Wednesday, December 2, 2015

வெள்ளப்பாதிப்பால் தமிழக பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு இலவச தொலைப்பேசி சேவை

     வெள்ளப்பாதிப்பை அடுத்து தமிழக பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இலவசமாக இன்று முதல் ஒருவராத்திற்கு தொலைப்பேசி சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய தொலைத்தொடர்புதுறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.

சென்னையில் வரலாறு காணாத கனமழையால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர். செம்பரப்பாக்கம், புழல், பூண்டி, மதுராந்தகம் ஏரிகளில் இருந்து தொடர்ந்து பல ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

சென்னையில் கனமழையினால் தற்போது போக்குவரத்து, ரயில் சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம்  பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் கட்டணம் கட்டவில்லை என்பதால் தொடர்பு துண்டிக்கப்பட்டு இருக்குகம் தற்போது கனமழையின் காரணமாக தொடர்பு துண்டிக்கப்படாது என்றும் தமிழகத்தில் வெள்ளப்பாதிப்பை அடுத்து தமிழக பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இலவசமாக இன்று முதல் ஒருவரத்திற்கு தொலைப்பேசி சேவையை பயன்படுத்தலாம் என்றும் மத்திய தொலைத்தொடர்புதுறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.

மேலும், ஒருவரத்திற்கு பிஎஸ்என்எல் கைப்பேசி வாடிக்கையாளர்களும் கட்டணம் இல்லாமல் இலவசமாக தொடர்பு கொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment