Monday, December 28, 2015

கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்?

கல்யாண மோதிரம்' ஏன் நான்காவது விரலில் மட்டும் சூடப்படுகின்றது?
இதற்கு  ஒரு அருமையான விளக்கம் உள்ளது.


பெருவிரல் - நம் பெற்றோர்களை குறிப்பது.

ஆள்காட்டி விரல் - நம் உடன்பிறப்புகளை குறிப்பது.

நடுவிரல் - நம்மை குறிப்பது.

மோதிர விரல் - நம் வாழ்க்கை துணையை குறிப்பது.

சிறுவிரல் - நம் வாரிசுகளை குறிப்பது.


முதலில் இரு உள்ளங்கைகளை முகம் நோக்கி விரித்து கொள்ளுங்கள்.

இரண்டு நடு விரல்களையும் (நம்மை குறிப்பது) கீழ் நோக்கி வளைத்து நகமும் நகமும் தொட்டு கொள்ளும்படி இறுக்கமாக வைத்து கொள்ளுங்கள்.

உள்ளங்கையை அப்படியே மூடுவது போல் வைத்து மற்ற நான்கு விரல்களும் முனையோடு முனை தொடும்படி வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது பெரு விரல்களை (பெற்றோர்கள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் பெற்றோர்கள் நம்முடன் காலத்தின் விளையாட்டு காரணம் கடைசி வரை இருக்க மாட்டார்கள்.

இப்போது பெரு விரல்களை இணைத்து கொள்ளுங்கள். ஆள்காட்டி விரல்களை (உடன் பிறப்புகள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் உடன் பிறந்தவர்கள் ஒரு வயது வந்தவுடன் அவரவர் வாழ்க்கையை தனியாக அமைத்துக்கொண்டு போய் விடுவர்.

ஆள்காட்டி விரல்களை இணைத்து கொள்ளுங்கள். சுண்டு விரல்களை (நம் குழந்தைகள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் நம் குழந்தைகள் வளர்ந்து பெரிதாகி, கல்யாணம், என்று நம்மை விட்டு பிரிந்து விடுவர்.


கடைசியாக, சுண்டு விரல்களை சேர்த்து கொண்டு, மோதிர விரல்களை (வாழ்க்கைத்துணை) பிரித்து பாருங்கள். ம்ம்... பிரித்து பாருங்கள். என்ன ஆச்சர்யமாக இருக்கின்றதா??

ஏனெனில் வாழ்க்கைத்துணை (மனைவி/கணவன்) மட்டுமே இடையில் வந்தாலும் இறுதி வரை என்றுமே கூட இருப்பது

விமானத்தின் எப்பகுதியில் அமருவது பாதுகாப்பானது....?

விமானத்தில் பயணம் மேற்கொள்ளும்போது, விமானத்தின் எப்பகுதியில் உள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்வது விபத்து காலங்களில் சற்றே பாதுகாப்பானதாக இருக்கும் என்பது குறிந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வானில் பறக்கும் விமானம் பத்திரமாக தரையில் இறங்கும் வரை நம் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பது தான் நிஜம். சுமார் 30000முதல் 50000 அடி உயரத்தில் அதுவும் 800 முதல் 1000 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும்விமானம் ஏதோ காரணத்தினால் கீழே விழும் பொழுது அதில் பயணம் செய்வோர் உயிர் பிழைப்பது என்பது மிக மிக அரிது. இருந்த போதிலும் அது போன்ற இக்கட்டான காலகட்டத்தில் விமானத்தின் எப்பகுதி இருக்கையில் அமர்ந்தால் சற்றே பாதுகாப்பாக இருக்கும் என்பது தான் இந்த ஆய்வின் நோக்கம்.

பிரிட்டனில் இருந்து செயல் படும் ஒரு தனியார் தொலைக்காட்சி போயிங்குடன் இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. விமானம் ஒன்றில் கேமரா பொருத்தப்பட்டு, விமானத்தினுள் "மாதிரி" மனிதர்கள் அமர்த்தப்பட்டு அந்த விமானம் விபத்துக்குள்ளாகும் போது உள்ளே நிகழும் பாதிப்புகளை கண்டறிந்தனர். இவை மட்டும் இல்லது இதுபோன்ற கடந்த 30 வருடங்களாக பல்வேறு தருணங்களில்நடத்தப்பட்ட ஆய்வும் கருத்தில் கொள்ளப்பட்டது.

அதன்படி விமானம் விபத்துக்கு உள்ளாகும் போது, விமானத்தில் முதல் வகுப்பு வகுப்பு அல்லது பிசினஸ் கிளாஸ் இருக்கைகள் தான் முதலில் மிகுந்த பாதிப்பு உள்ளாகிறது. அதாவது முதல் பதினொன்று இருக்கைகள் தங்கள் கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்து சிதறி விடுகின்றன. விமானம் வந்த வேகத்தில் தரையில் மோதும் போது முதல் 11 இருக்கைகள் முற்றிலும் சேதம் அடைகின்றன. எனவே இதில் பயணம் செய்தவர்கள் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அறவே இல்லை என கூறலாம். அதே நேரத்தில் விமானத்தில் பின்புறம் அதாவது எக்னாமிக் கிளாஸ் எனப்படும் இரண்டாம் வகுப்பு இருக்கையில் பயணம் செய்யும் பயணிகள் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரிகிறது.

இந்த ஆய்வு குறிந்து கருத்து தெரிவித்துள்ள போயிங் நிறுவனம், விமானத்தில் எல்லா இருக்கையும் ஒரே அளவு பாதுகாப்பு உடையது தான். விமானம் விபத்துக்குள்ளாகும் போது எவ்வாறு தரையில் படுகிறது என்பதை பொருத்து தான் அதன் பாதிப்பு அமையும். மேலும் பயணிகள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் அவர்கள் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு, எனவே பாதுகாப்பான விமான பயணத்திற்கு சீட் பெல்ட் தான் மிக அவசியம் என தெரிவித்துள்ளது.

பாதுகாப்பான விமானம் விபத்துக்குள்ளாவதில்லை என்றும், அதுபோன்ற விமானத்தில் பயணம் செய்வது தான் பாதுகாப்பானது என்று ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை நடந்த விமான விபத்துக்களில் அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்தவர்கள் அனைவரும் விமானத்தில் எக்னாமிக் கிளாஸ் எனப்படும் இரண்டாம் வகுப்பு இருக்கையில் பயணம் செய்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசவத்திற்குப் பின் வயிற்றுச் சதையை குறைக்க சில எளிய வழிகள்!!!

பெண்களுக்கு குழந்தைப்பேறு ஒரு சந்தோஷமான விஷயம் என்றால் அந்த சந்தோஷ நிகழ்வுக்குப் பின்பு வயிற்றுச் சதையை கட்டுப்படுத்துவது மற்றொரு சவாலான விஷயம். புதிதாக தாய்மைப் பேற்றை அடைந்த எல்லா பெண்களும் பிரசவத்திற்குப் பிறகு வயிற்றுப் பகுதியில் சேர்ந்த சதையை எப்படி குறைப்பது என்று கவலைப்பட ஆரம்பித்துவிடுகின்றனர்.

வயிற்றுச்சதை என்று பார்க்கும் போது இரண்டு வகை கொழுப்புத்திசுக்களால் இந்த சதை உருவாகிறது. ஒன்று வயிற்றின் உள் உறுப்புகளை சூழ்ந்து சேர்ந்திருக்கும் கொழுப்பு, மற்றொன்று தோலுக்கடியில் சேகரமாகியிருக்கும் கொழுப்பு. வயிற்றின் உள்ளே சேகரமாகியிருக்கும் கொழுப்பை நம்மால் பார்க்கவோ உணரவோ முடியாது. ஆனால் இது மிக அபாயகரமானது. அதே சமயம் தோலுக்கு அடியிலுள்ள கொழுப்பை நம்மால் தொட்டுணர்ந்து பார்க்க முடியும். மேலும் உள்ளே உள்ள கொழுப்பின் அளவு அதிமாகும் போது, அது தோலுக்கு கீழ் உள்ள கொழுப்பையும் புறந்தள்ளி வயிற்றை இன்னும் பெரிதாக தோற்றமளிக்க வைத்துவிடுகிறது.

வயிற்றுப் பகுதியில் பல காரணங்களால் அதிக சதை சேர்கிறது. கருவுற்றிருக்கும் போது வயிற்றைச் சுற்றிலும் இயற்கையாகவே எடை அதிகரித்து விடுகிறது. பிரசவத்திற்கு பின்பு இந்த எடையை குறைப்பது சிரமமாகத் தான் இருக்கும். எனினும் வயிற்றுக் கொழுப்பை குறைப்பதற்கான மிகச் சிறந்த ஆலோசனைகளை இங்கு தருகிறோம். அதைப் படித்து பின்பற்றி, வயிற்றுக் கொழுப்பை கரைத்து, ஸ்லிம்மாக மாறுங்கள்.

பிரசவத்திற்குப் பின் வயிற்றுச் சதையை குறைக்க சில எளிய வழிகள்!!!

புதிதான பழங்கள்

 பழங்கள் சாப்பிடும் போது, அவற்றை நீண்ட நேரம் ஃப்ரிட்ஜில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் அதில் உள்ள சத்துக்கள் போவதற்கு வாய்ப்புள்ளது. எனவே எப்போதும் நல்ல பிரஷ்ஷான பழங்களை சாப்பிட வேண்டும்.

சமைத்த உணவு

 பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பாக்கெட் பண்டங்களை தவிர்த்துவிட்டு, வீட்டில் சமைத்து சாப்பிட வேண்டும். இதனால் ஆரோக்கியமற்ற கொழுப்புக்கள் சேர்வதை தவிர்க்கலாம்.

காய்கறி மற்றும் பழங்கள்

 காலத்துக்கு ஏற்றபடி பல ரகங்களில் கிடைக்கும் புதிய காய்கள் மற்றும் பழங்கள் உடலுக்கு மிகவும் ஏற்றவை. இவை உடலுக்கு வித்தியாசமான சத்துப்பொருட்களை அளிக்கின்றன. அதுமட்டுமின்றி ஒரே மாதிரியான உணவை தினமும் சாப்பிடுவதை தவிருங்கள். அதே சமயம் அதிகமாகவும் எதையும் சாப்பிட வேண்டாம்.

உடற்பயிற்சி

 நடைப்பயிற்சியை மிஞ்சிய உடற்பயிற்சி ஏதும் இல்லை. எனவே அதற்கான நேரம் மற்றும் இடத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இருப்பினும் அதற்கு முன் மருத்தவரிடம் கலந்தாலோசியுங்கள்.

யோகா

 பொருத்தமான யோகா பயிற்சிகள் உடலை பழைய நிலைக்கு கொண்டு வரக்கூடியவை. அவிற்றில் பிராணயாமம் ஒன்று. ஆகவே அடிப்படைகளுடன் சொல்லித் தரும் ஒரு நல்ல யோகா வகுப்பில் சேர்ந்து கொள்ளுங்கள். இதனால் உடல் மட்டுமல்லாது, மனதிற்கும் மிகச்சிறந்த நன்மைகளை அளிக்கும்.

உணவை நன்கு மென்று சாப்பிடுங்கள்

 உடலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமென்றால், உணவை அவசர அவசரமாக சாப்பிடாமல், நன்கு மென்று சாப்பிடுவது மிகவும் அவசியம். இது வாய்ப் பகுதிக்கு நல்ல பயிற்சியும் கூட. அதுமட்டுமின்றி, இதனால் அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கலாம்.

தாய்ப்பாலை தவறாமல் அளித்தல்

 உடலை பார்த்துக் கொள்ளும் பரபரப்பில் தாய்ப்பால் அளிக்க தவறுவது குழந்தைக்கு மட்டுமல்ல, உங்கள் உடலையும் பாதிக்கும். எனவே மார்பகப் புற்றுநோய் அண்டாமல் இருக்கவும், மார்பக சதைகள் இளைக்கவும் தாய்ப்பால் கொடுப்பது மிகவும் அவசியம்.
மேற்கூறியவற்றையெல்லாம் தவறாமல் செய்து வந்தால், வயிற்றுத் தசை குறைவதை நன்கு காணலாம்.

சூர்யா ஏன்..? herotalkies நிறுவனத்தில் முதலீடு செய்கிறார்

சென்னையில் இருந்து இயங்கும் HeroTalkies.com , வெளிநாட்டு வாழ் தமிழ் மக்களுக்காக,தமிழ் திரைபடங்களை இணைய உரிமை பெற்று நேர்மையான முறையில் இணையம் மூலம் வழங்கி வருகின்றனர். இந்நிறுவனம்நடிகர் சூரியாவின் 2D Entertainment நிறுவனம், மற்றும்இதரமுதலீட்டாளர்கள்சஞ்சய்அர்ஜுன்தாஸ் வாத்வா(முன்னணிதிரைப்படவிநியோகஸ்தர்), வெளிநாட்டு வாழ் இந்தியர்களான பாலாஜி பஞ்சபகேசன்(UK), ஷங்கர் வெங்கடேசன்(Poland), மற்றும் வசிகரன் வெங்கடேசன் (USA)இருந்து தங்களின் முதல் சுற்று முதலீட்டை பெற்றுள்ளனர்.

2014ல் தொடங்கப்பட்ட 2D Entertainment நிறுவனம், 36 வயதினிலே, பசங்க2 போன்ற தரமான படங்களை தயாரித்துள்ளது. மேலும்அடுத்துசூரியா நடித்து கொண்டிருக்கும் பிரமாண்ட படமான “24” படத்தைதயாரித்துக் கொண்டிருக்கிறது. “ஒரு முன்னோக்குப் பார்வையோடு இயங்கும் நிறுவனமாக, நாங்கள் வெவ்வேறு முயற்சிகளுடன் இந்த பொழுதுபோக்கு துறையில் எங்களது வளர்ச்சியை மேம்படுத்த விளைகிறோம், அதன் வழியாகவே இந்தமுயற்சியில் நாங்கள் முதலீடு செய்துள்ளோம்”.என இந்நிறுவனத்தின்தலைமை நிர்வாக அதிகாரிதிருராஜசேகர்பாண்டியன் கூறியுள்ளார்.

“நானும் என் சகோதரன் ஆதியும்மிகுந்த ஆவலுடன் எங்கள் முதலீட்டாளர்களுடன் இணைந்து செயல்பட காத்துக் கொண்டிருக்கிறோம். திரு சூரியா போன்ற முன்னணி நடிகர் இதில் விருப்பம் காட்டியது, எங்களை சிறந்த முறையில் ஊக்குவிப்பதாக இருக்கிறது” எனஇணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பிரதீப் அவர்கள் தெரிவித்தார்.

இந்த முதலீட்டில் பெரும் பங்கினை திரைப்படங்கள் மற்றும்வாடிக்கையாளர் கையகப்படுத்தலில் பயன்படுத்த முடிவு எடுக்கப்பட்டுஇருகின்றது.  திரைபடங்கள் விநியோகம் செய்ய ஒரு தரமான மாற்று வழியினை கொண்டு வந்து. Piracy ஒழிக்கும் இந்நிறுவனத்தின் நோக்கத்தில், இது பெரும்வாரியாக உதவும்.

Herotalkies.com பிரதீப் மற்றும் ஆதித்தியன் அவர்களால் 2014ல் தொடங்கப்பட்டது.திரைப்படங்களை இணையம் வழியாக விநியோகம் செய்வதில் ஒரு சிறந்த மாற்று முறையினை கொண்டுவந்தது.

திரைப்படதயாரிப்பளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு தொடர்பினை கொண்டுவந்து, திருட்டு விசிடி மற்றும் இணையதளங்களால் வரும் பிரச்சனைகளை தீர்க்க விளைகிறது. திரைக்கு வரும் திரைப்படங்களை இரண்டு அல்லது ஐந்து வாரங்களுக்குள் தங்களின்இணையத்தில், வெளிநாட்டுவாழ் மக்களுகாக வெளியிடுவது இவர்களின் முக்கிய அம்சமாகும். நிறுவனம் ஆரம்பித்த சிறிய காலத்திலே, ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து, பல ஆயிரம் வாடிக்கையாளர்கள் சேர்ந்துள்ளனர்