
இந்நிலையில், இளையராஜாவுக்கு நடைபெற இருந்த அந்த பாராட்டு விழாவை கேன்சல் செய்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. மழை வெள்ளத்தின் பாதிப்பிலிருந்து சென்னை மக்கள் இன்னும் முழுமையாக விடுபடவில்லை. இந்தநிலையில் இளையராஜாவுக்கு இப்படி ஒரு பாராட்டு விழாவை நடத்தினால் மக்கள் கொந்தளித்துவிடுவார்கள் என்று சிலர் இயக்குநர் பாலாவிடம் சுட்டிக்காட்டியதாகவும், அதன் காரணமாக இளையராஜா பாராட்டுவிழாவை பாலா ரத்து செய்தார் என்றும் சொல்லப்படுகிறது.
இன்னொரு தரப்பினரோ வேறு ஒரு காரணத்தை சொல்கின்றனர். நேற்று ஒரு நிருபரிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட இளையராஜா மீது ஒட்டுமொத்த மீடியாக்களின் கோபமும் திரும்பி இருக்கிறது. இந்த சூழலில் அவருக்குப் பாராட்டுவிழா நடத்தினால் தாரை தப்பட்டை படத்தை ஊடகங்கள் கிழித்துவிடும் என்ற பயம் காரணமாகவே இளையராஜாவுக்கு பாராட்டுவிழா நடத்தும் எண்ணத்தை கைவிட்டாராம் பாலா.
0 comments:
Post a Comment