Sunday, December 13, 2015

கமல்ஹாசனைக் காணவில்லை.. தாம்பரத்தை பரபரப்பாக்கிய போஸ்டர்

நடிகர் கமல்ஹாசனைக் காணவில்லை என்று தாம்பரம் பகுதிகளில் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டர்கள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன.

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்த நிலையில் மக்களின் வரிப்பணம் என்ன ஆனது? என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பி பேட்டி அளித்ததாக செய்திகள் வெளியாகின.

இதற்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கமல் கருத்து கந்தசாமி குழப்பவாதி என்ற ரீதியில் பதிலடி கொடுத்தார். இதைத் தொடர்ந்து கமல்ஹாசன் நான் அவ்வாறு கூறவில்லை என்று அறிக்கை வெளியிட நிலைமை கட்டுக்குள் வந்தது.

இந்நிலையில் தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நடிகர் கமல்ஹாசனைக் காணவில்லை என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கின்றன.

மேலும் இவரை பற்றி தகவல் தெரிந்தால், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கி இருக்கும் நிவாரண முகாம்களில் ஒப்படைக்கும்படி அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

0 comments:

Post a Comment