
மேலும் மழையின் காரணமாக தற்காலிகமாக தடைப்பட்டிருக்கும் ஏர்டெல் சேவைகளை சரி செய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதோடு இடைவிடாத மழை மற்றும் வெள்ளம் சேர்ந்து சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் முடக்கியிருப்பதால், ஏர்டெல் வாடிக்கையாளர்களின் நலன் கருதி இச்சலுகை அறிவிக்கப்பட்டிருப்பதாக ஏர்டெல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஏர்டெல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரூ.30 டாக்டைம் வரை பெற முடியும், மேலும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்குள் 10 நிமிடங்கள் வரை பேச இரு நாட்கள் வேலிடிட்டியும் வழங்கப்பட்டுள்ளது. இண்டர்நெட் சேவை துண்டிக்கப்படாமல் இருக்க இரு நாட்களுக்கு வேலிடிட்டியுடன் 50எம்பி இண்டர்நெட் வழங்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் போஸ்ட்பெய்டு கட்டணம் செலுத்தாத வாடிக்கையாளர்களுக்கு கடைசி தேதி நீட்டிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment