Monday, December 14, 2015

ரவுடியிடம் ஏமாந்த ஹீரோ!

நாமக்கட்டி சாத்துறதுல பேர் போன ஊர் எதுவோ? ஆனால் நெத்தியில புள்ளி வச்சு, புத்தியில கொள்ளி வைக்கிற இடம்தான் நம்ம கனவுத் தொழிற்சாலை இயங்குகிற கோடம்பாக்கம். ‘நானெல்லாம் பத்து ஊர் பஞ்சாயத்தை ஒத்தையா நின்னு சமாளிச்சவன்’னு மார்தட்டி வந்தவங்களையெல்லாம் கூட, மாருவலி வந்து படுக்க வைச்ச கடோத்கஜன்கள், இங்க தெருவுக்கு 100 பேரு இருக்கா(னு)ங்க.

இங்கதான் கனவுக்கு தீனி போடுறேன்னு கிளம்பி வந்து அது முடியாம வயித்துக்கு பட்டினி போட்டுகிட்டிருக்கிற ஆயிரக்கணக்கான ஆர்வ கோளாறுகளை பார்க்க முடியும். இதுல ஏமாந்தவன் பாதி பேரு. புத்தி தெளிஞ்சவன் மீதி பேருன்னு வரலாறு சுமக்குது வடபழனி ஏரியா. தனியா வர்றவன் கண்ணுல தெரியுற ஆர்வத்தை அப்படியே உள்வாங்கி கறவை மாட்டு காம்புலேர்ந்து பால் கறக்கிற ஆசையோடு நெருங்கி, பையில இருக்கறது கொஞ்சம், கை கால்ல மினுக்கறது கொஞ்சம்னு அடிச்சுகிட்டு கிளம்புறவங்களும் இருக்கா(னு)ங்க.

வடபழனியில் இயங்கி வரும் ஒரு தனியார் நடிப்பு கல்லூரி வாசலில் ஒரு அறிவிப்பு பலகை இருந்தது. அதில், ‘இங்கு படிக்க வரும் மாணவர்கள் முன் பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேச்சு கொடுக்க வேண்டாம். யாரையும் நம்பி பணமோ பொருளோ கொடுத்து ஏமாற வேண்டாம்’ என்று எழுதப்பட்டிருந்தது. கொஞ்சம் கீறினால் ஒவ்வொருவர் வாயிலிருந்தும் ரத்தமாக கொட்டும் போல தெரிந்தது.

அங்கு ஏமாந்தவர்களை போல, நமக்கு தெரிந்த ஒரு ஹீரோ, டெல்டா மாவட்டத்தை சேர்ந்த ஒரு ரவுடியிடம் பணம் கொடுத்து பரிதவித்த கதைதான் இப்போது நாம் சொல்லப் போவது. இவர் நடித்த முதல் படம் பிளாப். ஆள் மூக்கும் முழியுமாக இருந்தாலும், முதல் படம் பிளாப் என்றால் அடுத்த படத்தை பிடிப்பதற்குள்தான் ஆவி போய் விடுமே? எப்படியோ போராடி ஒரு படத்தில் நடித்துவிட்டார். அந்த இரண்டாவது படமும் கடந்த வாரம்தான் ரிலீஸ் ஆனது. எழுபத்தைந்து பெரியவர் தன் லவ்வரை தேடி அலையும் கதை அது. அதில் வரும் சின்ன வயசு பெரியவர்தான் இந்த எபிசோடின் ஹீரோ.

கைவசம் இப்போது இரண்டு படங்கள் இருந்தாலும், தன் முதல் பட அனுபவத்தை அவரால் இப்போதும் கதற கதற ஒப்பிக்க முடியும். ஏனென்றால், ரிலீஸ் ஆன முதல் படத்திற்கு முன் அவர் கமிட் ஆன, முதல் படம் ஒரு ஏமாற்று நாடகம் மட்டுமல்ல, கண்ணோரத்தில் வழியும் சுடு கஞ்சியும் கூட!

நம்ம ஹீரோவுக்கு சொந்த ஊர் மதுரை. நல்ல சிவப்பு. முக லட்சணம். என்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கும் போதே, ‘பேசாம சினிமாவுல நடிடா ’ என்று நாடி நரம்பை உசுப்பிவிட்டார்கள் நண்பர்கள். இருந்தாலும் படிப்பு முடிந்ததும் குடும்ப சூழ்நிலை கருதி பெங்களுருவுக்கு வேலைக்கு போனார் தம்பி. போன இடத்திலும் சும்மா விட்டார்களா? டீக்குடிக்க போன இடத்தில் கூட, ‘சாரு ஆக்டருங்களா?’ என்று கேட்டு மனசுக்குள் மைனாவை கூவ விட்டார்கள். நெசமாவே நாம ஹீரோதானோ? என்றெல்லாம் அடிமனசில் ஆலங்குயில் பாட,. ஒரு சுபயோக சுபதினத்தில் தன் வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு ரயிலேறினார் ஹீரோ.

பருந்து கண்ணில் சிக்கிய எலிக்குஞ்சு மாதிரி வந்த வேகத்திலேயே ஒருவரிடம் சிக்கினார். அவர்தான் அந்த டெல்டா மாவட்டத்தின் முக்கிய தாதா.. சில முறை குண்டர் சட்டத்தில் உள்ளேயும் போயிருக்கிறார். கழுத்து நிறைய பளபள சங்கிலிகள், பருத்த உருவம். இடுப்பு வேட்டியில் துருத்திக் கொண்டிருக்கும் துப்பாக்கி. பென்ஸ் கார், ஆள் அம்பு படை பரிவாரம் என்று அவரை பார்க்கும் போதே ‘அண்ணேய்…’ என்று நமஸ்காரம் போட்டு அந்த பருத்த சமஸ்தானத்தை மண்டியிட்டு விடுவார்கள். மாயா மாயா… எல்லாம் மாயா என்பது புரியாத நம்ம ஹீரோ எப்படியோ யார் மூலமாகவே இவரிடம் சிக்கினார்.

தம்பி… எனக்கு சினிமா எடுக்கணும்ங்கறது ஆசையில்ல. நமக்கு ரெண்டு என்ஜினியரிங் காலேஜ் இருக்கு. லோக்கல்ல நல்ல செல்வாக்கு இருக்கு. முன்னாள் ஜனாதிபதி மிஸ்டர் வி எனக்கு நல்ல நெருக்கம். அவர் சிபாரிசுல எப்படியும் எம்.பிஆகிடுவேன். இவ்ளோ செல்வாக்கா இருந்துட்டு ஒரு படம் கூட எடுக்கலேன்னா எப்படின்னு வீட்ல சொல்லிகிட்டேயிருக்காங்க. அதுக்காகதான் எடுக்கிறேன். இன்னொன்னு… நாம எப்ப பி.ஜி.எம் சரவணன் ஆகுறது?’ என்று கேட்டு உடம்பென்கிற இரும்பு லாரி மீது ஒராயிரம் வாட்ஸ் கரண்ட் கம்பி விழுந்த மாதிரி குலுங்கி குலுங்கி சிரித்தார். ‘தம்பி… ஆனா ஒரு கண்டிஷன். நான் முதல்ல பணம் போடவே மாட்டேன். ஏன்னா என்னோட சென்ட்டிமென்ட் அப்படி’.

‘எந்த தொழில் செஞ்சாலும் ஒரு சின்ன தொகையை வேறொருத்தரிடம் வாங்கிதான் முதல் செலவா செய்வேன். அப்புறம் அந்த தொழிலை வேகமா கொண்டு போய் ஏணியில ஏத்தி வைக்க எத்தனை கோடி ஆனாலும் அதுக்கு அஞ்சுறவன் நான் இல்ல. காலேஜ் ஆரம்பிச்சவும் அப்படிதான். பேக்டரி ஆரம்பிச்சவும் அப்படிதான்னு சொல்லிக் கொண்டே போக, எவ்ளோ கேட்டாலும் கடன் வாங்கியாவது கொடுத்துரணும் என்கிற உறுதியை அந்த ஸ்பாட்டிலேயே எடுத்துக் கொண்டார் ஹீரோ. ‘முதல்ல ஆகுற சின்ன சின்ன செலவு… அதாவது தயாரிப்பாளர் சங்கத்துல மெம்பர் ஆகுறதுக்கு சில லட்சங்கள், அழைப்பிதழ் செலவு, தனியா சினிமா ஆபிஸ் போடுற அட்வான்சுன்னு ஏழு லட்சத்தை எடுத்துகிட்டு வந்துரு. பதினைஞ்சு நாள் டைம் தர்றேன். நடுவுல எவனாவது நல்ல முகவெட்டோட வந்தா… தம்பி கோவிச்சுக்கக் கூடாது’ என்று செக் வைத்து அனுப்பினார் தாதா.

அவசரம் அவசரமாக ஊருக்கு ஓடிய ஹீரோ, நண்பர்கள் உறவினர்கள்னு கையேந்தி, தனது சேமிப்பையும் துடைத்துக் கொண்டு வந்தார். ஏழு லட்சம் ரெடி. சுட சுட பணம் கைமாறியது. அடுத்த வாரம் எல்லாம் ரெடியா இருக்கும். ஷுட்டிங் போயிரலாம் என்று கூறிய தாதா, சிரித்த முகத்தோடு இவரையும் இவரால் அழைத்துவரப்பட்ட இயக்குனரையும் வழியனுப்பி வைக்க, ஆட்டுக்காலும் நாமதான். சூப்பும் நாமதான் என்பதே புரியாமல் அறைக்கு திரும்பினார் ஹீரோ.

அடுத்த வாரம்… அதற்கடுத்த வாரம் ஆனது. அதற்கப்புறம் மாதங்கள் ஆனது. பிறகு மாயாவை ரீச் பண்ணவே முடியவில்லை நம்ம ஹீரோவால். பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு டெல்டா மாவட்டத்துக்கே போய் இறங்கி அவரது வீட்டை விசாரித்து சிங்கத்தின் குகைக்கே போய்விட்டார்.

‘அண்ணன் வந்துருவாரு. உட்காருங்க’ என்றார்கள் அல்லக்கைகள். காலையிலிருந்து இரவு வரை காத்திருந்த ஹீரோவுக்கு நள்ளிரவில்தான் சாமி தரிசனம் கிடைத்தது. ‘அடடா… தம்பியா? கொஞ்சம் பிசியாயிட்டேன். சாப்பிட்டியா? டேய்… சாப்பாடு வாங்கிக் கொடுத்தீங்களாடா ?’ என்றெல்லாம் அன்பொழுகி, ‘ரெண்டு நாள்ல அண்ணன் சென்னைக்கு வர்றேன். டைரக்டரையும் வெயிட் பண்ண சொல்லு’ என்று அன்றிரவே பஸ் ஏற விட்டார் மாயாவி. சுமார் ஆறு மாதங்கள்… ஏதேதோ சால்ஜாப்புகள், காரணங்கள், ஒரு சந்தர்ப்பத்தில் நம்ம வாயில எலித்தின்ன மசால் வடைதான் என்பதை புரிந்து கொண்டார் ஹீரோ.

குண்டர் சட்டத்துல உள்ளே போனவர் என்கிற தகவல்கள் எல்லாம் அதற்கப்புறம்தான் தெரியவந்தது அவருக்கு. மோதி பிரயோஜனம் இல்லை. இனி சாதுர்யம்தான் முக்கியம் என்பதும் புரிந்தது. சினிமா வாய்ப்பு கேட்டு அலைவது போச்சு. பெங்களூர்ல வேலையும் போச்சு. கடன் கொடுத்தவர்கள் கழூத்தை நெரிக்க, மீண்டும் மதுரைக்கு கிளம்பினார். அதுவும் ஒரு தீர்மானத்துடன். தன் நண்பர்கள் அனைவரையும் வரவழைத்து நடந்ததை சொன்னார். ‘எப்படியாவது அவனை வெட்டிப்போடணும். இல்லேன்னா பணத்தோட வீட்டுக்கு போகணும். இரண்டே முடிவுதாண்டா’ என்றார் நண்பர்களிடம். பேசி பேசி இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தது நண்பர் கூட்டம்.

பிரமுகரை கடத்தி மதுரைக்கு கொண்டு வந்துவிடுவது. இதுதான் திட்டம். நைசாக தன் நண்பனை டெல்டா மாவட்டத்துக்கு அனுப்பினார் ஹீரோ. அவனும் சாமர்த்தியமாக மாயாவியிடம் கார் டிரைவராக வேலைக்கு சேர்ந்தான். சந்தேகம் வராதபடி மூன்று மாதம் ஓடியது. ஆனால் ஒவ்வொரு நாளும் செல்போனில் தகவல் பரிமாறிக் கொண்டார்கள். ஒரு முறை தஞ்சாவூருக்கு கிளம்பினார் மாயாவி. அதுவும் ஆள் அம்பு படை பரிவாரம் இல்லாமல். டிரைவர் நம்ம ஹீரோவோட ஃபிரண்டு எல்லா தகவலும் உடனுக்குடன் பரிமாறப்பட்டது. அங்கு வைத்து மடக்குவது என்று நண்பர்கள் உடடினயாக தீர்மானிக்க, மதுரையிலிருந்து ஒரு காரில் கிளம்பினார்கள் தஞ்சைக்கு.

குறிப்பிட்ட இடத்தில் வண்டியை நிறுத்த சொல்லி முதல் நாளே சமிக்ஞை அனுப்பியிருந்தார் ஹீரோ. எல்லாம் சரியாக நடக்க, சினிமாவில் வருவது போலவே அண்ணனை பென்ஸ் காரில் வைத்து மடக்கியது நண்பர் கூட்டம். இடுப்பு துப்பாக்கிக்கெல்லாம் ஒரு வேலையுமில்லை. பொத்தேர் பொத்தேர் என்று விழுந்த அடியில், ‘டேய்… பணம்தானடா வேணும். ஆள விடுங்கடா’ என்று கதறவே ஆரம்பித்துவிட்டார் மாயாவி.

அதற்கப்புறம் மதுரையில் வைத்து லாக் பண்ணிய நண்பர் கூட்டம், ‘யாராவது பணத்தை கொண்டு வந்து கொடுத்துட்டு உன்னை மீட்டுட்டு போ சொல்லு’ என்றது. எப்படியோ பேசி கடைசியில் ஆறு லட்சம் பணத்தை கொடுத்துவிட்டு சிறை மீண்டது (அ)சிங்கம்.

ஒரு லட்சம் லாஸ். போனா போவட்டும்… நல்ல அனுபவம் கிடைச்சது. அதற்கப்புறம் பேராடி போராடி வாய்ப்பு வாங்கிதான் முதல் படத்தில் நடிச்சேன். பத்து பைசா செலவில்ல. என்னோட முதல் படத்தை அவன் பார்த்தானான்னு தெரியல. அந்த நேரத்துல எந்த ஜெயில்ல களி தின்னுகிட்டு இருந்தானோ? ஒழியட்டும்… ஆனால் குண்டா கழுத்துநிறைய சங்கிலி போட்டுகிட்டு இடுப்புல ஃபிக்ஸ் பண்ணிய சலவை வேட்டியோட எவனையாவது பார்த்தா ஓங்கி அடிக்கணும் போல இருக்கு . அதுக்கு முதல்ல ஒரு நல்ல டாக்டரிடம் வைத்தியம் பார்க்கணும் என்று சிரியாய் சிரிக்கிறார் ஹீரோ.

கோடம்பாக்கத்தில் இதுபோன்ற பொன்னிற பணியாரங்களை கொத்தி கடிப்பதற்கென்றே கருநிற ஓநாய்கள் திரிந்து கொண்டிருக்கின்றன. புத்தியுள்ளவர்கள் பிழைக்கக்கடவது…!நாமக்கட்டி சாத்துறதுல பேர் போன ஊர் எதுவோ? ஆனால் நெத்தியில புள்ளி வச்சு, புத்தியில கொள்ளி வைக்கிற இடம்தான் நம்ம கனவுத் தொழிற்சாலை இயங்குகிற கோடம்பாக்கம். ‘நானெல்லாம் பத்து ஊர் பஞ்சாயத்தை ஒத்தையா நின்னு சமாளிச்சவன்’னு மார்தட்டி வந்தவங்களையெல்லாம் கூட, மாருவலி வந்து படுக்க வைச்ச கடோத்கஜன்கள், இங்க தெருவுக்கு 100 பேரு இருக்கா(னு)ங்க.

கோடம்பாக்கத்தில் இதுபோன்ற பொன்னிற பணியாரங்களை கொத்தி கடிப்பதற்கென்றே கருநிற ஓநாய்கள் திரிந்து கொண்டிருக்கின்றன. புத்தியுள்ளவர்கள் பிழைக்கக்கடவது…!

0 comments:

Post a Comment