Tuesday, December 15, 2015

குழந்தைகளின் மறதியை மறக்கடிக்கும் வழிகள்

குழந்தைகள் கிரிக்கெட்டில் எந்த மேட்சில் எந்த வீரருடைய ஸ்கோர் கேட்டாலும் சொல்வார்கள். அல்லது சினிமா பற்றிய புள்ளி விவரங்களை துல்லியமாக தருவார்கள். இன்னும் சிலர் ஒரு சில பாடத்தில் சட்டென்று பதில் தருவார்கள். இதிலிருந்து குழந்தைகளுக்கு அந்த பாடத்தில் அல்லது அந்த விளையாட்டில் மட்டுமே நினைவாற்றல் உண்டு என்றும், மற்றதில் நினைவாற்றல் இல்லை என்றும் அர்த்தமாகிவிடாது. இவர்களது பிரச்சனை நினைவாற்றலில் இல்லை, ஆர்வத்தில் தான் என்று புரிந்துகொள்ள வேண்டும். எதில் நினைவாற்றலை வளர்த்தக்கொள்ள வேண்டுமோ, அதில் கண்டிப்பாக ஆர்வம் இருக்க வேண்டும். நனைவாற்றலுக்கு ஆர்வமே அடிப்படை காரணமாகிறது.

கவனிக்கும் திறன் வேண்டும்:

உங்கள் குழந்தையிடம் அவர்கள் பாடப் புத்தகத்தில் உள்ள அட்டைப்படத்தை வரைய சொல்லுங்கள், அல்லது அவர்கள் விரும்பி பார்க்கும் டிவி சேனலின் லோகோவையும் வரைய சொல்லுங்கள். அட்டையில் உள்ள படங்களுக்கு என்னென்ன வண்ணம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் குறிக்க சொல்லுங்கள். பிறகு ஒப்பிட்டு பாருங்கள். சிறிது நேரம் கழித்து பார்த்தால் பெரும்பாலான விஷயங்களை தவறாக குறித்திருப்பார்கள். அல்லது குறிக்காமல் விட்டிருப்பார்கள். தினமும் பார்க்கிற புத்தகம்தான் அல்லது தினமும் பார்க்கிற டிவிதான். இருந்தாலும் சரியாக எழுத முடியாததற்கு காணரம் நாம் பார்க்கிறோமே தவிர கவனிப்பதில்லை. நினைவாற்றலின் அடிப்படையே இந்த கவனிக்கும் திறன்தான்.

எதிலும் ஒழுங்கு அவசியம்:

குழந்தைகள் பல நேரங்களில் கணக்கு புத்தகம் எங்க கிடக்குன்னு தெரியலையே என்று நாள் முழுவதும் புலம்பி கொண்டு தேடிக்கொண்டும் இருப்பார்கள். இருபது அல்லது முப்பது புத்தகங்கள் உள்ள ஒரு சின்ன அறையிலே நம்மால் நமக்கு தேவையான புத்தகத்தை தேடிக்கண்டுபிடிக்க முடியவில்லையே, இலட்சக்கணக்கான புத்தகங்கள் உள்ள நூலக்த்திற்கு அழைத்து சென்று, அங்கே பணியாற்றுப்பவர்கள் மட்டும் எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? என்பதை அவர்களைவிட்டே கண்டறிய சொல்லுங்கள்.

காரணத்தினை ஆராய்ந்தால், வீட்டில் புத்தகங்கள் கிடைக்காததற்கு காரணம் புத்தகங்கள் இரைந்து கிடப்பதே, நூலகத்தில் கிடைப்பதற்கு காரணம் அடுக்கி இருப்பதே. குழந்தைகள் என்றில்லை, நாமே கூட பல நேரங்களில் எங்க கிடக்குன்னு தெரியலையே என்று புலம்பிக் கொண்டே நமக்கு தேவையானவற்றை தேடி இருக்கிறோம். இதனால் எதிலும் ஒழுங்கை கடைபிடிக்க பழக வேண்டும்.

மறதியை விரட்டும் வழி:

குழந்தைகளின் மறதியை போக்கும்பெற்றோர்கள் சில வழிகளை மேற்கொள்ளலாம். அதாவது, கு£ந்தைகளுடன் வெளியில் எங்காவது சென்று வந்த பின் அங்கே பார்த்தவற்றை கேள்வி கேளுங்கள். உதாரணத்திற்கு நூலகத்தில் அவர்கள் பார்த்த புத்தக அலமாரியின் வரிசையை அல்லது தெருவில் உள்ள கடைகளின் வரிசையை எழுத சொல்லுங்கள், அல்லது இன்று வகுப்பில் ஆசிரியர் முதலில் சொன்ன வார்த்ததை எது என்று கேளுங்கள். இதனால் அனைத்தையும் ஆர்வத்துடன் உன்னிப்பாக கவனிக்க தோன்றும்.

உங்கள் உள்ளே ஓர் ஒழுங்கு ஏற்பட வேண்டுமென்றாலும் நீங்கள் செய்யும் வெளிச் செயல்களிலும் ஓர் ஒழுங்கு நிச்சயம் வேண்டும் என்பதை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி, அவர்கள் செய்யும் எல்லா செயல்களையும் ஒழுங்கோடு செய்யச் சொல்லுங்கள்.

பள்ளியிலிருந்து வந்ததும் ஷுவை நிதானமாக கழற்றி ஒழுங்காக அதற்குரிய ஸ்டாண்டில் வைக்க வேண்டும். சாக்சை கழற்றி துவைப்பதற்கென்று உள்ள பக்கெட்டில் போட வேண்டும். இப்படி ஒவ்வொறு செயலையும், ஓர் ஒழுங்கோடு செய்தால், உள்ளேயும் அதாவது மனதின் செயல்பாடுகளிலும் ஒழுங்கு ஏற்படத் துவங்கும். இவற்றை எல்லாம் தவறாமல் பின்பற்றினால் குழந்தைகளின் மறதியையும் மறக்கடிக்கலாம்.

0 comments:

Post a Comment