Thursday, December 17, 2015

வெள்ளத்துக்கு சிங்கிள் நயாபைசா தராத வைரமுத்துவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

வெள்ளத்துக்கு சிங்கிள் நயாபைசா தராத வைரமுத்துவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

கவிஞர் பட்டத்தை வைத்துக்கொண்டு கல்யாண மண்டபம் முதல் எத்தனை வழிகளில் சம்பாதித்துக்குவிக்கமுடியுமோ அத்தனை வழிகளில் கோடிகள் குவித்தவர் வைரமுத்து. ஆனால் தன் வாழ்நாளில் பொதுப்பிரச்சினைகளுக்காக சல்லிக் காசை வெளியே எடுக்கமாட்டார்.

இதோ கோரமுகம் காட்டி சென்னை மக்களை சூரையாடிச்சென்றதே மழை, இதற்கும் கூட தன்னிடமுள்ள பழைய துணிகளைக்கூட தரமனமில்லை அவருக்கு.
இந்த நிலையில் டெல்லியில் வைத்து அவருக்கு திருவள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் வழங்கி கவுரவிக்க இருக்கிறார்களாம்
அது தொடர்பாக வைரத்தின் மக்கள் தொடர்பாளர் அனுப்பியிருக்கும் அறிக்கை இதோ;

புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்துக்குள் வரும் வியாழன் காலை திருவள்ளுவர் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் வெங்கைய நாயுடு, ஸ்மிருதி இரானி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சி தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

தமிழ்நாட்டில் இருந்து திருக்குறள் ஒப்புவிக்கும் போட்டியில் பரிசுபெற்ற 133 மாணவ மாணவிகள் அதில் கலந்துகொண்டு நாடாளுமன்ற வளாகத்துக்குள் திருக்குறள் ஓதுகிறார்கள்.

இந்த விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. மற்றும் கல்வியாளர் வா.செ.குழந்தைசாமி, பொன்னம்பல அடிகளார், தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், எழுத்தாளர் ஜோ.டி.குரூஸ் ஆகியோருக்கு திருவள்ளுவர் சிறப்பு விருது வழங்கப்படுகிறது.

திருக்குறள் ஒப்புவிக்கும் குழந்தைகள் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியோடு சிறப்புப் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்.

திருவள்ளுவரை இந்தியா முழுவதும் கொண்டு செல்லும் முயற்சி இது என்று விழாவை ஏற்பாடு செய்து வரும் தருண் விஜய் எம்.பி தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக 16ஆம் தேதி பிற்பகல் விமானத்தில் கவிஞர் வைரமுத்து புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.

0 comments:

Post a Comment