
அவர்களைத் தொடர்ந்து வில்லன், அடியாள் என்று நடித்து வந்த நான் கடவுள் ராஜேந்திரனும் சில படங்களில் காமெடியனாக நடித்தார். அப்படி அவர் நடித்த படங்கள் வெற்றி பெற்றதால் தொடர்ந்து அவர் காமெடியால் மிகவும் ரசிக்கப்பட்டார்.
அதனால் இப்போது அவரும் முக்கிய காமெடியனாகி விட்டார். மேலும் தெனாலிராமன், எலி படங்களில் நடித்த வடிவேலு அடுத்து காமெடியனாகவும் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்து அவருக்காக காமெடி காட்சிகளை உருவாக்கிய சில இயக்குனர்கள், தற்போது வடிவேலு மதுரையிலேயே செட்டிலாகி விட்டதால், இப்போது அவருக்கான வேடங்களில் நான்கடவுள் ராஜேந்திரனை புக் பண்ணிவருகின்றனர்.
அந்தவகையில், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தெறி படத்தில் கூட வடிவேலுதான் நடிக்க வேண்டியது. அவர் ஒத்துவராமல் போகவே இப்போது அந்த வேடத்தில் நான் கடவுள் ராஜேந்திரன் காமெடியனாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் விஜய்யுடன் படம் முழுக்க வரும் வேடம் என்பதால் மொத்தமாக 3 மாதங்கள் அவரிடம் கால்சீட் பேசியுள்ளனர்.
0 comments:
Post a Comment