
ஷங்கர் இயக்கத்தில் மூன்றாவது முறையாக 'சிவாஜி, எந்திரன்' படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக ரஜினிகாந்த் நடிக்கும் 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகத்திற்கு '2.0' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். நேற்று பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்ட செய்தில் படத்தின் பெயரை '2.0' என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார்கள். பொதுவாக ஒரு படத்தின் இரண்டாம் பாகம் என்றால் அந்தப் பெயருடன் '2' என்பதை கூடச் சேர்த்துவிடுவார்கள். ஆனால், 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகத்திற்கு 'எந்திரன் 2' அல்லது 'எந்திரன் 2.0' என்றும் வைக்காமல் அதிலும் வித்தியாசமாக '2.0' என்று மட்டுமே வைத்துள்ளார்கள்.
நேற்று முன்தினம் கூட இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகப் போவது குறித்து படத்தின் இயக்குனர் ஷங்கர் கூட '2.0' நாளை படப்பிடிப்பு ஆரம்பம்' என்றுதான் குறிப்பிட்டிருந்தார். இதுதான் படத்தின் இறுதியான தலைப்பு. படத்தை தமிழைத் தவிர மற்ற மொழிகளில் வெளியிடும் போது '2.0' என்று மட்டுமே குறிப்பிட்டால் அதுவும் வசதியாகத்தான் இருக்கும்.
ஹிந்தியில் முன்னணி நடிகராக உள்ள அக்ஷய்குமாரும் இந்தப் படத்தில் ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிப்பதால் படத்தை ஹிந்தியில் வெளியிடும் போதும், உலக அளவில் வெளியிடும் போதும் ஹிந்தி ரசிகர்களிடையேயும் வரவேற்பு இன்னும் அதிகமாக இருக்கும்.
Posted in: சினிமா,நிகழ்வுகள்
Email This
BlogThis!
Share to Facebook
0 comments:
Post a Comment