
இந்த ஆண்டு மழை வெள்ளத்தால் சென்னை நகருக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமானோர் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கிறார்கள். எனவே, இந்த ஆண்டு மார்கழி இசை விழா நடத்த வேண்டாம் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஒருசில பாடகர்கள் இந்த ஆண்டு பாட மாட்டோம் என்று அறிவித்து உள்ளனர். சில சபாக்கள் இந்த ஆண்டு மார்கழி இசை விழா நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளன.
இந்த நிலையில் நடிகரும் பாரத் கலாச்சார் அமைப்பின் செயலாளருமான ஒய்.ஜி. மகேந்திரன் கூறி இருப்பதாவது:–
'இந்த முறை இசை விழாவாக நடத்தவில்லை என்றாலும் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களிடம் இருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை சேர்த்து வெள்ள நிவாரண நிதியாக கொடுக்க முடிவு செய்திருக்கிறோம். இது தவிர ஜனவரி 20–ந்தேதி பாடகர் கே.ஜே.யேசுதாசின் சிறப்பு இசை கச்சேரி சென்னை வாணிமகால் ஆடிட்டோரியத்தில் நடைபெறுகிறது. இதில் வசூலாகும் தொகை வெள்ள நிவாரண நிதியாக வழங்கப்படும்'.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment