Sunday, December 13, 2015

நீரிழிவை கட்டுப்படுத்தும் கொய்யா இலையை பற்றி தெரிந்து கொள்வோம்.

பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல கொய்யாவோடு சேர்ந்த இலையும் மணம் பெறும். கொய்யாபழம் என்றதும் அதனுடைய இலைகளையும் சேர்த்து தான் நமக்கு  நினைவு  வரவேண்டும்.

அந்த அளவுக்கு கொய்யா இலை மருந்தாக பயன்படுகிறது. நீரிழிவுநோயால் அவதிபடுபவர்கள் அனைவருக்கும் சிறந்த  மருந்தாகப் பயன்படுகிறது கொய்யா இலை.

கொய்யா இலை பல அற்புதமான குணாதிசயங்களை  கொண்டுள்ளது.  காயங்கள்,  பல் வலி ஈறு வீக்கம் வயிற்றுபோக்கு, மற்றும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது. கொய்யா இலை கிருமிகளை  அழித்து உடலை கட்டுக்குள்கொண்டு  வந்துவிடும் சிறந்த உணவாகும்.

தேவையான கொய்யா இலைகளை சேகரித்து தண்ணீரில் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு 3 கப்  தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்னர் இறக்கி குளிரவைக்கவும். இதை வாய் கொப்பளிக்க பயன்படுத்தலாம்.

மேலும் பெண்கள் தங்கள் உறுப்புகளை கழுகவும் பயன்படுத்தலாம். ஏனெனில் நோய் கிருமிகளை அழிக்கும் மருந்தாகப் பயன்படுகிறது. நீரிழிவை  கட்டுப்படுத்தும் கொய்யா இலை ஆரோக்கியம் தரும் சிறந்த உணவு என்று ஜப்பான் நாடு உறுதிப்படுத்தியுள்ளது.

கொய்யா இலையில் தயாரிக்கப்படும் தேநீரில் சுக்ரோஸ் மற்றும் மேல்டோஸ் ஆகிய இரண்டு  விதமான  சர்க்கரையை  உறிஞ்சம் தன்மை கொண்டது. மேலும் சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இந்த விளைவை பற்றி நியூட்ரீஷன்- மேட்டாபாலீஷம் ஆகிய இரண்டு ஆய்வுகளும் விரிவுபடுத்தியுள்ளது.

 வெள்ளை சாதத்தை உட்கொண்ட பின் கொய்யா இலை தேநீரை பருகினால் ரத்தத்தில் அதிகமாகக்கூடிய சர்க்கரை அளவு 30, 90 மற்றும் 120 நிமிடத்தில் குறைக்கக்கூடிய  தன்மையை  கொண்டுள்ளது.

இந்த கொய்யா இலை தேநீரை நாம் தொடர்ந்து 12 வாரங்கள் பருகினால் தொடங்கும் போது  இருந்த இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு வெகுவாக குறைந்திருக்கும்.

குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கொய்யா இலை தேநீரை பருகக்கூடாது.

எஸ்.ஜானகியை கண்ணீர் விட வைத்த இளையராஜா - விசாரனை..?

இளையராஜா இசையில் பாடிக்கொண்டிருந்த எஸ்.ஜானகி திடீரென பாட முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார். இசைக்குழுவினர் திகைத்துப் போனார்கள்.

இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

காரைக்குடி நாராயணன் கதை வசனம் எழுதிய படங்கள் அப்போது நன்றாக ஓடிக்கொண்டிருந்தன. இதனால் அவரே ஒரு படம் தயாரிக்க முன்வந்தார். படத்துக்கு "அச்சாணி'' என்று பெயர் வைத்தார். படத்துக்கு இசையமைக்க என்னைக் கேட்டுக்கொண்டார்.

கதை சொன்னார். எனக்குப் பிடித்திருந்தது. பூஜையன்றே பாடல் பதிவு.

பாடல்களை கவிஞர் வாலி எழுதினார். கம்போசிங்கும் நடந்து முடிந்தது. இதில் "மாதா உன் கோவிலில் மணித்தீபம் ஏற்றினேன்'' என்ற பாடல், படத்தின் அச்சாணி போல. ஆனால் பூஜைக்கு முதல் பாடலாக வேறு பாடலை தேர்வு செய்திருந்தேன். பிரசாத் ஸ்டூடியோவில் பூஜை என்று முடிவானது. பூஜை தினத்தில் சவுண்டு என்ஜினீயர் எஸ்.பி.ராமநாதன் ஒரு சிறிய தவறு செய்ய, அது குழப்பமாகி பூஜையன்று எல்லாருக்குமே டென்ஷன்.

எங்களுக்கு கொடுத்த பூஜை தினத்திலேயே உபேந்திரகுமார் என்ற கன்னட இசையமைப்பாளருக்கும் பூஜை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார். அதாவது இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில். பூஜைக்காக காலை 7 மணிக்கு பிரசாத் ஸ்டூடியோ போனால் அங்கே வேறு ஆர்க்கெஸ்ட்ரா (இசைக்குழு) இருந்தது. "இதென்ன! இவர்கள் எங்கள் ரெக்கார்டிங்கில் வாசிப்பவர்கள் இல்லையே?'' என்று கேட்டால், அப்புறம்தான் உண்மை தெரிந்தது.

எஸ்.பி.ராமநாதன் இரண்டு பூஜைகளுக்கும் ஸ்டூடியோவை கொடுத்து இருப்பது! ஞாபக மறதியாலோ அல்லது காலை 10 மணிக்குள் ஒரு பாடலை யாராவது முடித்து விட்டால், அடுத்த பாடலை மதியம் ஒரு மணிக்குள் எடுத்து விடலாமே என்று அவரே ஒரு தப்புக்கணக்குப் போட்டிருந்தாரோ என்னவோ தெரியவில்லை.

இப்போது யார் ரெக்கார்டிங் வைத்துக் கொள்வது என்று நான் எஸ்.பி.ராமநாதனைக் கேட்க, அவர் சமாளித்துப் பார்த்தார். பதில் சொல்ல முடியவில்லை.

உபேந்திரகுமாரோ எதுபற்றியும் சட்டை செய்யாமல் அவரது பாடலை ரிகர்சல் செய்யத் தொடங்கி விட்டார். இனி இங்கே வேலைக்காகாது என்று தெரிந்து போக, ரெக்கார்டிங் நடத்த ஜேசுதாசின் தரங்கிணி ஸ்டூடியோவை கேட்கச் சொன்னேன். அங்கே நடத்தலாம் என்பது தெரியவந்ததும் ஆர்க்கெஸ்ட்ராவுடன் அங்கே போனேன். அங்கே பூஜையெல்லாம் தொடங்கி முடிந்து, ரெக்கார்டிங் ஆரம்பிக்கும் சமயத்தில் மிஷின் ரிப்பேர் ஆகிவிட்டது.

இதற்குள் நேரம் மதியம் ஒரு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. இதே நேரம் பிரசாத் ஸ்டூடியோவில் நடந்த 'ரெக்கார்டிங்' முடிந்து எல்லாரும் போய்விட்டார்கள். அங்கே மாலையில் வேறு ரெக்கார்டிங் இல்லாததால் 2 மணிக்கு மறுபடியுமாக அங்கேயே போனோம். ஆர்க்கெஸ்ட்ரா தயாரானது.

ஜானகி வந்தார். 'மாதா உன் கோவிலில்' பாடலையே எடுத்துவிட, ஒத்திகை பார்த்து 'டேக்' போகலாம் என்று தொடங்கினோம். இரண்டு மூன்று டேக் சரியாக வரவில்லை. நானோ இந்தப்பாடல் முடிந்து இன்னும் ஒரு பாடல் எடுக்க வேண்டும் என்ற டென்ஷனில் இருந்தேன்.

இந்தப் பாடலை எடுத்துக் கொண்டிருக்கும்போதே நிறைய சங்கதிகள் கற்பனையில் வர, ஜானகியிடம் அவ்வப்போது சென்று மாற்றிக்கொண்டே இருந்தேன். ஒரு டேக் நன்றாக வந்து கொண்டிருந்தது. அடுத்து மூன்றாவது பின்னணி இசை சேர்ப்பு தொடங்கவேண்டும். ஆனால் யாரும் வாசிக்கவில்லை. காரணம், 'கண்டக்ட்' செய்த கோவர்த்தன் சார் கைகாட்ட மறந்துவிட்டார்.

எனக்கு கோபம். "என்னண்ணே! டேக் நன்றாக வந்து கொண்டிருக்கிறது. பேக்ரவுண்டு மியூசிக்கிற்கு ஏன் கை காட்டவில்லை?'' என்று கேட்டேன். அவரோ, "பாட்டில் மெய் மறந்துட்டேன்யா'' என்றார், கூலாக. எனக்கோ, அடடா! இவ்வளவு ஒன்றிய நிலையில் கண்டக்ட் செய்பவரை திட்டிவிட்டோமே என்று வருத்தம் ஆனது.

அடுத்த டேக். மூன்றாவது சரணத்தில் ஜானகி பாடும்போது,

"பிள்ளை பெறாத பெண்மை தாயானது
அன்னை இல்லாத மகனை தாலாட்டுது''

- என்ற வார்த்தைகளை அழகாகப் பாடியவர் அதற்கப்புறம் தொடர்ந்து பாடாமல் விட்டு விட்டார். "ஐயோ நன்றாக இருந்ததே! ஏன் அடுத்த அடியை விட்டு விட்டீர்கள்?'' என்று ஜானகியை கேட்டேன். ஆர்க்கெஸ்ட்ராவிலோ யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள்.

பொதுவாக 'டேக்' கட் ஆனாலே "பேன் போடு'' என்று சத்தம் போடுபவர்கள், சத்தமே இல்லாமல் இருக்கிறார்களே என்று பார்த்தால், கோவர்த்தன் சார் 'வாய்ஸ் ரூமை' கைகாட்டி ஏதோ சொன்னார். என்னவென்று புரியாமல் 'வாய்ஸ் ரூமை' பார்த்தால், கண்ணாடி வழியே ஜானகி கர்ச்சிப்பால் கண்களை துடைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

விஷயம் என்னவென்று பார்த்தால், ஜானகி இப்படிச் சொன்னார்: "டியூனும் வார்த்தையும் கலந்து 'பாவத்தில்' ஏதோ ஒன்றை உணர்த்திவிட, அழுகை வந்துவிட்டது. அழுகையோடு பாடவும் முடியாமல், அழுகையை நிறுத்தவும் முடியாமல் விட்டுவிட்டேன்.'' ஜானகி இப்படிச் சொல்லி முடித்ததும் எல்லாரும் உருகி விட்டார்கள்.

ருத்ரையா இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த படம் 'அவள் அப்படித்தான்.' இதில் என் இசையில் கமல் ஒரு பாட்டு பாடியிருப்பார். கமல் அப்போது மலையாளப்படம் ஒன்றில் நடித்து வந்தார்.

ரெக்கார்டிங்கின்போது ஸ்டூடியோவுக்கு வந்தார். பாடலை பாடிக்காட்டினேன். கேட்டு அவரும் பாடிப்பார்த்தார். நன்றாக வந்தது. அப்படியே பாடவைத்து ரெக்கார்டு செய்து விட்டோம். அது 'பன்னீர் புஷ்பங்களே' என்ற பாடல். அமர் (கங்கை அமரன்) எழுதியது. கோவையில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் இந்தப் பாடலுக்கான மெட்டு உதயமானது.

அந்த விழா மேடையில் பஞ்சு சாரும், டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் சாரும் மேடையிலேயே வந்து பாடலுக்கான 'சிச்சுவேஷன்' சொல்ல, மேடையிலேயே கம்போஸ் செய்து ஆர்க்கெஸ்ட்ராவோடு பாடியது. அந்தப் பாடலுக்கு வேறு வார்த்தைகளை போட்டு அமர் எழுதியதுதான் 'பன்னீர் புஷ்பங்களே' பாட்டு.

இந்தப் பாடலை கமல் பாடி முடித்து ரொம்ப நாள் கழித்துத்தான் அதில் இருந்த தவறு ஒன்று எனக்குத் தெரிந்தது. கமல் 'பன்னீர் புஷ்பங்களே' என்ற வார்த்தையை 'பன்னீர் புஷ்பங்ஙளே' என்று பாடிவிட்டார். இதுபற்றி அவர் கூறும்போது, "அப்போது மலையாளப் படத்தில் நடித்து வந்ததால் தமிழை மலையாளம் போல பாடிவிட்டேன்'' என்றார்.

ஒருநாள் டைரக்டர் ஸ்ரீதர் என்னைப் பார்க்க வந்தார். யார் மேல் எங்களுக்கு பிரியம் அதிகமோ, யாரை நாங்கள் ஹீரோவாக நினைத்தோமோ, யாரை 'தென்னாட்டு சாந்தாராம்' என்று மக்கள் அழைத்தார்களோ, அந்த ஸ்ரீதர் என்னைப் பார்க்க வந்ததில் அளவு கடந்த மகிழ்ச்சி எனக்கு.

ஸ்ரீதர் சார் இயக்கிய 48 படங்களுக்கு மேல் அண்ணன் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருக்கிறார். ஒரு படத்தில் கூட அவர் இசையமைத்த பாடல் சோடை என்று சொல்ல முடியாது. அப்படிப்பட்ட அவரையே விட்டு விட்டு, ஸ்ரீதர் சார் நம்மிடம் வருகிறாரே, இதுதான் சினிமா உலகமா? இவரும் சாதாரண சினிமாக்காரர்தானா? இந்த சினிமா உலகம் நாளைக்கு இதுபோல் தான் நம்மையும் விட்டு விடுமோ என்ற எண்ணமும் ஒரு கணம் மனதில் ஓடியது.

ஸ்ரீதர் தனது படத்துக்கு "இளமை ஊஞ்சலாடுகிறது'' என்று பெயர் வைத்திருந்தார். அப்போது காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரு படத்தின் பின்னணி இசை வேலை நடந்து கொண்டிருந்தது. அதனால் கம்போசிங் காலை 7 மணியில் இருந்து 9 மணி வரைக்கும், இரவு 10 மணியில் இருந்து விடியும் வரைக்கும் நடந்தது.

"ஒரே நாள் உனை நான்நிலாவில் பார்த்தது''
- என்ற பாடல் படத்தின் "தீம் ஸாங்.''

"நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா?'' என்ற இரண்டு பாடல்களையும் முதலில் பதிவு செய்தோம். மூன்றாவதாக "தண்ணி கருத்திருச்சு'' என்ற கிராமியப்பாடல் வார்த்தையை வைத்து இசையமைத்தேன். தொடக்கம் மட்டும் அதை வைத்துக்கொண்டு மற்ற வரிகளை கவிஞர் வாலி மாற்றிவிட்டார். இந்தப் பாடலை யாரைப் பாட வைத்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்தபோது, சட்டென ஜி.கே.வெங்கடேஷ் நினைவுக்கு வந்தார். அவரையே பாட வைக்கலாம் என முடிவு செய்தோம்.

அடுத்த நாள் ஏவி.எம்.மில் ரெக்கார்டிங். ஜி.கே.வி. பாடலை கற்றுக்கொண்டார். டைரக்டர் ஸ்ரீதர், உதவி டைரக்டர்கள் கோபு, வாசு, சந்தானபாரதி என எல்லோரும் இருந்தார்கள். பல ஒத்திகைகள் நடந்தது. பாடுவதற்கு மைக் முன்னால் போனால், ஒரு அடி பாட, அடுத்த அடியின் டியூன் மறந்து போகும். மறுபடி நினைவுபடுத்திப்பாட, இரண்டாவது ரிகர்சலில் வேறு ஒரு இடத்தில் மறந்து போகும்.

இப்படியே பஸ் ஒவ்வொரு அடி நகரும்போதும் பிரேக் போட்டு பிரேக் போட்டு போவது போல ஆயிற்று. அங்கேயே நின்று கொண்டிருந்தது பாட்டு. "சரி டேக்கில் வந்து விடும். டேக்கில் 'ட்ரை' பண்ணலாம்யா'' என்று கோவர்த்தன் சார் சொல்ல, டேக் தொடங்கினோம். அது பல்லவியோடு கட் ஆகிவிட்டது! இப்படியே ஒரு லைன் - பாதி வரி - அடுத்த லைன் - இன்னொரு பாதி வரி என்று 62 டேக்குகளுக்கும் மேலாகிவிட்டது. மணியோ மதியம் இரண்டை நெருங்கிக்கொண்டிருந்தது. மதியம் எம்.எஸ்.விஸ்வநாதன் அண்ணன் ரெக்கார்டிங். அவர் வேறு வந்துவிட்டார். வந்தவர் ஜி.கே.வி. பாடுவதைக் கேட்டு, "டேய் வெங்கடேசா! நல்லாப் பாடுடா!'' என்று தான் வந்திருக்கிறதையும் அறிவித்து உற்சாகப்படுத்தவும் செய்தார்.

ஜி.கே.வி. இன்னும் டென்ஷனாகி விட்டார். 'டேக்' தொடக்கத்தில் ஏற்கனவே அவருக்கு டென்ஷன். அப்போது டைரக்டர் ஸ்ரீதர், "இவ்வளவு கஷ்டமாக இருந்தால் இந்தப் பாடல் எதற்கு? வேண்டாம், ராஜா! கேன்சல் செய்து விடுவோம். வேறு டியூன் போட்டுக் கொள்ளலாம்'' என்றார்.

முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் பகலில் விழாது இரவில்தான் விழும்.

1. உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.

3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.

4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.

5. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்

6. பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.

7. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.

8. வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.

9. முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும்.

10. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.

11. சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.

12. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது

13.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

14. இந்தியாவில் தமிழில் தான் “பைபிள்”முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.

15. ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.

16. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .

17. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

18. பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

19. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.

20. உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.

21. அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது. —

12. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது

13. ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

14. இந்தியாவில் தமிழில் தான்”பைபிள்”முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.

15. ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.

16. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .

17. கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

18. இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாவது ஜோதிடப் புத்தகங்கள்தான்.

19. தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய சட்டசபைத் தொகுதி சென்னையிலுள்ள வில்லிவாக்கம்.

20. சலவைக்கல்லுக்குப் பெயர் பெற்ற நாடு இத்தாலி.

21. உலகிலேயே அதிக மொழிகள் பேசப்படும் நாடு இந்தியாதான்.

22. ஆமை நிலத்தில்தான் மெதுவாகச் செல்லுமே தவிர நீரில் வேகமாக நீந்தும்.

23. உலகிலேயே மினரல் வாட்டர் அதிகம் பயன்படுத்துபவர்கள் ரஷ்யர்கள்தான்.

24. தாய்லாந்து நாட்டில் மீன் சண்டை ஒரு பிரபலமான விளையாட்டு.

25.அமெரிக்காவில் ஒவ்வொரு நிமிடமும் 12 கார்கள் தயாரிக்கப்படுகின்றன.

26. உலகிலேயே அதிகமாக சேமிப்பவர்கள் சிங்கப்பூர்க்காரர்கள்தான்.

27. தீபாவளி கொண்டாட்டங்களைப் போலவே, பிரேசில் நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர்.

28. பசுக்களின் பாதுக்காப்புக்கு சட்டம் கொண்டுள்ள ஒரே நாடு, இந்தியா.

29. கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.

30. எவரெஸ்ட் சிகரத்தை இரண்டு முறை அடைந்த முதல் இந்தியர் நாவாங் கோம்பு.

31. பேனாவைக் கண்டுப்பிடித்தவர் லூயிஸ் ஜே வாட்டர்மேன்.

32. எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண்மணி பச்சேந்திரி பால்.

33. சைகை மொழியைத் கண்டுபிடித்தவர் ஆல்பே சார்லஸ் மைக்கேல் (பிரான்ஸ்).

34. மனிதர்களின் புருவத்தில் சராசரியாக 550 முடிகள் இருக்கும்.

35. பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

36. முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.

37. உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.

38. பனிக்கட்டிகளில் 90 சதவீதம் காற்றுதான்!

39. உலகின் மிக லேசான பாலூட்டி ‘பம்பிள்பி பேட்’ என்கிற வௌவால். இதன் எடை 2 ஜெம்ஸ் மிட்டாய்கள் அளவுக்குத்தான் இருக்கும்!

40. அந்துப்பூச்சிகளால் பல கிலோ மீட்டர் தொலைவிலிருந்தும் பரஸ்பர வாசனையை உணர முடியும்.

41. தன் சிலையை தானே உருவாக்கியிருக்கிறார் ஹானானுமா மஸாகிச்சி என்ற ஜப்பானிய சிற்பி. தன்னுடைய முடி, பற்கள் மற்றும் நகங்களையே பயன்படுத்தி அச்சு அசலாக அவரையே செய்தது தான் விசேஷம்!

42. சில வகை தவளைகளால் 50 அடி உயரம் கூட காற்றிலே மிதக்க முடியும்.

43. சில நத்தைகள் 3 ஆண்டுகள் வரை கூட தொடர்ந்து உறங்கும்.

44. வெட்டுக்கிளிகள் மனிதனைப் போல பெரிய உருவமாக இருந்தால், அவை ஒரே தாவலில் ஒரு கூடைப்பந்து மைதானத்தையே கடந்து விடும்!

45. அலிகேட்டர் முதலைகள் 80 ஆண்டுகள் வரை வாழும்.

46. டிராகன்ஃப்ளை என்றதும்பியால் ஒரே நேரத்தில் அனைத்துத் திசைகளிலும் பார்க்க முடியும்.

47. குதிரைகள் விரல்நுனிகளில் அழுத்தம் கொடுத்தே ஓடுகின்றன

பாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்

உலகில் ஆயிரக்கணக்கான பாம்பு வகைகள் உள்ளன.அதில் -246-வகை பாம்புகள் இந்தியாவில் உள்ளன.அயர்லாந்து,நியூசிலாந்து,ஆர்ட்டிக் போன்ற பகுதிகளைத் தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் பாம்புகள்  காணப்படுகின்றன.

பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது சில வகைப் பாம்புகளைத் தவிர  பெரும்பான்மையான பாம்புகள் விஷ மற்றவையே.இந்தியாவில் வாழக்கூடிய நச்சுப் பாம்புகளில் ஆறு வகைப்  பாம்புகள் தான் மிகவும் அபயமளிக்கக் கூடியவை அவை,

நல்ல பாம்பு

கட்டு வீரியன்

கண்ணாடி வீரியன்

சுருட்டை பாம்பு

கரு நாகம்

ராஜ நாகம்.

மேற்கூறிய ஆறு வகைகளில் முதல் நான்கு வகைகளே நம் நாட்டில்  பெருமளவு காணப்படுகின்றன.பாம்பு விஷக் கடிக்கான முறிவு மருந்து

"சீர நஞ்சு" (anti -venum) இந்த நான்கு வகை பாம்பு விஷத்தை சேகரித்து  கலந்து அதைக் குதிரைக்கு சிறிது சிறிதாக ஊசி மூலம் செலுத்தி பிறகு  அதன் இரத்தத்தில் இருந்து சீரம் பிரித்து எடுக்கின்றனர். இதுவே அலோபதி மருத்துவத்தில் அனைத்து பாம்பு கடிக்கும் விஷ   முறிவு மருந்தாக பயன் படுத்தப் படுகின்றது .ஒருவருக்கு பாம்பு கடித்து விஷம் ஏறிய நிலையில்  இந்த "சீர நஞ்சு" நல்ல குணமளிக்கும் மருந்து  தான்  ஆனால் பாம்பு கடிக்காத நிலையில் இந்த ஊசி மருந்தைப்  போட்டால் இதுவே விஷமாகி அந்த மனிதர் இறந்துவிடக்கூடும்.

பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்       

நல்லபாம்பு கடித்து விட்டால் மருந்து :

கடிவாய் எரியும்,வாந்தி வரும், நடை தளரும்,மயக்கம் வரும், மூக்கில் நுரை வரும்,உயிர்ப்பு தடை படும்,இறப்பு நேரிடும்,வேப்பிலை கசக்காது, மிளகு காரம் இருக்காது,ஆடு தீண்டாப்பாளை வேர் இனிக்கும்,  இரு  பற்கள் தடம் இருக்கும் குருதி பெரும்பாலும் வராது இதற்க்கு அரை மணி  நேரத்தில் மருந்து கொடுத்து விட வேண்டும் . வாழை மட்டையைப் பிழிந்து அதன் சாற்றை 200-மி.லி.கொடுக்க  வேண்டும்.அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கொடுக்கலாம்.நினை வற்று இருந்தால் உடைகளைக் களைந்து வாழை மட்டையில் படுக்க  வைக்கவும் ,வாய் திறக்கும் ,வாழைப் பட்டை சாற்றை ஊற்றலாம்.  விஷம் முறிந்து பிழைத்துக் கொள்வார்கள்.

வீரியன் பாம்பு கடித்து விட்டால் மருந்து :

இது  கடித்து விட்டால் கடி வாய் தொடர்ந்து எரியும்,குருதி தொடர்ந்து வரும்,கடி வாய் சதை வீங்கி நீல நிறமாக மாறும்,வாயில்,மூக்கில் குருதி வரும்,சிறு நீரும் குருதியாகும்,ஆடு தீண்டாப் பாளை வேர் உப்புக்கரிக்கும் சிரியா நங்கை,வேம்பு கசக்காது.இது கடித்த அரை மணி நேரத்தில்   சிரியா நங்கையை அரைத்து நெல்லி அளவு கொடுத்தால் விஷம் இறங்கி  வரும் 10-நிமிடம் கழித்துக் சிறிது கொடுத்தால் கசக்காத மூலிகை சிறிது கசக்கும்,மீண்டும் பத்து நிமிடம் கழித்துக் கொடுத்தால் கசப்பு நன்றாகத் தெரியும் விஷம் படிப் படியாக இறங்குவது தெரியும்.