Sunday, December 13, 2015

4 குட்டிப் புலிகளுக்குப் பெயர் சூட்டிய ஜெயலலிதா

வெள்ள பாதிப்பு தொடர்பாக பல்வேறு தரப்பினரும் முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் வண்டலூர் உயிரியில் பூங்காவில் புதிதாகப் பிறந்த நான்கு புலிக் குட்டிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டியதாக செய்திக்குறிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை வெள்ளத்திற்கு அதிமுக அரசின் அலட்சியமே காரணம், செம்பரம்பாக்கம் ஏரியைத் திறப்பதில் தாமதம் செய்து விட்டனர், இதற்கு முதல்வர் ஜெயலலிதாதான் பொறுப்பு என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதாவோ அல்லது தமிழக அரசோ இதுவரை விளக்கம் தரவில்லை. இந்த நிலையில் வண்டலூர் பூங்காவில் பிறந்த நான்கு புலிக் குட்டிகளுக்கு ஜெயலலிதா பெயர் சூட்டியதாக செய்திக்குறிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வண்டலூர் அறிவிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அக்டோபர் 16ம் தேதி நம்ருதா என்ற வெள்ளைப் புலிக்கு 2 ஆண் குட்டிகளும், 2 பெண் குட்டிகளும் பிறந்தன. அவற்றுக்கு முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 13ம் தேதியன்று பெயர் சூட்டினார்.

ஆண் புலிகளுக்கு தேவா (DEVAA) என்றும் நகுலா (NAKULAA) என்றும் பெயர் சூட்டினார் ஜெயலலிதா. 2 பெண் புலிகளுக்கு கலா (KALAA) என்றும் மாலா (MAALAA) என்றும் அவர் சூட்டியதாக அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

0 comments:

Post a Comment