைந்துள்ள இறுகிப்போன நிலக்கரியில் இருந்து தான் இந்த அரிய வகை வைரம் நமக்கு கிடைக்கிறது.

ஆனால் இது எந்த ஆழத்திலிருந்து கிடைக்கிறது என்பது எத்தைனை பேருக்கு தெரியும்.

அனைவரும் இது பூமிக்கு அடியில் 2 மையில் தொலைவில் கிடைக்கும் என்று கருதியிருப்பார்கள்.

ஆனால் பூமிக்கு அடியில் 90 மையில் தொலைவில் தான் இந்த வைரம் இருக்கும்.

வௌவால்

வௌவால் ஒரு வித்தியாசமான உயிரினம், இவைகளுக்கு கண்கள் இல்லை என்பது உண்மைதான்.

ஆனால் இந்த உரினத்தால் பார்க்கவும் முடியும் . இவைகள் தங்கள் மீஒலி எனப்படும் சத்தத்தை எழுப்பி அதன் மூலம் தனக்கு எதிரில் என்ன பொருள்கள் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளும் தன்மை கொண்டது.

சுத்தமான தண்ணீர்

சுத்தமான தண்ணீரில் அவ்வளவாக மின்சாரம்பாயாது. ஆனால் தண்ணீரில் நின்று மின்சாரக் கம்பியய் பிடித்தால் மின்சாரம் பய்கிறதே அது ஏன் என்று கேட்கலாம்.

பொதுவாக தண்ணீரில் பல வகையான மினரல்கள் மற்றும் அழுக்குகள் படிந்திருப்பதால் அதில் மின்சாரம் பாய்கிறது.

ஆனால் சுத்தமான நீரில் இப்படிப்பட்ட தாதுக்கள் இல்லாதிருப்பதால் மின்சாரம் பாய்வதில்லை.

மருக்கள்

மனிதனின் மருக்கள் உருவாகக் காரணம் தவளைகள் மற்றும் தேரைகள் என்று பலரும் கருதுகின்றனர் இது தவறான கூற்றாகும்.

இதற்கு காரணம் தேரைகள் அல்ல, மனிதர்கள் தான், மருக்கள் இருக்கின்ற ஒருவரிடம் கைகளைக் குலுக்கினால் இவ்வாறான மருக்கள் தோன்றும் என்று அறிவியல் அறிஞர்கள் பலர் கூறியுள்ளார்கள்.

தீக்கோழி

தீக்கோழியை யாராவது அச்சுறுத்தினால் அவற்றின் தலையை மணலில் புதைத்துக்கொள்ளும் என்று சிலர் கூறுவார்கள்.

ஆனால் அவற்றினை அச்சுறுத்தினால் அவைகள் இறந்தவைகளைப் போல செயல்பட்டு தப்பிக்க முயலுமாம்.

மனித இரத்தம்

மனிதன் இறந்த பின்பு மனித இரத்தம் பார்ப்பதற்க்கு நீலமாகவோ அல்ல அடர்ந்த சிவப்பு நிறமாகவோ இருக்காது.

ஆனால் தோலின் வழியாக பார்த்தால் இரத்தமானது எப்பொழுதும் நீல நிறமாகவே காட்சியளிக்கும்.