Saturday, December 5, 2015

அகதிகள் ஆகிவிட்டோம் ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை

மழை வெள்ளத்ததால் பாதிக்கப்பட்ட சென்னை சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு உதவும் வகையில் பல நடிகர், நடிகைகள் உதவிக்கரம் நீட்டி உள்ளனர்.

உறவினர்களுக்கு டுவிட்டர் மூலம் தகவல் பரிமாற்றம், உணவு சப்ளை, முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்கு உதவி போன்றவை அளித்துள்ளனர்.

அதேசமயம் பல நட்சத்திரங்களின் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.‘மக்கள் கொடுக்கும் வரிப்பணம் எங்கு போகிறது.

மழை வெள்ளத்தில் இந்த பாதிப்புக்கு காரணம் அரசு நிர்வாகம்தான்’ என கடுமையாக குற்றம் சாட்டி இருந்தார் கமல்ஹாசன்.

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வீடு கோடம்பாக்கம் பகுதியில் உள்ளது. அவரது வீடு மற்றும் ஒலிப்பதிவு ஸ்டுடியோவுக்குள் வெள்ளம் புகுந்தது. இதுகுறித்து அவர் கூறியது:

நண்பர்களும், நலம் விரும்பிகளும் கூறிய ஆறுதல் வார்த்தைக்கு நன்றி. சென்னை மற்றும் தமிழ்நாட்டின் மற்ற பகுதியில் உள்ளவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதை பார்ப்பதற்கு கஷ்டமாக உள்ளது.

நம்மில் பலர் தற்காலிக அகதிகள் ஆகி இருக்கிறோம். என்னுடைய குடும்பத்தினர் மற்றும் ஸ்டுடியோ டீம் ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஸ்டுடியோ மற்றும் வீட்டுக்குள் புகும் வெள்ள நீரை பம்ப் மூலம்

வெளியேற்றுகிறார்கள். முழுவதுமாகவே பாதிக்கப்பட்டிருக்கிறோம். சென்னையை மீண்டும் சரியான வகையில் புதுப்பித்து, எதிர்கால இயற்கை சீற்றங்களிலிருந்து பாதுகாக்கப்படுவோம் என நம்புகிறேன். கடவுள் நமக்கு எல்லா வகையிலும் இதனை எளிதாக செய்து முடிக்க உறுதுணையாக இருப்பார்.

0 comments:

Post a Comment