Tuesday, December 8, 2015

சென்னையில் இப்போ ஆபீஸ் போறவங்க நிலைமையை படிக்காதவன் படத்திலேயே பாடிய சிவாஜி..!

ஒரு வாரமாக ஆபீசுக்கு செல்லாத சென்னைவாசிகள், வெள்ளம் வடியத் தொடங்கிய நிலையில் நேற்றுமுதல் அலுவலகம் செல்ல தொடங்கியுள்ளனர்.

மழையால் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. எப்போது மழை பெய்யும், எப்போது ஏரிகள் திறந்துவிடப்பட்டு தண்ணீர் ரோட்டில் சுனாமி போல பாய்ந்தோடி வரும் என்பதெல்லாம் தெரியாமல், உயிரை கையில் பிடித்தபடி வாகனங்களில் பணிகளை கவனிக்க பறந்துகொண்டுள்ளனர் சென்னைட்டிஸ்.

இந்த ரணகளத்துக்கு நடுவேயும், அவர்களை கிளுகிளுப்பூட்டும் வகையில், வாட்ஸ்அப்பில் ஒரு ஆடியோ வலம் வருகிறது.

இன்னிக்கு சென்னையில், ஆபீஸ் போற எல்லோருக்கும் என்று ஒரு குரல் ஒலிக்கிறது, அதைத் தொடர்ந்து, சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் நடித்த படிக்காதவன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரி ஒன்று ஒலிக்கிறது.

ஒரு கூட்டு கிளியாக... என தொடங்கும், அந்த பாடலின் நடுவில் வரும் வரி இதுதான், "செல்லும் வழி எங்கெங்கும் பள்ளம் வரலாம், உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம். நேர்மை அது மாறாமல், தர்மம் அதை மீறாமல், நாளும் நடைபோடுங்கள், ஞானம் பெறலாம்".

கவிஞர் வைரமுத்து எழுதிய இப்பாடலை, சிவாஜி கணேசன் கதாப்பாத்திரம் பாடுவது போல காட்சியமைப்பு இருக்கும். இந்த பாடலை வாட்ஸ்சப்பில் கேட்டதும், தங்கள் நிலைமையை அப்போதே சிவாஜி கணேசன் பாடிவிட்டாரே என்று நினைத்து, துன்பத்திற்கு நடுவேயும், விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.

0 comments:

Post a Comment