
இந்நிலையில் தற்போது பீப் பாடல் விவகாரத்தில் தனக்கு(சிம்பு) ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை நடந்தது.
விசாரணையின் போது தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் சார்பில் சிம்புவிற்கு ஜாமீன் வழங்க கூடாது என தெரிவித்துள்ளனர், இதை தொடர்ந்து சிம்புவின் ஜாமீன் மீதான விசாரணை ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 2 காவல் நிலையத்தில் ஆஜராக தேவையில்லை எனவும் கூறியுள்ளனர்.
மேலும், இந்த பாடலை முதன் முதலாக யார் லீக் செய்தது என்று சைபர் கிரேம் விசாரணை நடத்தி வருகின்றது. இந்நிலையில் இந்த பாடலை நண்பர்களிடம் பகிர்ந்தது ஒரு பிரபல தமிழ் சினிமா கதாநாயகன் தான் என ஒரு செய்தி வாட்ஸ் அப்பில் பரவி வருகின்றது.
இதையெடுத்து போலிஸாரும் அவரிடம் விசாரணை நடத்தவுள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment