Monday, December 21, 2015

ஏமி ஜாக்சனுக்கு எதிராக மீசை முறுக்கிய வைரமுத்து

 தமிழர்களின் கலை என்ன, பாரம்பரியம் என்ன என்பது தெரியாத ஏமி ஜாக்சன் போன்ற ஃபேண்டஸி பாவைகள், ஜல்லிக்கட்டு கூடாது என்று பரப்புரை செய்து வருகிறார்கள். அந்த ஃபேண்டஸி பாவைகளுக்கு தன்னுடைய தமிழால் பதிலடி தந்துள்ளார் வைரமுத்து.

மணப்பாறையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர், பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,

"மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு என்பதெல்லாம் பிற்காலச் சொல். ஏர்தழுவுதல் என்பது தான் தமிழ். இந்த வீர விளையாட்டுக்கு வழங்கிய பழம் பெயர். ஏறு என்பது அங்கே தழுவப்படுகின்றது. தழுவப்படுகின்ற போது ஏறுகள் காயப்படுத்தப்படுவதில்லை.

தழுவுதல் என்ற சொல்லே மென்மையானது அது விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கின்ற விளையாட்டு அல்ல. விலங்குகளை பெருமைபடுத்துகின்ற விளையாட்டு. தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்கள் அழிந்து விடக்கூடாது.

தமிழர்களின் வீரவிளையாட்டின் பாரம்பரியத்தை கருதி மீண்டும் ஏர்தழுவுதலுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். அலங்காநல்லூரில் இந்த ஆண்டு ஏர்தழுவுதல் நடைபெற வேண்டும் என்பது தமிழர்களின் ஒட்டுமொத்த கோரிக்கை. நிகழும் என்று நம்புகிறோம். நிகழ வேண்டும் என்று விரும்புகிறோம்" என்றார்.

0 comments:

Post a Comment