Sunday, December 6, 2015

மதத்தை மிஞ்சிய மனித நேயம்: இந்து கோயிலில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு முஸ்லீம் இளைஞர்கள் உதவி

 சென்னையில் வெள்ளத்தால் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து, உறவுகளை தொடர்பு கொள்ள முடியாத இந்த சூழ்நிலையில் சாதி, மதங்களையும் கடந்து மனிதர்கள் ஒன்றுபட்டு உதவிகளை செய்து வருகின்றனர்.



சென்னையில் பெய்த நூற்றாண்டு காணாத கன மழை காரணமாக நகரை முற்றிலும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அடையாறு, கூவம் ஆற்றங்கரையோர குடியிருப்புகளை வெள்ளம் அடித்துச்சென்றது. பல்வேறு பகுதிகளில் முதல் மாடி வரை மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்

நகரின் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள், அருகில் இருந்த இந்து கோவில், சமூக நலக்கூடங்கள், பள்ளிகள், மசூதிகள் உள்பட பல்வேறு இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். திருவல்லிக்கேணி பகுதியில் வெள்ள நீர் குடியிருப்புக்குள் புகுந்ததால், சென்னை பார்த்தசாரதி கோயிலில் பலர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

பார்த்த சாரதி கோயிலுக்குள் தஞ்சம் அடைந்துள் மக்களுக்கு அந்த பகுதியைச் சேர்ந்த முஸ்லீம் இளைஞர்கள் குழுவாக இணைந்து, இன்று உணவு பொட்டலங்களை வழங்கினர். மேலும், மசூதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை முஸ்லீம் இளைஞர்கள் செய்துவருகின்றனர்.

சென்னையில் மழை, வெள்ளத்தால் வீடுகளை இழந்து, உறவுகளை தொடர்பு கொள்ள முடியாத இந்த சூழ்நிலையில் சாதி, மதங்களையும் கடந்து மனிதர்கள் ஒன்றுபட்டு உதவிகளை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

Post a Comment