
2017 கிறிஸ்துமஸ் தினத்தில் அவதார் 2 படத்தை எதிர்பார்க்கலாம் என ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 டிசம்பர் மாதம் வெளியான அவதார், உலகம் முழுவதிலும் மாபெரும் வெற்றியடைய, இன்று வரை எந்த படமும் தொட முடியாத வசூல் சாதனையைப் படைத்தது.
கன்னடியன் என்டர்டெயின்மென்ட் கம்பெனியின் ’தி ஃபர்ஸ்ட் பிளைட்" நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேமரூன் 2017 டிசம்பரில் அவதார் 2 வெளியாகும் என தெரிவித்தார்.தற்சமயம் படப்பிடிப்பில் இருந்துவரும் அவதார் படம் மூன்று பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகம் ஏற்கனவே வெளியான நிலையில் இரண்டாம் , மூன்றாம் பகுதிகள் முடிவடைந்தவுடன் 2017 முதல் 2019 வரை அடுத்தடுத்து ஆண்டுகளில் படங்களை வெளியிட உள்ளதாகவும் அவர் கூறினார்.
ஒவ்வொரு படமும் தனித் தனி என்றாலும், அது ஒரு மிகப் பெரியகதையைக் கொண்டது எனவும் தெரிவித்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவதார் 2 பற்றிய செய்தி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது எனலாம்.
0 comments:
Post a Comment