Wednesday, December 16, 2015

யார் குற்றவாளி? பாடலைப்பாடிய சிம்புவா? அல்லது வெளியிட்டவரா?

சிம்பு குற்றவாளியா? நிரபராதியா?

சிம்பு உருவாக்கியுள்ள பீப் பாடல் அவருக்குப் பலத்த எதிர்ப்பை உருவாக்கிவிட்டது. சிம்புவைக் கைது செய்யவேண்டும், அவரை திரையுலகில் செயல்பட சில ஆண்டுகளுக்குத் தடைவிதிக்கவேண்டும், கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்று பலரும் பலவிதமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் எல்லோருடைய ஒட்டுமொத்த உணர்வும், இந்தப்பாடலை உருவாக்கியதற்காக சிம்பு ஏதோவொருவகையில் தண்டிக்கப்படவேண்டுமென்பதே.

இந்தப்பாடல் வெளியானபோது, அனிருத் இசையில் சிம்பு பாடியதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அனிருத், இதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்று சொல்லியிருக்கிறார். அதேசமயம், டி.ராஜேந்தர் இது தொடர்பாக காவல்துறையில் கொடுத்துள்ள புகாரில், அனிருத் இசையமைப்பில் சிம்பு பாடியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இது ஒருபுறமிருக்கட்டும்.

அந்தப்புகாரில், டி.ராஜேந்தர் குறிப்பிட்டுள்ளபடி பார்த்தால் இந்தப்பாடல் டம்மியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அதை உருவாக்கியது சிம்பும் அனிருத்தும்தான். சிம்புவின் புகழைக் கெடுப்பதற்காக யாரோ அதைத் திருடி வெளியிட்டுவிட்டார்கள் என்று சொல்லியிருக்கிறார். அவருடைய கூற்றின்படியே அந்தப்பாடலை உருவாக்கியது சிம்புதான் என்று உறுதியாகியிருக்கிறது. திரைத்துறையில் முதலில் டம்மியாகச் சில சொற்களைப் போட்டு பாடலை உருவாக்குவார்கள். அதன்பின் அதற்காக வரிகளை எழுதிச் சேர்ப்பார்கள். அந்தவகையில் இது டம்மியாக உருவாக்கப்பட்டது. தேவைப்படுகிறபோது நல்ல சொற்களைப் போட்டு பாடலை உருவாக்கி பயன்படுத்திக்கொள்வார்கள். டி.ராஜேந்தரின் புகாரின்படி பார்த்தால் அப்படி டம்மியாக உருவாக்கப்பட்ட பாடல் என்று தெரிகிறது. இதனால் உருவாக்கத்தில் குற்றமில்லை என்பது அவருடைய தரப்பாக இருக்கிறது. இதனால், பாடலை உருவாக்கியவர் குற்றவாளியா? அதை வெளியிட்டவர் குற்றவாளியா? என்கிற கேள்வி எழுகிறது.

சில நல்ல சொற்கள்கூட காலப்போக்கில் வசைச்சொல்லாக மாறிவிடுகின்றன. அந்தவகையில் வசைச்சொல்லாகவே அறியப்படுகிற அந்தச்சொல்லை வைத்துக்கொண்டு ஒரு பாடலை உருவாக்கவேண்டும் என்கிற எண்ணம் சிம்புவுக்கு வந்ததும், ஒரு பாடல் தயாராகிறநேரத்தில் (அது டம்மி என்றாலும் கூட) குறைந்தது நான்கைந்து பேராவது இருப்பார்கள். கழிவறையில் தனியாக இருப்பதுபோல் தனியாக ஒரு பாடலைப் பதிவு செய்யவியலாது. பாடல் உருவாக்கத்தின்போது ஒவ்வொரு சொல்லும் மட்டுமல்ல ஒவ்வொரு எழுத்து பற்றியும் கவனமாக இருப்பார்கள் என்பது பாடல்கள் உருவாக்கத்தில் உள்ளவர்களுக்கு நன்கு தெரியும். இப்பாடல் பதிவுசெய்யப்படும்போது அந்தக்கூடத்தில் என்னென்னவெல்லாம் பேசிச்சிரித்திருபபார்கள் என்று நினைக்கும்போதே கோபம் கொப்பளிக்கிறது.

வெகுமக்களுக்குத் தெரிந்த ஒரு கலைஞன், நிறைய இளைஞர்களை ரசிகர்களாகக் கொண்டவனுக்கு இம்மாதிரி ஒரு எண்ணம் வந்ததே முதல்குற்றம் என்கிறார்கள். தான் யார்? தன் குடும்பம் எத்தகையது? தான் செய்யும் செயல்கள் சமூகத்தை எவ்வளவு பாதிக்கும்? என்பதெல்லாம் நன்கு தெரிந்த ஒரு நபர், இப்படிச் செய்யத் துணிகிறாரென்றால் அவருடைய மனநிலையை என்னவென்று சொல்வது? உண்மையிலேயே நல்லமனநிலையுடன்தான் இருக்கிறாரா? என்கிற கேள்விகள் பலருக்கும் வந்திருக்கிறது. அப்பனுக்குப் புள்ள தப்பாம பொறந்திருக்கு என்பார்கள் இங்கோ நிலைமை தலைகீழ், புள்ளைக்கு அப்பன் தப்பாமப் பேசறார் என்று சொல்கிற மாதிரி, பாடல்வரி அது உச்சரிக்கப்பட்டவிதம் அதில் சொல்லப்படும் கருத்து ஆகிய எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் மகனின் புகழைக் கெடுக்கப்புறப்பட்டுவிட்டார்கள் என்று புகார் கொடுக்கக்கிளம்பிவிட்டார் டி.ராஜேந்தர். இதுவரை பெண்களைத் தொட்டுக்கூட நடிக்காத பெருமைக்குச் சொந்தக்காரரான டி.ஆர் இந்த விசயத்தில் விமர்சனம் எதுவுமில்லாமல் மகனுக்கு ஆதரவாகப் பேசியதன் மூலம் இதுவரை சேர்த்த பெருமைகளை இழந்துவிட்டார் என்று பேசிகிறார்கள்.

இந்தப்பாடலை திருட்டுத்தனமாக வெளியிட்டது யார் என்று கேள்விக்குப் பெரும்பான்மையானோரின் பதில் சிம்பு என்றுதானிருக்கிறது. காவல்துறை உண்மையாகவே துப்றியத் தொடங்கினால் அவர்தான் மாட்டிக்கொள்வார் என்று சொல்லப்படுகிறது. அல்லது அவரே டம்மியாக ஏதாவதொருவரை சரணயடைய வைக்கலாம். அப்படி சரணடைகிறவர், வெளியிட்டதற்கு என்ன காரணம் சொல்வார்? இந்த ஆழ்ந்த கருத்து புதியசிந்தனையை இந்த வையகம் கொண்டாடவேண்டும் என்று நினைத்தே வெளியிட்டதாகச் சொல்வாரா? நீங்கள் ரசிக்கும் சிம்புவின் இன்னொரு முகத்தை மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக வெளியிட்டேன் என்று சொல்வாரா? அப்படிச் சொல்வாரானால் அவர் குற்றவாளியா? எது எப்படியானாலும் இப்படி ஒரு பாடலை மொபைலில் வைத்துகொண்டு திரிபவர்களை ஆங்கிலத்தில் “பெர்வெர்ட்” என்று சொல்வார்கள்.

சகலரும் அறிந்திருக்க வேண்டியமருத்துவக் குறிப்புகள்

1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.

2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.

6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.
பெண்களுக்காக…

10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.

12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.

13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.

புரவி மீது ஏறி பறந்து வருகிறார் 'மருதநாயகம்'.. 18 ஆண்டுகளுக்குப் பிறகு!

கமல் நடிப்பில் பாதியில் கைவிடப்பட்ட மருதநாயகம் திரைப்படம் தற்போது மீண்டும் உருவாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கமல்ஹாசன் எழுதி அவரே தயாரித்து இயக்கிய படம் மருதநாயகம். 1997 ம் ஆண்டு தொடங்கபட்ட இப்படத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடித்தார்.

ஆனால் நிதிப்பற்றாக்குறை காரணமாக மருதநாயகம் படம் கைவிடப்பட்டது. அதற்குப்பின் மருதநாயகம் குறித்து எழுந்த கேள்விகளுக்கு அப்படத்தைத் தயாரிக்க யாராவது முன்வந்தால் படம் மீண்டும் தொடங்கப்படும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அய்ங்கரன் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் மருதநாயகம் படத்தின் போஸ்டர் போஸ்டரை வெளியிட்டு இருந்தனர்.

இதனால் மருதநாயகம் பற்றி மீண்டும் தகவல்கள் வெளியாக ஆரம்பித்து இருக்கின்றன. மேலும் சில நாட்களுக்கு முன்னர் கமல் அளித்த பேட்டியில் லண்டனில் உள்ள தனது நண்பர் ஒருவர் இந்தப் படத்தை தயாரிக்க முன்வந்திருப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் அய்ங்கரன் படத்தின் ட்விட்டர் பக்கத்தில் மருதநாயகம் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டு இருப்பதால் லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கலாம் என்று கூறுகின்றனர்.

ரஜினிகாந்தின் எந்திரன் 2 படத்தை தற்போது லைக்கா நிறுவனம் தயாரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

அஜீத், தனுஷைத் தொடர்ந்து ரஜினி படத்தை ரீமேக் செய்யும் விஜய்?

ரஜினியின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றான மன்னன் திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ரஜினியின் படங்களை ரீமேக் செய்வது மற்றும் படங்களுக்கு அவரின் தலைப்புகளை வைப்பது ஆகியவை தமிழ்த் திரையுலகில் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.

ரஜினியின் மிகப்பெரிய ஹிட் படமான பில்லாவை 8 வருடங்களுக்கு முன் இயக்குநர் விஷ்ணுவர்த்தன் ரீமேக் செய்ய அஜீத் நடித்து இருந்தார்.

அஜீத்தின் நடிப்பில் வெளியான பில்லா வெற்றிப் படமாக மாறியதுடன் வசூலையும் குவித்தது. அதற்குப் பின்னர் ரஜினி படங்களை ரீமேக் செய்த அனைவரும் அதில் தோல்வியே கண்டனர்.

இந்நிலையில் மன்னன் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் ரீமேக் செய்ய அதில் விஜய் நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அநேகமாக விஜய்யின் 60 வது படம் தொடங்கிய ஒரு சில மாதங்களில் இந்தப் படத்தை தொடங்கலாம் என்று கூறுகின்றனர்.

மன்னன் திரைப்படமும், ரஜினியின் வேடமும் விஜய்க்கு மிகவும் பொருந்தும் என்பதே பெரும்பான்மையான ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.

விரைவில் இப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.