Friday, December 11, 2015

’விஐபி= தங்கமகன்’...பத்து ஒற்றுமைகள்

தனுஷின் தங்கமகன் டிரெய்லர் நேற்று மாலை வெளியாகி இணையத்தில் அதற்குள் 6 லட்சத்தைக் கடந்து வைரலாகியுள்ளது. விஐபி2 என படக்குழு சொன்னாலும் சொன்னார்கள் படத்தின் டிரெய்லரிலேயே இரு படங்களுக்கும் இவ்வளவு ஒற்றுமைகளா என வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

இதோ அந்த ஒற்றுமைகள்...

1. படத்தின் கூட்டணியிலேயே ஏகபோக ஒற்றுமைகள் தனுஷ், அனிருத், வேல்ராஜ்.

2. டிரெய்லரின் ஆரம்பமாக தனுஷ் டயலாக்குகள் தான். அந்த டயலாக்குகளிலும் அங்கே அப்பாவான சமுத்திரக்கனியிடம் சண்டை போடுகிறார். இங்கே அப்பாவுக்கு கோவிலில் அர்ச்சனை செய்கிறார்.

3. இரண்டாவதாக அதில் அப்பா சமுத்திரகனி தனுஷை திட்டுகிறார். இங்கேயும் வெட்டியாக கோவிலுக்குச் செல்லும் தனுஷை அப்பாவான கே.எஸ்.ரவிகுமார் கேள்விகள் கேட்கிறார்.

4. இரண்டு படங்களிலுமே இரண்டு நாயகிகள். நால்வருக்குமே தனுஷுடன் முதல் படம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

5. அங்கேயும் வசனங்கள் பேசிவிட்டு ஸ்லோ மோஷனில் தனுஷ் திரும்ப வேல்ராஜ் பெயர் விழுகிறது. இங்கேயும் அதே பாணிதான்.

6. இங்கேயும் ஹீரோயின் அமலாபால் கிண்டலடிக்க தனுஷ் கட்டையைக் கொடுக்கிறார். அங்கேயும் எமி ஜாக்சனுடன் அதே பாணி சேட்டைகள் தொடர்கின்றன. .

7. அந்தப் படத்தின் டிரெய்லரிலும் சரி இந்தப் படத்தின் டிரெய்லரிலும் சரி வேறு ஆண் பாடகர்களுக்கு வாய்ப்பே இல்லை.போனால் போகட்டுமென அனிருத் தலா ஒரு பாடலைப் பாடியிருப்பார்.

8. இரண்டு படங்களிலுமே தனுஷுக்கு அப்பா, அம்மாவாக வரும் சமுத்திரக்கனி - சரண்யா, கே.எஸ்.ரவிகுமார் - ராதிகா இருவருமே முதல் முறையாக தனுஷுக்கு அப்பா - அம்மாவாக நடித்தவர்கள்.

9. இரண்டு டிரெய்லர்களும் கட்டக்கடைசியாக சொல்லும் பன்ச் ’என்னை யாராலும் அழிக்க முடியாது’ பாணி தான்.

10. இரண்டு படங்களின் டிரெய்லர்களும் தனுஷ் மாஸ் க்ளாஸ் வசனங்கள் பேசி முடிக்க டிரெய்லர் படக்கென முடியும்.

இப்படி பத்து அம்சமான நாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒற்றுமைகள் நம் கண்களுக்கு தென்பட்டன. உங்களுக்கு பாஸ்....

1 comments:

க கந்தசாமி said...

உஸ்ஸ்.. அப்பா.. இது தேவையா..?

Post a Comment