Sunday, December 13, 2015

கோவனுக்கு ஒரு நீதி! சிம்புவுக்கு ஒரு நீதியா?

நேற்றிலிருந்தே இந்தக் குரல் மிக வேகமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. ஏழைக்கு ஒரு நீதி, பணக்காரனுக்கு இன்னொரு நீதி என்பது நமது நாட்டில் சகஜமாக புழங்கி வரும் நிலையில், இப்படியெல்லாம் கேள்விகள் எழுவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லைதான்! சிம்புவும் கோவனும் ஒன்றல்ல. ஒருவர் இளைஞர்களை சீரழிக்கும் ‘போதை’ வேண்டாம் என்கிறார். இன்னொருவர் இளைஞர்களை சீரழிக்கும் பாதை வேண்டும் என்கிறார். ஆனால் நல்லதை சொன்ன கோவனுக்கு தேசிய பாதுகாப்பு பிரிவில் தண்டனை. சிம்புவுக்கு? அதற்காக சிம்புவை விட்டுவிட முடியாதே?

பொங்கி எழுந்திருக்கிறது பெண்கள் அமைப்பு. சிம்பு-அனிருத் மீது கோவை மாநகர காவல் துறை ஆய்வாளரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள் அவர்கள். சிம்பு அனிருத் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த பிரச்சனை இதோடு ஒழியப் போவதில்லை. சென்னை மதுரை சேலம் உள்ளிட்ட வேறு பல மாவட்டங்களிலும் பெண்கள் அமைப்பினர் பெரும் கோபத்தோடு கிளம்பி வருகிறார்கள்.

அனிருத் கனடாவில் இருக்கிறார். அவரை தொடர்பு கொள்வதில் சிக்கல் இருப்பதால் அவர் கருத்தை அறிய முடியவில்லை.

இதற்கிடையில் சிம்புவை எப்படியோ கஷ்டப்பட்டு போனில் தொடர்பு கொண்ட பத்திரிகையாளர்கள் சிலரிடம் அவர் சொன்ன பதில், மிக மிக நாராசமானது. “அந்த செல்போன் திருடு போயிருச்சு. அதுல இது மாதிரி இன்னும் 150 பாடல்கள் வச்சுருக்கேன். அதையெல்லாம் திருடுனவங்க எடுத்து யு ட்யூபில் வெளியிட்டா அதுக்கு நானா பொறுப்பு?’ என்கிறார்.

ஒரு பாட்டுக்கே உலகம் புரண்டுடுச்சு. இன்னும் 150 இருக்கா? இப்போதெல்லாம் சிம்பு நிறைய பேசுறாரு. பிறகு “நான் பேசல… அந்த சிவன்தான் என் மூலமா பேசுறான்”னு வேற சொல்றாரு.

சொக்கா… நீதான்பா இந்த பூமிய அருளணும்.

0 comments:

Post a Comment