
பெயருக்குள் ஒரு காந்தம் இருக்கிறது என்றால், அந்த பெயர் கண்டிப்பாக ரஜினியாக தான் இருக்கும், 6லிருந்து 60வரை அனைவரையும் கவர்ந்து இழுக்கும் இந்த காந்தம், தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, வட இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான் வரை ரசிகர்களை ஈர்த்து வைத்துள்ளது.
‘நான் யானை இல்லை, விழுந்ததும் தாமதமாக எந்திரிக்க, குதிரை’ என்று கூறி சந்திரமுகியில் தன்னை பேசியவர்களுக்கு பதிலடி கொடுத்தார், அதேபோன்ற ஒரு கட்டத்தில் தான் தற்போதும் உள்ளார். மீண்டும் கபாலி மூலம் தான் குதிரை என்று நிரூபிக்க ஓட ஆரம்பித்துள்ளார்.
இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம் அமிதாப் பச்சனே ‘ரஜினியை யாராலும் எட்ட முடியாது, அவரை மிஞ்ச எவரும் இல்லை’ என குறிப்பிட்டு தன் பிறந்தநாள் வாழ்த்தை கூறியுள்ளார். சூப்பர் ஸ்டார் இன்று போல் என்றும் ஜொலிக்க பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
0 comments:
Post a Comment