Wednesday, December 2, 2015

ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன்

உலக புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ரெயிலில் பயணம் செய்தார். அவர் மனதிற்குள் ஒரு கஷ்டமான கணக்கிற்கு விடை தேடிக் கொண்டு இருந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகர் வந்தார்.

அவர் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் வாங்கி சோதித்து கையெழுத்து போட்டார். ஐன்ஸ்டீனிடம் டிக்கெட் கேட்டார். அவர் தான் அணிந்திருந்த கோட்டு பைக்குள் கையை விட்டார். டிக்கெட்டைத் தேடினார். அது எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. டிக்கெட் பரிசோதகர் அவரை உற்று பார்த்தார். அவர் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் என்பதை அறிந்து கொண்டார். “பரவாயில்லை…ஐயா, டிக்கெட்டைத் தேட வேண்டாம்”என்று சொல்லிக் கொண்டே அடுத்த நபரிடம் டிக்கெட்டை வாங்கி பரிசோதித்தார்.

அபொழுதும் தனது சூட்கேசைத் திறந்து ஐன்ஸ்டீன் கவனமாக டிக்கெட்டைத் தேடிக் கொண்டு இருந்தார். அதன் உள்ளே இருந்த புத்தகங்களை எல்லாம் எடுத்து வெளியே போட்டுத் தேடினார். துணிகளிலும் டிக்கெட் இருக்கிறதா என்று ஒவ்வொன்றாக உதறி பார்த்தார்.

அப்போது மீண்டும் டிக்கெட் பரிசோதகர் அந்த வழியாக வந்தார். “ஐயா, தாங்களோ உலக புகழ் பெற்ற பெரும் விஞ்ஞானி. தங்களிடம் டிக்கெட் இல்லாவிட்டால் தான் என்ன? ஏன் வீணாக தேடிக் கொண்டு கஷ்டபடு

கிறீர்கள்? உங்களால் இந்த நாட்டிற்கே பெருமை. டிக்கெட் இல்லாவிட்டாலும் பரவாயில்லை.” என்று மீண்டும் சமாதானபடுத்தினார்.

ஐன்ஸ்டீன் மீண்டும் தேடிக்கொண்டே, “உங்களுக்கு பரவாயில்லை. நான் எந்த ஊருக்கு போக வேண்டும் என்ற விவரம் டிக்கெட்டில் அல்லவா இருக்கிறது? நான் என்ன செய்வது? எனக்கு இப்போது டிக்கெட் வேண்டுமே..!” என்றார்.

உடன் இருந்த அனைவரும் இந்த பதிலைக் கேட்டு அதிர்ந்தனர்.

அப்புறமென்ன…டிக்கெட் கிடைக்கவே இல்லை. ரெயில் அடுத்த ஸ்டேஷனுக்கு வந்ததும், பரிசோதகர் ஐன்ஸ்டீனை உடன் அழைத்துச் சென்று தொலைபேசியின் முலம் அவர் மனைவியிடம் தொடர்பு கொள்ளச் செய்தார். ஐன்ஸ்டீன் தன் மனைவியிடம், “டியர் நான் வீட்டை விட்டு போகும் போது எந்த ஊருக்கு போவதாக உன்னிடம் சொல்லி விட்டு வந்தேன்?” என்று விசாரித்தார். மனைவி ஊரின் பெயரைச் சொன்னவுடன் அதை டைரியில் குறித்துக்கொண்டு அந்த ஊர் வந்ததும் இறங்கினார்

எந்திரன்-2 அறிவிப்பு எப்போது, பட்ஜெட் எவ்வளவு? வெளிவந்த தகவல்

கபாலி படத்தை ரஜினி ஒப்புக் கொள்வதற்கு முன்பிருந்தே பேசப்பட்டு வரும் விஷயம், ஷங்கர் இயக்கத்தில் அவர் எந்திரன் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார் என்பது.

ஆனால் எதையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தனர். காரணம், அதற்குள் கபாலி படம் தொடங்கிவிட்டார் ரஜினி. இந்தப் படப்பிடிப்பு முடிந்து படம் வெளியாகும் போது எந்திரன் 2 ஐ அறிவிக்கலாம் என்று திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் ரசிகர்கள் காத்திருப்பதாக இல்லை. இந்தப் படம் குறித்து மீடியாவில் வெளியாகும் செய்திகளைப் பகிர்ந்து மகிழ்ந்து வந்தனர். ஒருமுறை ஷங்கரே, 'அவசரப்பட வேண்டாம். நாங்களே அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்' என்று மீடியாவுக்கும் ரசிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில், எந்திரன் 2-ன் மேக்கப் டெஸ்ட் மற்றும் ஆரம்பப் பணிகளில் பங்கேற் சில தினங்களுக்கு முன் ரஜினி அமெரிக்கா சென்றார். இன்றோ நாளையோ அவர் சென்னை திரும்புகிறார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் படத்தின் தயாரிப்பாளர்களையும் அவர் சந்தித்தார்.எந்திரன் 2-ன் தொழில்நுட்பக் கலைஞர்கள், உடன் நடிக்கவிருக்கும் அர்னால்ட் என பலரையும் அவர் சந்தித்துப் பேசியுள்ளார்.

இப்போது இந்தப் படத்தை கிட்டத்தட்ட அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான அய்ங்கரன் கருணாமூர்த்தி"லைகா புரொடக்ஷன்ஸ் + சூப்பர் ஸ்டார் + ஷங்கர்...

எங்களின் அடுத்த படத்தை இந்தியாவின் மிகப் பெரிய படமாகத் தர தயாராகிவிட்டோம்" என்று ட்விட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெங்குவை விரட்டும் தற்காப்பு முறைகள்

 மழைநீர் தேங்கி அதிக தொற்று நோய்களை ஏற்படுத்தும். டெங்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தைத்தான் முதலில் தள்ளிவைக்க வேண்டும்.

நாம் வீட்டைச் சுற்றி மழை நீர் தேங்க விடாமல் பார்த்துக்கொள்வது, கொசுக்களை ஒழிக்கத் துளசி, நொச்சிச் செடிகளை வளர்ப்பது, மழைக் காலங்களில் காய்ச்சிய குடிநீரைப் பயன்படுத்துவது, சுகாதாரமற்ற உணவு உண்பதைத் தவிர்ப்பது போன்ற செயல்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

டெங்கு
டெங்கு ஒன்றும் தீர்க்க முடியாத நோயல்ல. நோய் வராமல் தடுக்கும் தற்காப்பு முறைகளாக, நிலவேம்புக் குடிநீர் குடித்துவரலாம். இதனுடன் பப்பாளி இலை சாறு, மலைவேம்பு சாறும் பருகலாம்.

நிலவேம்பு
நிலவேம்பு குடிநீரை 30-50 மி.லி.., குடிக்க வேண்டும். கசப்பு சுவையைக் குறைக்கச் சிறிது பனைவெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.

பப்பாளி இலை சாறு
மருத்துவக் குணங்கள் நிறைந்த பப்பாளிப் பழங்களைப் போலவே,  பப்பாளி இலைகளும் மகத்துவம் நிரம்பியவைதான்.

தயாரிக்கும் முறை
பப்பாளி இலைகளை நன்றாகக் கழுவி, மைபோல அரைத்து, சாறு பிழிந்து வடிகட்டி, சிறிதளவு பனைவெல்லம் சேர்த்து மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை 10 மி.லி. அளவு கொடுக்கலாம்.

மலைவேம்பு
மலைவெப்பிலைக்கு ஜூரம் அகற்றி, புழுக்கொல்லி, சிறுநீர் பொருக்கும் தன்மை உண்டு. பப்பாளி இலை சாறு தயாரிப்பதை போலவே இதையும் தயாரித்துக் கொள்ளலாம்.

நோய்கள் ஏற்படாமல் தடுக்க, முதலில் தூய்மையான சுற்றுசூழலை உருவாக்க முயற்ச்சிப்போம்.

இஞ்சி இடுப்பழகி - விமர்சனம்

 தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்காக படம் பார்ப்பது மிகவும் அரிது. அதை முறியடித்த சில நடிகைகளில் அனுஷ்காவும் ஒருவர். சோலோ ஹீரோயினாக அருந்ததி, பஞ்சமுகி, ருத்ரமாதேவி என ஹாட்ரிக் ஹிட் அடித்து அடுத்து இஞ்சி இடுப்பழியாக களம் இறங்கியுள்ளார்.

கமல்ஹாசன், விக்ரம், சூர்யா போன்ற நடிகர்கள் தான் படத்திற்காக உடலை ஏற்றி, இறக்கி நடிப்பார்கள். அவர்களுக்கே சவால் விடும் வகையில் அனுஷ்கா இப்படத்திற்காக 25 கிலோவிற்கு மேல் ஏற்றியுள்ளார். இப்படம் இன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கில் சுமார் 1500 திரையரங்குகளில் வெளிவந்துள்ளது.

கதை :

தான் எப்படி இருக்கிறாரோ அதுவே சந்தோஷம் என வாழ்ந்து வரும் ஸ்வீடி அனுஷ்காவிற்க்கு ஆர்யாவுடன் ஒருதலை காதல் தோல்வியினால் மனமுடைந்து தன் உடல் எடைதான் காரணம் என நினைத்து பிரகாஷ் ராஜ் நடத்தும் "சைஸ் ஜீரோ" எனும் பிரபலமான உடல் எடையை குறைக்கும் மையத்துக்கு வறுகிறார்.

பின் நாளில் அங்கு மோசடி தெரியவர மக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்த ஆர்யாவின் உதவியோடு பல முயற்சிகள் செய்கிறார். அந்த சமயத்தில் எற்கனவவே மற்றொருவருடன் காதலில் இருக்கும் ஆர்யாவிற்கும் அனுஷ்கா மீது காதல் வருகிறது. பின் அனுஷ்காவின் முயற்சிகள் என்னவாயின, ஆர்யாவுடனான காதல் என்னவானது என்பதே மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

படம் மொத்தமும் அனுஷ்காவை நம்பிதான் நகர்கிறது. ஆண்கள் ( கதா நாயகர்கள்) மட்டுமே உடலை வருத்தி நடிக்க முடியும் என்பதை பொய்யாக்கி காட்டியிருக்கும் அனுஷ்காவை எப்படி பாராட்டினாலும் தகும். முதல் பாதியில் " so cute " என சொல்லவைக்கும் இவரின் கதாப்பாத்திரம் பிற்பாதியில் நவரசங்களையும் அள்ளி தெழிக்கிறது.

ஆவணப்பட இயக்குனராக வரும் ஆர்யாவிற்கு அனுஷ்காவின் துணை கதாபாத்திரம் அவ்வளவே ஆனால் இந்த கதாப்பாத்திரத்தை. கொஞ்சம் நேரம் வந்தாலும் " செல்லம்.. i love u" என சொல்ல வைக்கிறார் வில்லன் பிரகாஷ் ராஜ். ஊர்வசி தன் எதார்த்த நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். மாஸ்டார் பரத் கிடைத்த இடத்தில் கில்லி ஆடிவிட்டீர் போங்கோ.

என்னதான் படம் தமிழிலும் வெளியாகிறது என சொன்னாலும் பல இடங்களில் டப்பிங் படம் பார்ப்பது போல் தான் உள்ளது.

முதல் பாதி நன்றாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதி பொறுமையை சோதித்து பார்க்கிறது. கண்ணில் பட்ட தூசியை ஊதி விட்டால் காதல் , தாங்கி பிடித்தால் காதல் என்பதெல்லாம் அதே பழைய மாவை அரைத்திருக்கிறார்கள். அனுஷ்காவின் குறிக்கோள் பெரிதா காதல் பெரிதா என்பதில் இயக்குனரின் குழப்பம் படத்திற்க்கு பின்னைடைவை தந்துள்ளது .

நிரோவ் ஷாவின் ஒளிப்பதிவு தான் படத்தின் தூணே. அவ்வளவு அழகான காட்சியமைப்புகள் பாராட்டுக்களை அள்ளி செல்கின்றது அது போல் vfx பிரமாதம். ஆனால் படத்தொகுப்பு இரண்டாம் பாதியில் கோட்டை விட்டு விட்டது. கீரவாணியின் பாடல்கள் ரசிக்கும் விதம் பிண்ணனி இசை படம் நகர உதவியுள்ளது.

    க்ளாப்ஸ்:
    படத்தின் காட்சியமைப்பு , அனுஷ்காவின் நடிப்பு.
    பல்ப்ஸ் :
    பார்த்து பழகிய அதே பழைய காட்சிகள். சுவாரஸ்யம் அற்ற இரண்டாம் பாதி.
    மொத்தத்தில் இஞ்சி இடுப்பழகி One Woman Show