Wednesday, December 2, 2015

மழை எச்சரிக்கை..!! ரமணன் ரகசியம் இது தானா..??

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்து நகரமே நீரில் தத்தளிக்கின்றது. மழை பாதிப்பில் தவிக்கும் மக்கள் ஒரு பக்கம், பள்ளி, கல்லூரி விடுமுறைகளை கொண்டாடும் மாணவர்கள் ஒரு பக்கம் என அனைவரும் தற்சமயம் ஆவலோடு காத்திருந்து, அவ்வப்போது பார்ப்பது செய்திகளை தான்.

இது வரை செய்திகளை பார்க்காதவரையும் கூட இந்த மழை ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்க வைத்திருக்கின்றது. ஊர் முழுக்க பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் மழை சார்ந்த அறிவிப்புகளை சென்னை வானிலை ஆய்வு மையம் செய்திகளின் வாயிலாக மக்களுக்கு அடிக்கடி அறிவித்து வருகின்றது.

வானிலை நிலவரங்கள் சார்ந்த அறிவிப்புகளை அறிவிக்கும் ரமணன் பள்ளி குழநை்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரின் தெய்மாக பார்க்கப்படுகின்றார் என்றே கூற வேண்டும். அப்படியாக வானிலை ஆய்வு மைய அதிகாரியான ரமணன் அறிக்கையின் படி மழை வெலுத்து வாங்கவது ஏன், ரமணன் எப்படி மழையை முன்கூட்டியே கணிக்கின்றார் என்பது தெரியுமா.

இந்தியாவில் வானிலை ஆய்வு மையமானது 1875 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது. துவக்கத்தில் கொல்கத்தாவில் இருந்த இதன் தலைமையகம் தற்சமயம் தில்லியில் இயங்கி வருகின்றது. இந்தியா முழுவதும் வானிலை சார்ந்த முன் அறிவிப்புகளை வழங்கி வரும் வானிலை மையமானது காலத்திற்கு ஏற்ப அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டு இதனை செயல்படுத்தி வருகின்றது.

அதன் படி சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் ரமணன் தமிழகத்தில் மழை சார்ந்த முன் அறிவிப்புகளை வழங்க பெரிதும் நம்புவதோடு, பயன்படுத்தியும் வரும் சில தொழில்நுட்பங்கள் சார்ந்த தகவல்களை தான் இங்கு தெரிந்து கொள்ள இருக்கின்றீர்கள்.

மூன்று அம்சங்கள்
பொதுவாக வானிலை மாற்றங்கள் சார்ந்த அறிவிப்புகள் மூன்று அம்சங்களை சார்ந்தே தீர்மாணிக்கப்படுகின்றன. மேற்பரப்பு, மேல் காற்று மற்றும் வெளியிடம் என மூன்றின் தன்மைகளில் ஏற்படும் மாற்றங்களை கொண்டே வானிலை சார்ந்த அறிவிப்புகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த அம்சங்களை கணிக்க வானிலை ஆய்வு மையமானது சில தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்துகின்றன.

மேற்பரப்பு நிலவரம்
மாக்சிமம் மற்றும் மினிமம் தெர்மோமீட்டர் (உஷ்ணமனி),
அனிமோமீட்டர் அல்லது வின்டு வேன்,
பல்பு தெர்மோமீட்டர்,
மழை தரமதிப்பு கருவி மற்றும் பாரோமீட்டர் போன்ற கருவிகளை வேற்பரப்பு நிலவரங்களை பதிவு செய்ய வானிலை ஆய்வு மையம் பயன்படுத்துகின்றது.

வெளியிட நிலவரம்


பொதுவாக வானிலை விண்கலங்கள் வெளியிட நிலவரங்களை பதிவு செய்கின்றன. இவை தரை மற்றும் வான்வெளி என இரு மட்டங்களிலும் வானிலை நிலவரங்களை பதிவு செய்கின்றன.

கருவிகள்


மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் கருவிகளை பயன்படுத்தி வாண்வெளியில் காற்றின் வெப்பநிலை, காற்றின் எடை, காற்றின் திசை உள்ளிட்டவைகளை பதிவு செய்து இவை வானிலை அறிவிப்புகள் வெளியிட பயன்படுத்தப்படுகின்றன. மேலும் எவ்வளது செ.மீ மழையின் பொழிந்துள்ளது என்ற அளவினை கணக்கிட ரெயின் காஜ் எனப்படும் மழை தரமதிப்பு கருவி பயன்படுத்தப்படுகின்றன.

வரைபடம்


வானிலை சார்ந்த பல்வேறு பதிவுகளை கொண்டு வரைபடம், விளக்கப்படம் போன்றவைகள் தயாரிக்கப்பட்டு அதன் பின் தான் வானிலை அறிவிப்புகளை ரமணன் நமக்கு வழங்குகின்றார்.

0 comments:

Post a Comment