நட்சத்திர பலன்கள் 2016
வாக்கு
ஸ்தானத்தில் சனி சப்பணமிட்டு அமர்ந்திருப்பதால் பேச வேண்டிய எதையும்
கடிதம் வாயிலாகவோ, மெயிலாகவோ, நேரிடையாகவோ, அல்லது பக்கத்துவீட்டுக்காரர்
மூலமாகவோ கூட பேசாமலிருப்பது நல்லது. பின்பு அது பேட்டியாக வந்துவிட்டதே
என்று புலம்புவதை கணிசமாக குறைக்கும். நீண்ட வருஷங்களாக பரணில் போட்டு
வைத்த பழசு பட்டுகளுக்கு திடீர் மரியாதை கிடைக்கும். வீட்டில் ஏற்பட்ட
மின்சாரக் கோளாறு, வாசலில் தேங்கியிருந்த குப்பை கூளங்கள் அகலவில்லையே
என்று கடந்த வருஷத்தில் நீங்கள் பட்ட கவலை ராசிநாதனின் அமைதி காரணமாக மெல்ல
மெல்ல மறையும். பவுர்ணமி நாட்களில் தொடர்ந்து சந்திரனை வழிபட்டால்,
நீங்கள் பேசுவதை நீங்களே புரிந்து கொள்கிற அளவுக்கு வாக்கில் நலம் கூடும்!
ராசி நிறம் கருப்பு. திசை- ஈரோடு
0 comments:
Post a Comment