
இதற்கிடையில் கனடாவிலிருந்து கிளம்பும் அனிருத் வியாழன் காலை சென்னை வந்து சேர்கிறார். இந்த தகவலை மோப்பம் பிடித்த போலீஸ், அனிருத்தின் வருகைக்காக காத்திருக்கிறதாம். இங்கிருந்தபடியே எல்லா விஷயங்களையும் அறிந்து வரும் அனிருத், தனது பயணத்திட்டத்தை மாற்றி வழியிலேயே வேறு ஏதாவது ஒரு நகரத்தில் இறங்கி, முன் ஜாமீன் பெற்றபின் வருவாரா? அல்லது ஆழம் தெரியாமல் வந்து மாட்டிக் கொள்வாரா? என்பதை வியாழன் வரைக்கும் காத்திருந்தால் தெரிந்து கொள்ளலாம்.
இதற்கிடையில் இருவருக்குமான எதிர்ப்பு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. எழுத்தாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் என்று பலரும் சிம்பு அனிருத்தை உள்ளே தள்ளாமல் ஓயக்கூடாது என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். அதனால், பெரிய இடத்து பிள்ளைகள் என்பதையும் மறந்து போலீஸ் நியாயத்தை கையில் எடுக்கும் என்று நம்பப்படுகிறது.
0 comments:
Post a Comment